Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

CAUTION: You have 2 audio clues to listen today.

நேற்றைய புதிரைப் பற்றிய கேள்விக்கு உங்களின் கருத்துக்களை ஆழமாக பதித்த அனைவருக்கும் முதற்கண் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். கண்டிப்பாக, இசைஞானியின் பாடல்களுக்கு புதிர் நடத்த இருப்பவர்களுக்கு, அது உதவும். மிக்க நன்றி.


நம் புதிரில் இன்றுடன் இறுதி மாதம் தொடங்குகிறது. இனியும், எண்ணி வைத்து சரியாக 30 நாட்கள் தான் இருக்கின்றன. இந்தத் தருணத்தில், அருமை நண்பர் சொக்கன் விருத்தப்பா ஒன்றை எழுதி அசத்திவிட்டார். படிக்க படிக்க, ஆர்வம் பற்றிக்கொண்டு வருகிறது. நுணுக்கமாக எழுதியுள்ள வரிகளில், எளிமையும், குறும்பும், அன்பும், அனுபவித்து அவர் எழுதி இருக்கும் ஆன்மாவும் துல்லியமாகத் தெரிகிறது. மிக்க நன்றி சொக்கன்.

மின்சாரத் துறையில் நான் பணி புரிவதாலோ என்னவோ,

தினமும் மாலை 4:30க்கு அவர் புதிரைக் கேட்டுப் பதில் போட்டபின் ஒரு நிம்மதி வரும் பாருங்கள், அதைமட்டும் பேட்டரியில் பிடிக்கமுடிந்தால், மொத்த இந்தியாவுக்கும் மின்சாரம் தந்துவிடலாம்

http://6seer.wordpress.com/2013/06/27/047/

என்று முடித்திருக்கிறார். இவருக்கு இருக்கும் குசும்பை என்னவென்று சொல்வது 🙂 Brilliant 🙂


வெள்ளி என்றாலே குஜால் மூடில் எல்லாரும் துள்ளித் திரியும் பறவைகளாக இருப்பீர்கள். மேலும், நேற்றைய க்ளூவில் நிறையவே கடுப்பாகி இருப்பீர்கள். அதனால், இன்று ஒரு சுகமான breather. சரியா? 🙂

சமீபத்தில் நான் இந்தப் புகைப்படத்தைப் பார்த்தேன். பார்த்த உடனேயே எனக்குத் தோன்றிய முதல் பாடல் இது தான்.

ilaiyaraaja-bw-veena

இன்றைய பாட்டு எனக்கு மிக, மிக, மிக பிடித்த பாடல்களில் top வரிசையில் உள்ள பாட்டு. இசைஞானியின் இசை, கங்கை அமரனின் பாடல் வரிகள் (இப்படி எல்லாம் எழுதக் கூடியவரா கங்கை அமரன் என்பவர்கள், சற்று கவனித்து கேட்டு அனுபவிக்க வேண்டிய அட்டகாசமான பாடல் வரிகள்), அப்புறம் இதைப் பாடியவரின் one of the BEST songs ever in Tamil Film Music என்ற காரணத்தால், இந்தப் பாட்டு எனக்கு உயிர் 🙂

Gangai Amaran

மேலும், சிறு வயதில் அகில இந்திய வானொலியில் அடிக்கடி ஒலித்த பாடல் இது. இன்றளவும் இந்தப் பாடலை கேட்கும்போது, பள்ளிக்கு பிடிக்காமல் பேருந்தில் சென்றபோது, பேக்கரி, பஸ், வீடுகள், தெருக்களில் இந்தப் பாட்டு வானொலியில் இருந்து ஒலித்த நினைவலைகள் தான் பின்னுக்கு நோக்கி இழுக்கிறது. சிறு வயது என்றாலும், இந்தப் பாடலின் தாக்கம், இன்றளவும் இருக்க,இந்தப் பாடலின் உள்ளே ஏதோ ஒன்று சத்தியமாக இருக்கிறது 🙂

பெண்ணின் ஏக்கத்தை பிரதிபலித்த பல பாடல்களை இசைஞானி அள்ளித் தந்திருக்கிறார் என்று நிறைய தடவை பார்த்து பூரித்து போய் இருக்கிறோம்.

இன்றும் அதே தான் நிலைமை…..with a small twist though 🙂

கள்ளத்தனம் புரிய மனம் திண்டாடுகிறது..அலைபாய்கிறது. தவறை துணிந்து செய்துவிடு என்று இவளின் உள் மனசு தூண்டுகிறது. பஞ்சும் நெருப்பும் அருகில் இருந்தால் சிக்கென்று பற்றிக்கொள்வது போல, இவளின் காமத்தால் கொளுந்து விட்டு எரியும் நெருப்பிற்கு மிக அருகாமையில் அவளின் கள்ளக் காதலன் இருக்கிறான். கணவனோ, பரிதாபமாக எங்கோ இருக்கிறான்.

இது தாங்க situation.

எப்படி பாடலை போடலாம்? மென்மையையும் காட்ட வேண்டும். அதே சமயத்தில் தகாத உறவின் வலியையும், அந்த மனப்போராட்டத்தையும் ஒரு thrillerஆக கொண்டு வர வேண்டும். எப்படி காட்ட முடியும்?

