Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

As we are nearing the finish-line, today is yet another milestone – 325.

There are certain things in life, that are epochal. You never can forget them. In a sense, this song is like that for me.

இன்னும் எனக்கு பசுமையாக நினைவு இருக்கிறது.

கோயம்புத்தூர் ராயல் எலக்ட்ரானிக்ஸ் கடையில் அவசர அவசரமாகச் சென்று, இளையராஜா லேட்டஸ்ட் இன்னிக்கு என்னங்க இருக்கு…? என்ன என்ன பாட்டெல்லாம் பதிவு செய்யலாம்? அப்படின்னு வெள்ளந்தியா கேட்பேன்.

எல்லா பாட்டையும் பதிவு செய்யும் அளவுக்கு ஓட்டம் இல்லாத நாட்கள். T-Series ஒலி நாடாவுக்கு தான் காசு செலவு செய்ய முடிந்த நாட்கள். So, we got to be very choosy. Roughly 9 songs in Side-A and 9 songs in Side-B. And boy, if you have a sibling (which I did), we need to be accommodating for their flairs and tastes as well. Duh! 😉

அப்படி இந்த படத்தின் பாடல்களை பதிவு செய்யச் சென்றபோது கடைக்காரர் சொன்னார், ரெக்ஸ், அப்படியே இந்த ______ பாட்டையும் லிஸ்ட்ல போட்டுக்கோங்க..

அதற்கு நான், என்னங்க ஆரம்ப வரியே என்னமோ மாதிரி இருக்கு? என்ன மாதிரி பாட்டு? என்று வினவினேன்.

அட உங்க taste நமக்கு தெரியாதா, ரெக்ஸ்? அடின்னா அடி தர்ம அடி அடிச்சிருக்கார் தலைவர். Stereoல கேட்டு பாருங்க..பிச்சு உதறும்னு சொல்லி அவர் போட, அந்த Stereo Recording Center கடையே அதிர்ந்தது. ஆரம்பமே மண்டையில் ஓங்கி அடித்த மாதிரி Drums இறங்கியது.

யார் நடிச்சிருக்கா? என்று நான் கேட்க…

இதோ, அட்டைய பாருங்க…எல்லாம் உங்க ஃபேவரிட் தான்னு சிரிச்சபடியே அட்டையைக் காட்ட, எனக்கோ வாயெல்லாம் பல் 😉 ஹி ஹி…

அப்ப டபுள் ஓகேனு ரயில்வே கார்ட் பச்சக் கொடி காட்டுற மாதிரி ஓகே செஞ்சுட்டேன்.

அடுத்த ஒரு வாரம் பரபரப்பு…அவங்க கிட்ட ஒரு 90 நிமிட காசெட் பதிவு செய்ய அப்பவே அவ்வளவு நேரம் எடுக்கும். (ஆமா. கோயம்புத்தூர்ல இந்த ரெக்கார்டிங் செண்டருக்கு செம பேர். நேரம் எடுத்தாலும், அட்டகாசமா பண்ணித் தருவாங்க. இவங்க கிட்ட இருந்து தான், இசைஞானியின் பாடல்களை நல்ல தரமான ஒலியில் கேட்கவேண்டும் என்ற ஆசையே எனக்கு ஒட்டிக்கொண்டது என்றால் அது மிகையே அல்ல!)

ஒன்னு தெரியுமா? இன்னும் அந்த கேசட் பத்திரமா வச்சிருக்கேன்..இங்க..இப்போ..அட்லாண்டால 🙂 Tornado ஏதாச்சும் வந்து அள்ளிக்கிட்டு போனா தான் உண்டு :)))

அந்தப் பாட்டைத் தான் 325/365 மைல்கல் துணுக்காக கேட்கின்றீர்கள். அதுவும் குறிப்பாக, இப்போது நீங்கள் கேட்பது போல வெறும் இசையை மட்டும் தனியாக பகுத்து, பதிவு செய்து கேட்டு ரசித்தேன் (கடையில அப்படி செஞ்சு தர மாட்டாங்க…வீட்ல வந்து நான் கொஞ்சம் நோண்டி, வேலை செஞ்சு அப்படி பதிவு செய்து ரசிப்பது வழக்கம்).

If you are a lover of traditional percussion, pipes, and just plain guitars — especially bass guitars — this will be a feast. என்ன அடி, என்ன ஒரு இடி. இந்த பாட்டு வந்த புதுசுல கோயம்புத்தூர் –> மேட்டுப்பாளையம் தனியார் பேருந்துகளில் அடிக்கடி போடுவார்கள் 🙂 நன்றாக ஞாபகம் இருக்கிறது.

அப்புறம், இந்த படத்துல நடிச்சவங்கள பத்தி சொல்லியே தீரணும். இவங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் எட்டு திக்கும் திக்கா, ஸ்ட்ராங்கா இருக்காங்கன்னு இந்த க்விஸ்ல தான் (??) தெரிஞ்சுகிட்டேன் 😉 அப்புறம் தான் நானும் அந்த ஜோதியில ஐக்கியம் ஆகிட்டேன் 😉 (அப்பாடி..ஒரு வழியா தப்பிச்சாச்சு…)

இந்தப் படத்துல பாடல்கள் எல்லாம் அட்டகாசமாகவும், அம்சமாகவும், அழகாகவும், மெலோடியசாகவும் இருக்கும். பாடல்களும் கதையும் நீலகிரி மலையில் படமாக்கி இருப்பார்கள்.

ஆனா, படத்துல இந்தப் பாட்டு வந்துச்சான்னு தெரியல…படத்த பாத்த மக்கள் இருந்தா சொல்லுங்க.

Thanks for journeying with us for the past 325 days. We have only 40 more to go!

நேற்று மணிவண்ணனின் அஞ்சலி ஏற்படுத்திய வருத்தத்தையும், இன்றைய பாடல் அகற்றும். மாறி, மாறி மேடும் பள்ளமும், இன்பமும் துன்பமுமாக பயணிப்பது தானே வாழ்க்கையே? வழுக்கை வரும் வரை இந்தப் பாட்டுக்கு நான் அடிமை 😉 (Just முதல் இடையிசையில் ஒரு ஏற்றம் கொடுப்பார் பாருங்க… சான்ஸே இல்லாத ஜனரஞ்சகமான பாட்டு… 😉 In fact, it is this steep ascent in the 1st interlude that made me so latched on to this song 🙂

Have a great day.

நன்றி.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Another song entry has already come in #365RajaQuiz from the same movie 🙂 Male singer in this song, will essentially come towards the tail-end of the song, only in the final pallavi. A female chorus portion of a tribal humming is pretty notable in this song 🙂

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Santhana Kumbaa (சந்தன கும்பா) from Pon Vilangu (பொன் விலங்கு) (1992)

Advertisements