Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

வார ஆரம்பத்துல ஒரு வேதாந்தப் பாடலான்னு நீங்க கேக்கலாம். ஆனா, நிறைய போராட்டத்துக்கு அப்புறம் இந்த பாட்டு பதிவேற்றம் ஆகுது. 2 நாட்களுக்கு முன்னால் பழுதான கணினி சரி செய்த பாடு இல்லை. அதில் இன்று local network (wireless) வேறு out 😦 அதனால் என்னுடைய desktopக்கு இணைய தொடர்பில்லாமல் இருப்பதால் சிரமமாக இருக்கிறது.

இந்த களேபரத்துக்கு மத்தியில் ஒரு வழியாக 331/365க்கு encoding செய்து முடித்தேன். அதுவும் போராட வேண்டி இருந்தது. இசைத் துணுக்கைக் கேட்டாலே நன்றாக புரிந்து கொள்வீர்கள். It was worth every bit.

கிடாரில் ஆரம்பமாகும் இந்த பாட்டின் தொடக்க இசையைக் கேட்டாலே மனதினுள் ஒரு இனம் புரியாத உணர்ச்சிக் குவியல் உருவாகும். அதிலும் அந்த 32- நொடியில் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நிறைய தடவை காரில் பயணித்துக்கொண்டிருக்கும் போது, இந்த இடம் வரும் போது, சற்று நிறுத்திவிடுவது கூட உண்டு. என்ன என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால், paralyze ஆன மாதிரி ஒரு வித உணர்வு நிலைக்கு போய்விடுவது உண்டு.

அந்த sequenceல் ஏதோ இருக்கிறது. ஆனால் அந்த magic திடீரென்று 32வது நொடியில் நடந்துவிடுவதில்லை. இந்த ஞானி இருக்கிறாரே, அவர் நம் மனதுடன் அவர் இசையால் விளையாடுகிறார், பேசுகிறார், ஆட்டுவிக்கின்றார். அந்த 32வது நொடி magicக்காக அவர் நம்மை எங்கிருந்து ஆயத்தம் செய்கிறார் என்பதை நன்றாக பாருங்கள். ஆரம்பத்தில் இருந்து அவர் நம்மை தயார் செய்கிறார். ஆரம்ப கிடார் sequenceஐ பாருங்கள். soloவில் சோகமாக ஆரம்பம் ஆவது போல மெதுவாக ஆரம்பமாகிறது. Gear shift 20வது நொடியில் நடக்கிறது. அங்கேயும் கிடார் தான். ஆனால் அந்த strumming எத்துணை வேகத்தை பிடிக்கிறது என்று பாருங்கள். இங்கேயே அடுத்த கட்ட உணர்வு நிலை மாற்றத்துக்கு அவர் நம்மை அழைத்துச் செல்கிறார். புல்லாங்குழலில் நம் இதையத்தில் துளையைப் போடுகிறார். போதாது என்று துணைக்கு வயலின்களை கொண்டு வருகிறார். உச்ச கட்டமாக அந்த 32வது நொடி மாய sequence வந்துவிடுகிறது.

இந்த 32வது நொடி sequenceல் அட்டகாசமான bass guitar interlude வருவதால், அங்கே என்னுடைய encodingல் சில சித்து வேலைகள் செய்ய வேண்டியது இருந்தது. ஒன்றும் இல்லை…அங்கு பார்த்து சில இரைச்சல் நீக்க வேலைகளை specialஆக கவனிக்க வேண்டி இருந்தது. சிறு fillip to the volume தர வேண்டி இருந்தது. நன்றாக ரசித்துக் கேட்கலாம். Enjoy it in sub-woofer 😉

40வது நொடியில் வருவது சந்தூரா, வீணையா, கிடாரா என்று தெரியலையே. இப்படி நெருக்கி அடிச்சு சாத்தி இருக்கிறாரே, இசைச் சித்தர் 😉

இன்றைய பாடலை இது நாள் வரை தராமல், இன்று தர வேண்டிய நிர்பந்தம்? நேற்று முகநூலில் ஒரு நடிகர் நிதி திரட்டுவதற்காக 1 கோடி ரூபாய் காரில் வந்து நன்கொடை சேகரிக்க இருப்பதாக ஒரு விவாதம் நடந்தது. அந்த விவாதத்தில் நானும் சிறு பங்கெடுத்தேன். அது என்னை இந்த பாட்டுக்கு கொண்டு சென்றுவிட்டது.

வாழ்வே மாயம், இதில் எது நிலையானது என்னும் ரீதியில் செல்லும் அட்டகாசமான பாடல் இது. இதே படத்தில் இருந்த இன்னொரு அட்டகாசமான SPB பாடல் உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இன்றைய பாட்டு உங்களுக்கு தெரியாவிட்டால், இந்த புதிரில் கண்டெடுத்த இன்னொரு முத்தாக பாவித்து, அனுபவித்துக் கேளுங்கள் 🙂 இந்த முத்து உங்களோடு என்றும் உங்கள் playlistல் வரும் என்று நம்புகிறேன்.

நன்றி.

Have a nice week ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Extensively noise-removed. Noise-gate applied. No tempo was altered.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This song was penned by the producer, Panchu Arunachalam.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Vaazhkaye Vesham (வாழ்க்கையே வேஷம்) from Aaril Irunthu Arupathu Varai (ஆறில் இருந்து அறுபது வரை) (1979)

Advertisements