Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இவரை இயக்குனர் என்பதா, வசனகர்த்தா என்பதா, திரைக்கதை அமைப்பாளர் என்பதா, சினிமா கதாசிரியர் என்பதா, கோயம்புத்தூரின் வாசமே மாறாமல் ஒரு வித குசும்புத்தனத்தோடு நக்கல் எடுத்து, மக்களை சிரிக்க மட்டும் வைக்காமல் சீரியசாக சிந்திக்கவும் வைக்கத் தெரிந்த கிரியேட்டர் என்று சிலாகிப்பதா?

மணிவண்ணன் என்ற ஒரு மனிதன் சனியன்று அகால மரணம் அடைந்தார் என்ற செய்தியை சற்று ஜீரணிக்க சிரமமாக இருந்தது.

கோயம்புத்தூரில் இருந்து திருச்சிராப்பள்ளி 202 கிலோமீட்டர். அந்தக் காலத்தில், திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகத்தில் இந்த வழித்தடத்துக்கு 515 என்ற எண் இருந்தது. மயிலாடுதுறையை மாயவரம் என்றே அழைத்து வந்த கால கட்டம் அது. வேளாங்கண்ணி செல்ல நாகப்பட்டினம் பேருந்தின் வழித்தடம் 518 ஆக இருந்தது. இவை இரண்டும், பல வருடங்களுக்குப் பின் முறையே 700 மற்றும் 723 வழித்தட எண்களாக மாறியதாக நினைவு. எது எப்படியோ, இப்பேருந்துகளில் ஒண்டிப்புதூரைத் தாண்டி, சூலூருக்கு அருகில் வரும்போது இந்திய விமானப்படையின் தளத்தை அப்பா சுட்டிக்காட்டுவார். பின்னர், நான் வளரும் போது, கல்கண்டு, குமுதம், விகடன் போன்றவற்றின் உதவியால் சூலூருக்கு இன்னொரு பெருமையும் உண்டு…அது நம் மணிவண்ணனால் என்று ஒரு உரிமையான சிலாகிப்போடு… 🙂

அது கோயம்புத்தூரின் மகிமையோ என்னவோ தெரியாது, திரைப்படம் என்றாலும் சரி, நடிகர்கள், டைரக்டர்கள் என்று யாராக இருந்தாலும், அந்த ஊரைப் பற்றி தங்களின் சில படங்களிலோ, அதில் வரும் இடங்கள், லொகேஷன்கள் என்று ஒன்றை விடாமல் இழுத்துப் போட்டு அந்த ஊருக்கு என்று ஒரு recognitionஐ வாங்கித் தருவார்கள். இதில் மணிவண்ணன் நிறையவே செய்திருக்கிறார் 🙂 இது குறித்து சில முந்தைய புதிர்களில் என் சிந்தனைகளை பகிர்ந்து இருக்கிறேன்.

அதே போல இவருக்கும் இசைஞானி இளையராஜாவிற்கும் நல்ல ஒரு wavelength இருந்ததை, அந்தக் காலத்தில் மக்கள் உணர்ந்தார்களோ இல்லையோ, இணையம் மூலமாக இன்று உணர்ந்திருக்கிறார்கள். மிக்க மகிழ்ச்சி. ஒவ்வொரு படத்திலும் அசத்தலான பாடல்கள்.

இன்றைய பாடலையே எடுத்துக்கொள்ளுங்கள். மிக, மிக சாதாரணமான ஒரு situation தான். பின்னாளில் சின்னதம்பி மாதிரி, அப்பாவி நாயகன், பணக்கார நாயகி என்று விரியும் கதைக்களத்தில், இயற்கையை வியந்து இவள் பாடுகிறாள்.

இவ்வளவு தான்.

இந்த ஒரு சாதாரண சிச்சுவேஷனுக்கு என்னமாக அடித்து தள்ளி இருக்கிறார் என்பதற்கு இந்த இடையிசைத் துணுக்கு காலமெல்லாம் சாட்சி சொல்லும். ஆரம்பத்தில் எப்படி ஒரு வயலின் என்று யோசிக்க யோசிக்க், நடுவில் புல்லாங்குழல். அதை விட அட்டகாசமாக பரந்து விரியும் நீண்ட group-violin seqenceஐ பாருங்கள். ஆரம்பத்தில் முதலே இசைஞானியின் favorite சந்தூர் போடும் போட்டைப் பார்த்தீர்களா?

இவை எல்லாவற்றையும் விட, முத்தாய்ப்பாக இறுதியில் வரும் ஜானகியம்மாவின் ஆஆஆஆஆஆ மழையின் குளுமையையும், அது முடிந்து பின்னர் சில்லென்று வீசும் காற்றில் அரும்பும் மண்வாசனை(petrichor)ஐயும் நம் முகத்தில் அள்ளி வீசும் ஒரு குதூகலம்….மயக்கும்… நம்மை மயக்கி, பரவசத்திற்கே இட்டுச் செல்லும்.

இப்படி பல, பல பாடல்கள் – இவர்கள் கூட்டணியில்.

You will be missed, Director Manivannan. Rest in peace.

இவரைப் பற்றியும், இவரின் படைப்புகள், இசைஞானியின் பாடல்களில் வந்த இவரின் படைப்புகள் என்று எதைப் பற்றி வேண்டுமானாலும் பின்னூட்டத்தில் பகருங்கள்.

அதே போல் இந்தப் பாடலை அடிக்கடி கேட்பது உண்டா? Blood-pressure குறைக்க மருத்துவர்கள் இதை தாராளமாக Rx ஆக கொடுக்கலாம் 🙂

பின்குறிப்பு: இவ்வளவு சுலபமாக க்ளூக்களை அள்ளித் தெளிக்க முடியாது. இது மணிவண்ணனுக்காக என்பதால், ஒரு சிறு விதி விலக்கு. அவ்வளவே. சரியா?


Thanks everybody for the Google+ hangout. It was a great experience. I am glad I could attend.

ஒரு ஒலிப் பேழையை வைத்து மாசு/இரைச்சலை நீக்குவது எப்படி என்று காட்டலாம் என்று இருந்தேன். ஆனால், கலந்துரையாடல்களிலும் பாடுவதிலும் எல்லாரும் பரவச நிலையில் இருந்ததால், பொது நலம் கருதி விட்டுவிட்டேன். May be some time in future, when time and situation permits.

Thanks for having all of us.

நன்றி.

Have a nice week ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Extensively noise-removed. Noise-gate applied. No tempo was altered.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This was a prominent movie for one of a popular lead actor, who was a neophyte at the time this movie was made and who is pretty busy with TV these days. If you aren’t able to identify yet, please try this prelude.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Maanaada (மானாட) from Muthal Vasantham (முதல் வசந்தம்) (1986)

Advertisements