Tags

, , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இது tie-breakerங்க. சொல்லிட்டேன். என் மேல கோபப்படவேண்டாம்🙂

உங்களால் இதை கண்டிப்பாக கண்டுபிடிக்க முடியும் என்றே நம்புகிறேன். கவனமாக படித்து, முன்னேறுங்கள்.

நேற்றைய 325/365க்கு சிலர் திண்டாடுவீர்கள் என்று கண்டிப்பாக நினைத்துப் பார்க்கவில்லை. பொதுவாக, ஒரு பாடத்தை எடுக்கும்போது, ஒருவர் ஒரு கணக்கை முடிக்க திணறினால், அது தொடர்புடைய இன்னொரு கணக்கைக் கொடுத்து அவரை ஊக்குவித்து(?) இழுத்து செல்வது என்னுடைய ஸ்டைல். அது தான் இன்று அரங்கேறுகிறது. இதனாலாவது, நேற்றைய பாடலை நீங்கள் விடாமல் பதில் அளிக்க ஒரு drive பிறக்கலாம் அல்லவா?🙂

சரி, புதிருக்கு வருவோம்.

இது ஒரு சோக டூயட். இதிலேயே, பாடலை narrow செய்ய முடியும் உங்களால்.

அதே போல, இந்தப் பாடலின் இடையிசையில் Guitars அட்டகாசமாக போட்டிருப்பார்ங்க. நல்லா கேளுங்களேன். சற்று என்கோடிங் செய்யவேண்டியதாயிற்று. ஒன்றில் புல்லாங்குழல் வாத்தியம் இருக்கும். இன்னொன்றில் அதுவும் இல்லை. ஆனால் இரண்டு இடையிசையிலும் அட்டகாசமான lead guitars வரும்.

முதலில் இதைக் கேளுங்கள்:

எப்படி, புல்லாங்குழலில் ஆரம்பமாகிறது sequence? அது கிடாரில் பின்னி எடுத்துவிட்டு, வயலினில் முடியும் இடத்தில் எப்படி group violins வருகிறது?

என்ன? இன்னும் விடை தெரியவில்லையா?

அப்படி என்றால், அடுத்ததை முயன்று பாருங்கள்.

இது முழுக்க முழுக்க கிடாரில் அட்டகாசமாக இசைக்கப்பட்டிருக்கும் இடையிசை.

அது சரி, அது என்ன 325/365 connection என்று தானே கேட்கின்றீர்கள். சொல்லாமல் விடுவேனா? அந்தப் பாட்டில் பாடிய ஒரு பாடகர்/பாடகி, இதே பாடலை பாடி இருக்கிறார். அது தான் connection🙂

வேறு ஒரு துப்பும் வேண்டுமா? கொடுத்துவிட்டால் போச்சு. இதே பாடலின் இன்னொரு வடிவத்தை, இசைஞானி இளையராஜா பாடி இருப்பார்.

இதற்கு மேல் துப்பு கொடுக்க, அனுமதி இல்லை.

சந்தோஷமான டூயட் கொடுக்கலாம் என்றால், நாட்டில் நிலவும் காதலர்களின் கலவர நிலையைக் கருதி, அவர்களுக்காகவே இந்த சோக டூயட்டை அவிழ்த்துவிட்டாயிற்று.

நன்றி.

All the best.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Mild noise-reduction done with noise-gate applied once. No tempo was altered.


Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This 2-worded itle of the movie has a strong music-based connotation.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: O Vaanamulla (ஓ வானமுள்ள காலம்) from Puthiya Swarangal (புதிய சுவரங்கள்) (1992)