Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

Caution: Today, you have 3 audio clues.

நேற்று offbeat songஆக நம்ம மலேசியா அண்ணெனின் அட்டகாசமான பாடல் வந்தது.

அவருக்கு ஒரு மரியாதை கொடுத்த மாதிரி, இன்னொரு அட்டகாசமான, ஆர்ப்பாட்டமான, ஜாலியான பாடல் – அதுவும், ஒரு சூப்பர் பாடகியின் offbeat voiceல் கேட்டு ஆர்ப்பரிக்க வேண்டாமா? அதான் இன்னிக்கு ஜானகியம்மா பாட்டு. பட்டைய கிளப்புற சூப்பர் பாட்டு. இந்தப் பாட்டைக் கேட்டால், சங்கர்-எஹ்சான் -லாய் போட்ட ஆப்பிரிக்கா காட்டு புலி, ஆள் திங்கும் வேட்டைப்புலி முன் ஜென்மம் மோப்பம் தேடி அலையுதே பாட்டு ஞாபகத்துக்கு வந்துடும். அப்படியே பத்தினா புடிச்சுக்குற பஞ்சு மாதிரில நீங்க எல்லாரும். சும்மா பறந்து வந்து இந்தப் பாட்டுக்கு விடைய சொல்லிடமாட்டீங்க?

கவனிக்கவும் — இன்று 3 க்ளூக்கள் உள்ளன. கவனமாக கேளுங்கள். வெறும் 333/365 என்பதற்காக மட்டும் இப்படி பிரித்து தருவதாக நினைக்க வேண்டாம் 🙂 உண்மையிலேயே, part by partஆ கேட்டுகிட்டு போனா, பதில சொல்லிடலாம். அது மட்டுமல்லாமல் என் நெருங்கிய நண்பர்களின் திருமண நாள். இவர்களுக்கு நான் 2001ல் சொல்லுங்கள் பார்க்கலாம் என்று இசைஞானி இளையராஜா க்விஸ் நடத்தியது உண்டு 🙂 அதில், இப்படித் தான் 3 க்ளூக்களாக ஒரே பாடலில் இருந்து துணுக்குகளை தொலைப்பேசி மூலம் அட்லாண்டாவில் இருந்து இசைக்க, அவர்கள் இருவரும் வாஷிங்டனில் இருந்து பதிலை சொல்வார்கள். கணவன் – மனைவி இருவருக்கும் க்விஸ் நடத்திய ஒரே பிரகஸ்பதி நானாகத் தான் இருக்க முடியும். அப்பவே அமெரிக்க அரசாங்கம் ஒட்டுகேட்டிருந்தார்கள் என்றால், இந்நேரம் என்.எஸ்.ஏ, சி.ஐ.ஏல எல்லாம் நம்ம இசைஞானி பாட்டுக பிரபலம் ஆகியிருக்கலாம். யாரு கண்டா? 😉

சரி, பாட்டுக்கு வருவோம்.

இது அந்தக் காலத்துல அடிச்சு தூள் கிளப்பின பாட்டு. ஆல்பமே, செம ஆல்பம். எல்லா பாட்டும் சூப்பர் டூப்பர் ஹிட். ஆனா, இந்த பாட்டு இருக்கே..அடேங்கப்பா தான். அதுல, இந்த பாபீபாபபா….ஏஏஏஏஏனு ஒரு செம நக்கல் ஹம்மிங் வருது பாருங்க…அது தான் சிறப்பான அடையாளம். நம்ம @nradhakn மாதிரி ரசிகாஸ் எல்லாம் நான் கோரஸ் பாப்பாக்கள குறிப்பிடுவதை கூட விட்டுவைக்காமல் ஞாபகப்படுத்துறாங்க இல்லையா? அதனால, இன்னிக்கு வேணும்னே கோரஸ் பாப்பாக்கள் + கோரஸ் பாபாக்கள் (Babas)இணைந்து கொடுக்கும் >பாபீபாபபா….ஏஏஏஏஏ ஹம்மிங்க வச்சு ஒரு க்ளூவ இறக்கியாச்சு ;). செம டிராக் கையில சிக்கினதால, அம்சமா ஒருக்கும் ஒலி அமைப்பு. Split soundல் நல்ல துல்லியமா இருக்கும். கேட்டுட்டு சொல்லுங்க. ஹம்மிங்குக்கு மேலாக, அந்த trumpetsம் flutesம் பின்னி எடுப்பதை கவனித்தீர்களா? எப்படி? சொல்லுங்கள் பார்க்கலாம்… 😉

சரி முதல் டிராக்ல சொல்ல முடியாததால தான் இங்க வந்திருக்கறீங்கனு நெனக்கறேன். சரி இந்த டிராக்கை கேப்போம். அதே ஹம்மிங்கோட ஆரம்பமாகும் இசையில் trumpets வருகிறது. கிடாரின் சிணுங்கல் எப்படி? அதே போல ரிதம்ஸ் சூப்பர்ல? ஜாலி சாங். எப்படி? சொல்லுங்கள் பார்க்கலாம்… 😉

அட, இன்னுமா சொல்ல முடியல? அப்ப இத எடுத்துக்கோங்க. இப்ப முயற்சி செய்யுங்க. எப்படி? சொல்லுங்கள் பார்க்கலாம்… 😉 மேலே இருந்த இரண்டு துணுக்குகளில் இருந்த >பாபீபாபபா….ஏஏஏஏஏல பாட்டு ஆரம்பம் ஆகாம, trumpetsல அதிரடியா ஆரம்பிச்சாலும், முடியற இடத்துல வருது பாருங்க. அதுவும் நம்ம ஜானகியம்மா அசால்ட்டா எப்படி பாடி இருக்காங்க பாருங்க. நக்கல் தெறிக்கும் பாடலில் சூடும் அதிகம். Didn’t I say, this will be another jolly, offbeat number like Malaysia Vasudevan’s yesterday? 🙂 எப்படி? சொல்லுங்கள் பார்க்கலாம்… 😉

இன்னும் தெரியலைன்னா, என்ன பண்றது…ஹூம்? சரி.. அருணாச்சலம் படத்துல ரம்பாவுடைய பர்ஸை திருடிட்டு ஓடுற வில்லன, நம்ம சூப்பர் ஸ்டார் கோலி சோடா உடைச்சுட்டு போய் பிடிக்கற மாதிரி, ஒரு கோலி சோடவ ஒடி, அடி, குடி. அப்புறம் go to lifeline clue 🙂 அங்கே விடை ரெடியா இருக்கும். என்சாய் 😉 எப்படி பஞ்சு மேல punchஉ வச்சிருக்கேன் பாருங்க.. மூன்று stageஆ.

நன்றி.

Have a nice week ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Excellent audio source in split-stereo-sound.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Title of the movie comprises _onomatopoeic words. This song was written by the Producer himself. One is the heroes is from Coimbatore just like the director, who is also from Coimbatore.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Paayum Puli (பாயும் புலி ) from Kuva Kuva Vaathukkal (குவா குவா வாத்துகள்) (1984)

Advertisements