Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

நல்லா தூங்கிட்டு இருந்தேன். திடீர்னு கனவு. கனவுல நம்ம மலேசியா அண்ணேன்…ஏனப்பா, நம்ம பாட்டெல்லாம் கேட்டே ரொம்ப காலம் ஆவுதே..என்ன அர்த்தம்னு ஒரு பிடி பிடிச்சாரு பாருங்க… 😉 ஹிஹி…அதான் இன்னிக்கு இந்தப் பாட்டு.

மலேசியா அண்ணேன் இன்னிசை மழை பாட்டு.

Malaysia Vasudevan

செம பாட்டு.

அகில இந்திய வானொலி, கோயம்புத்தூர் வானொலி நிலையம். திரையிசையில் அடுத்ததாக ____லுக்காக பாட வருபவர்கள் மலேசியா வாசுதேவன் மற்றும் ______.

காதலையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு காதலுடன் பாடுவார் மலேசியா அண்ணன். படு ஜாலியா, பந்தாவே இல்லாம செம ordinaryஆ பாடிகிட்டு போவார். இதுல செம joke என்னன்னா, நம்ம மலேசியா அண்ணனுக்கே உரிய கிண்டல், கேலி, நக்கல் தொகையறாவா வெளிப்படும். பின்னி எடுத்திருப்பார். Frame-1ல இருந்தே அண்ணன் தான். அடிச்சு கலக்கிட்டு போய்ட்டே இருப்பார் 😉 இவருடன் பாடியிருக்கும் பெண் பாடகியும், சற்று சிரமப்பட்டு, முடிந்த அளவுக்கு சிறப்பாகவே அந்த காதலுக்குரிய இலக்கணத்தை எல்லாம் புணர்ச்சி விதி மாறாமல் வெளிப்படுத்தி அசத்தி இருப்பார். 😉

அப்புறம் ஒரு விவகாரமான openingஓட இந்தப் பாட்டு வரும் போது, மனசு அப்படியே gas balloon மாதிரி லேசாகி உயர உயர பறக்கும். அந்த மாதிரி ஒரு அட்டகாசமான பாட்டு. ஆகா. மலேசியா அண்ணேன் பாட்டுன்னா சும்மாவா…டேக் எடுப்பார் பாருங்க ஆரம்பத்துல இருந்து. பின்னல் தான்.

இந்தப் பாட்டு வந்த காலத்தில், செம ஹிட். ஆனால், இந்த ஆல்பத்துக்கும் இசைஞானியின் பிற பாடல்களே கடும் போட்டி. அருமையான சோக பாட்டு ஒன்று, அட்டகாசமான காதல்+காமம் நிறைந்த பாட்டு, ஒரு தாலாட்டு பாட்டு என்ற அளவில் நிற்காமல், மலேசியா அண்ணன் விரட்டி இருக்கும் இன்னொரு பாடலும் இந்தப் படத்தில் உண்டு. மொத்ததில் சொன்னால், சூப்பர் தூள் ஆல்பம்.

கடைசியாக ஒரு வேண்டுகோள். இந்த க்ளூவை மீண்டும் மீண்டும் கேட்டுப் பாருங்கள். ஒரு சாதாரண டூயட்டுக்கு எந்த அளவுக்கு சிரத்தை எடுத்து பாஸ்-கிடாரை உபயோகித்து பெருமை சேர்த்திருக்கிறார் இசைஞானி என்பது புரியும்! 🙂

நன்றி.

Have a nice week ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This song, penned by Malaysia Vasudevan’s dear friend Gangai Amaran, appeared in the same movie, which introduced a famous singer of Tamil Film Music 🙂

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Manam Karukkuthu (மனம் கருக்குது) from Nee Thaana Antha Kuyil ( நிீ தானா அந்தக்குயில்) (1986)