Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

அனைத்து தந்தையர்களுக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துகள். Wishing all the Fathers a Happy Father’s Day. 🙂 “அப்பா என்றழைக்காத உயிர் இல்லையே”னு எழுத ஒரு கவிஞனும் இல்லையேனு வருத்தப்பட வேண்டாம் ;)))

20130615-231904.jpg

ஒவ்வொரு குழந்தைக்கும் தந்தையின் அன்பும், பாசமும் நன்கு தெரியும். ஏனென்றால், குழந்தைகள் பத்திரிகைகளையும் தொ(ல்)லைக்காட்சிகளையும் பார்த்து ஏமாறுவதில்லை 🙂 சந்தேகமா? இதோ..இந்த சிறு வீடியோ போதுமே to appreciate the pristine love a child has of its Father. 🙂

இப்படி சுதந்திரமாகவும் சந்தோஷமாகவும் திரிந்து, பறந்து குதூகலமாக இருக்க வேண்டிய குழந்தைகளை, கோர்ட், நீதிமன்றம், அந்த உரிமை, இந்த உரிமை என்று சுடு தண்ணீரில் போட்டு தோலை உரித்து பிரியாணிக்கு உலையை போடும் கோழிகளாக ஆக்கி பின்னர் அழ வைத்து வேடிக்கை பார்க்கும் முன்னேறிய சமூகத்தின் (அவலத்தின்) தோலையும் உரித்துப் பார்த்துவிடுவோமே.. 😦

ஆக தந்தையர் தினத்தில் அனைவருக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல், இப்படியும் நம்மைச் சுற்றி நடக்கும் அவலத்தை உணர்ந்து கொள்ளும் நிலையில் இருக்கிறோம். நேற்று பெங்களூரில் தர்ணாவே நடத்தினார்கள் — சில தந்தையர்களும், அவர்களின் குழந்தைகளும், குடும்பத்தினரும். எழுகவே படைகள் எழுகவே என்று புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக அது அமைந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.

ஆக இன்று புதிரில் குழந்தகளுக்காகவே தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல் தான் வருகிறது. அதெல்லாம் ஒரு காலம் 😉

குழந்தைகளை குழந்தைகளாக பார்த்து பருப்பு உருண்டை, தேன் மிட்டாயில் இருந்து தட்டை முறுக்கு வரை வாங்கிக்கொடுத்து, அவர்கள் மகிழ்ச்சியே நம் மகிழ்ச்சி என்று இருந்த காலம். இந்தக் காலம் மாதிரி தட்டையாக இருக்கும் smartphone கருவிகளில் முகத்தை புதைத்துக்கொண்டு, babysitterஆக TV முன்னாடியும், TiVo முன்னாடியும் அவர்களை தள்ளிவிட்டு விட்டு, உலக பிரச்சினைகளையும், வேலைப் பளுவையும் இழுத்துப் போட்டுக்கொண்டு Facebook likeயிய காலம் அல்ல 😉

Children did have their primacy in every sphere of the social life, then. Even good movies and literature (remember அழ வள்ளியப்பா? Remember Champak? Remember Gokulam? Remember பட்டினத்தில் பூதம்? Remember சாதுமிரண்டால்?) were made to entertain them with a social background that was distinctly their own. JK Rowling அம்மையாரின் இறக்குமதி சேட்டைக் கதைகள் மட்டுமே குழந்தைகள் இலக்கியமாகவும் கேளிக்கையாகவும் கருதப்படாமல், மண்ணின் தொடர்போடு, படைப்புகள் வந்தக் காலம்.

When I type this, I am reminded of Oscar Wilde‘s quote:

Few parents nowadays pay any regard to what their children say to them. The old-fashioned respect for the young is fast dying out.

குழந்தைகள் தான் நம் சிந்தனையின் மையப் புள்ளியாக இருக்க வேண்டும் என்பதை இந்த பொன்னான நாளில் நினைவு கூறவே குழந்தைகளுக்காக என்று இசைஞானி இயற்றிய பல பாடல்களில், சிறந்த பாடல்களில் ஒன்றான இதை அவிழ்த்துவிடுகிறேன். ஒன்று, இரண்டு என்று இவர் போட்டிருந்தால், இம்மாதிரி பாடல்களை எல்லாம், எல்லாரும் ஆகா ஓகோ என்று இன்றும் பாராட்டிக்கொண்டு இருப்பார்கள். இவர் அநியாயத்துக்கு பல நூற்றுக் கணக்கான பாடல்களை அள்ளி வீசிக்கொண்டு இருந்தால், அட இந்தப் பாட்டை கேட்டே பல வருஷம் ஆகுதேன்னு நிறைய பேர் தலையில போட்டுக்குற நிலைமை தானே வரும்?

