Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இன்று Supermoon Day. நமக்கு தலைவரோட நெலா அது வானத்து மேல பாட்ட கேக்குற எல்லா நாளும் — அமாவாசையா இருந்தா கூட — சூப்பர் மூன் தான்!

Super Moon

குயிலைப் பார்க்க வேண்டாம், வானத்தில் நிலவைப் பார்த்து விடின் 😉


உண்மையிலேயே 329/365க்கு வந்த பல விதமான பின்னூட்டங்கள், விமர்சனங்கள், கீச்சுக்கள் எல்லாவற்றையும் பார்த்து சற்று அசந்து போனேன் என்று சொன்னால் அது மிகையாகாது. நேற்று ஜார்ஜியாவின் கிராமத்துத் தெருக்களில் சர்ரென்று பறந்து கொண்டிருந்தபோது, இதை பதிவு செய்தேன். அதனால் வெறும் மூவரின் பெயரை மட்டும் தான் குறிப்பிட்டிருந்தேன். பின்னர், இன்னும் நிறைய பேர் கருத்துக்களை சுவையோடு அள்ளித் தெளித்திருந்தீர்கள். I love this sportive attitude. மிக்க நன்றி. இதோ, என்னுடைய 2 cents 🙂 http://www.fotobabble.com/m/ZnZoQkZwT2FPbTA9


இன்று வருவதும் அருமையான டூயட் பாடல் தான். இந்தப் பாட்டை கண்டுபிடிப்பது சுலபம் தான். ஏன்னா அப்படி ஒரு குஷியான டூயட் பாட்டு. இனிமையான பாடல் மட்டும் அல்ல, இனிப்பானதும் கூட. ஐஸ்பெட்டி குளிரில் நடுநடுங்குவது போல இந்தப் பெண் பாடகி ஒரு இடத்தில் பாடிக்கொண்டே சிலிர்த்துவிடுவது போல் குரல் பாவம் கொடுப்பார் பாருங்கள், செம கிளாஸ்.

பாட்டும், செம மாஸ்.

வயலின்களோடு, ஒரு வித Middle-Eastern ஒலியில் ஒலிக்கும் கருவியின் துணையோடு ஷெனாயும் சேர்ந்துவிடுகிறது. மேலும் புல்லாங்குழலில் ஒரு அட்டகாசமான இசையும் இணைந்திருப்பது, கோயம்புத்தூர் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாவில் இருந்து நெய் வடிவது போல், இனிப்போ இனிப்பு. பேஸ் கிடார் முழுவதுமாக வருகிறதே…அப்படியே கோயம்புத்தூர் காந்திபுரம் நெல்லை லாலா ஜிலேபியின் தித்திப்பு தான். அடேங்கப்பா… 😉

கறுப்பு வெள்ளையை நினைவுபடுத்தும் ஹீரோ-ஹீரோயின் கூட்டணியில் செம ஹிட்டான இந்தப் பாடலை, என்ன, கண்டுபிடித்துவிடலாம் தானே?

நன்றி.

Have a nice weekend.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This song was filmed at Coonoor Sims Park, Dolphin’s Nose and 7th Mile near Ooty. Hero’s wife produced this movie, while the heroine was the daughter of another famous heroine of yesteryear. When it was released, this movie was controversial.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Sakkarai Katti (சக்கர கட்டி) from Ulle Veliye (உள்ளே வெளியே) (1993)

Advertisements