பாவம். கொடூரன் என்றும் அவனை சித்தரிக்க முடியாது. காத்துள்ள போதே தூத்திக்கோன்னு சொல்லியே வளத்திருப்பாங்க போலிருக்கு. அன்பு நிறை காதலி என்றும் அவளை சித்தரிக்க முடியாது.

ஆசை இருக்கு. ஆனால் அது தவறான ஆசை. How can Maestro Ilaiyaraaja balance the Testosterone and Oxytocin that are gushing in this sequence? 😉

This is where, Maestro Ilaiyaraaja is dangerously seeking help from a very rare Raaga (I am told). மதுவந்தி ராகத்தைத் தேடி செல்கிறார். No, no, no. Let me rephrase it. He summons and musters Madhuvanthi Raaga. இவர் ராகத்தை தேடி செல்ல வேண்டிய அவசியமே இல்லை. அவர் சொல்வது போல (in this aspect, I have said many times before, Maestro Ilaiyaraaja reminds me of mathematical genius Ramanujan), எல்லாம் தானா வருது! 🙂

மதுவந்தி ராகம் தேனைப் போன்றதாம். தெரிஞ்சவங்க சொல்றாங்க. மதுவந்தி தேனைப் போன்றதா என்று எனக்குத் தெரியாது. ஆனா, இந்தப் பாட்டு தேன் தான்.

விரசமாகவும் இருக்கக்கூடாது, சரசமும் சகதியாக ஓடக்கூடாது. இந்தக் காதலில் காமம் தான் இருக்கிறதே தவிர, காதல் இல்லை. உடலின் சூடும், ஹார்மோன்களின் ஆதிக்கமும் பரவச நிலைக்கு அழைத்துச் செல்லும் அந்த சஸ்பென்ஸ் உணர்ச்சியை, ஒரு வித eeriness உடன் சொல்லவும் கொஞ்சம் நஞ்சம் அல்ல, செமத்தியாக மெனக்கெட்டிருப்பார் போலும். அதனால் நமக்கு கிடைத்ததோ, காலம் முழுக்க கேட்டு ரசிக்க என்று ஒரு அற்புத பாடல்.

பாருங்கள், இங்கு வீணையும், புல்லாங்குழலும், சந்தூரும் எப்படி பரதம் ஆடுகிறது என்று.

ஒன்றை நன்றாக கவினித்தீர்களா? நான் சொல்லாத, ஆனால் இசைஞானி இளையராஜாவின் பாடல்களில் ஊற்றாகவும், நாடித்துடிப்பாகவும் இருக்கும் bass guitar அத்துணை அழகாக ஒளிந்து, ஜொலித்து வருகிறது. கவனித்தீர்களா? இல்லை என்றால், மீண்டும் இசைத்துப் பாருங்கள். Just replay it with a sub-woofer and you can clearly see the bass-guitar he uses to add more eeriness to the scene.

இரண்டாவது துணுக்காக நான் காட்ட இருப்பது, அந்தக் காலத்தில் எப்படி ரோமியோஸ் carry போட்டார்கள் என்று. 🙂 Cellphone இல்லை; Coffee Cafe a day இல்லை; OCR இல்லை, OMR இல்லை (சென்னை வாசிகளே, உங்களுக்காக, உங்கள் ஊரின் பெருமைமிகு அடையாளங்களை சொல்லியாச்சு ;)). இவளை வசியம் செய்ய, இவன் தான் எத்துணை சுலபமாக அமெரிக்கர்கள் if you don’t mind என்று சொல்லுவது போல, அந்தக் காலத்துலேயே எவ்வளவு அழகாக carry போடுகிறான். அடடா…இது ஒலிப்பேழையில் இல்லை. படத்தில் உண்டு. ஆகையால், நான் திரைப்படத்தின் துணுக்கில் இருந்து இன்றைய க்ளூக்களை encode செய்தேன். குழம்பவேண்டாம்.

அன்றில் இருந்து, இன்று வரை ரோமியோக்களின் favorite carry-dialogue, உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா… ;))

என்னத்த சொல்ல…

உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா.. நான் அதை இங்க play பண்ணட்டுமா? 😉 களவாணிப்பய, ஒரு முறை இல்ல, இரு முறை சொல்லியே கவிழ்க்கின்றான். அதனை வெளிப்படுத்த தான் இசைஞானி எவ்வளவு அருமையாக இசைத்திருக்கிறார் பாருங்கள் 🙂

All I can say is just one thing: We can all do Ph.Ds on just this one song alone. One of the probably BEST songs. It is a tightrope walk. Very risky. Yet, see, how he emerges with so much of serenity and purity of handling a situation that is filled with societal filth and promiscuity. Our Maestro alone can dare touch these spots.

வேறு என்ன சொல்ல? 🙂

நன்றி.

Have a nice weekend.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Extensively noise-removed from the original video track. Noise-gate applied. No change in tempo. No censoring of any clip.


Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This was 100th movie for a thespian actor.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Ennulle (என்னுள்ளே) from Rosaapoo Ravikkaikkaari (ரோசாப்பூ ரவிக்கைக்காரி) (1979)

Advertisements