மாசற்ற குழந்தைகளின் கேளிக்கைக்கு என்று வந்த படங்களில் முக்கியமான இந்தப் படத்தில், குறைவான பாடல்கள் என்றாலும், நிறைவான பாடல்களாகத் தந்து, தென்னிந்தியாவையே மெலடியால் மாற்றிய அந்தக் காலத்து Harry Potter தான் நம் இசைஞானி.

படு பிஸியாக இருந்தப் போது, ஒரு குழந்தைகள் theme கொண்ட படத்துக்கென்று பின்னி படல் எடுத்திருப்பார் இசைஞானி. பாடல்களை விடுங்கள். இந்தப் படத்தின் பின்னணி இசை பிய்த்து உதறி accoladesஐ வாங்கியது. தெரியுமா? இசைஞானியின் மீது எனக்குள்ள ஒரு சிறு வருத்தம், இந்தப் படத்தின் பின்னணி இசையை original LPல் அந்தக் காலத்திலேயே தாராளமாக வழங்கியவர், பின்னாளில் பல நூற்றுக் கணக்கான படங்களுக்கு செய்திருந்தால், இந்நேரம், பின்னணி இசைக்கு என்று ஒரு தனிக் களஞ்சியமாக அவற்றை வைத்திருக்கலாம்.

இன்றைய இசைத் துணுக்கு, முழுப் பாடலின் இசையை உள்ளடக்கியது. இதில் முழுக்க முழுக்க Fantasy தான். A Child’s innocence, straight from our Pannaipuram Raaja 🙂 கிடார், டிரம்ஸ், டிரம்பட்ஸ், வயலின்ஸ், கோரஸ் பாப்பாக்கள், புல்லாங்குழல் என்று தாராளப் பிரபு ஒன்றையும் வைத்து வைக்கவில்லை.

இந்தப் பாட்டை எல்லாம் கேட்டால், குழந்தைகள் எல்லாம் சிரிக்கும்..பெரு உவகை அடையும்..பெரியவர்கள், குழந்தைகளாகவே மாறி, innocence என்றால் என்ன, அது ரொம்ப deep அம்மா என்று பாடத் தொடங்கிவிடுவார்கள்.

என்ன கண்டுபிடித்துவிடலாம் தானே?

அதே போல் பின்னூட்டத்தில் வெளிப்படையாக சொல்லிவிடுங்கள். கடைசியாக இந்தப் பாடலை எப்போது கேட்டீர்கள்? இன்று புதிரில் வரவில்லை என்றால், இன்றைய பாட்டை எல்லாம் நினைத்து பார்ப்பது உண்டா? I am just curious. Thanks in advance 🙂

Happy Father’s Day.


கோயமுத்தூர் டைரக்டர் என்று வாயார LL கொடுத்து கொடுத்து மகிழ்ந்த எனக்கு, இயக்குனர் மணிவண்ணனின் மறைவு மிகுந்த சோகத்தை ஏற்படுத்திவிட்டது. சொன்னால் நம்பமாட்டீர்கள். நாளைக்கு என்று மேகத்தில் பதிவேற்றிய பாடல் அவரை நினைத்து பார்க்கச் செய்யும். அதில் உங்கள் ஆதங்கத்தை கொட்டிவிடுங்கள். நாளை மணிவண்ணன் அவர்களின் நினைவாக புதிர் 324/365 வரும். 😦
Manivannan


பெங்களூரில் இன்று இசைஞானியின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக குழுமும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் வாழ்த்துகளும், நன்றிகளும். தயவு செய்து எங்களுடன் உங்கள் சந்திப்பை பகிர்ந்து கொள்ளுங்கள். 🙂

நன்றி.

Have a nice week ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Noise removed. No tempo was altered.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This epic milestone movie was dubbed into Tamil, although, its title will have an English influence.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Poo Vaadai Kaatre (பூ வாடை காற்றே) from My Dear Kuttichaathaan (மை டியர் குட்டிச்சாத்தான்) (1984)

Advertisements