Tags

, , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இன்று புதிரில் வரும் பாடல், எனக்கு மிகவும் பிடித்த Classic டூயட். பல டூயட் பாடல்களை பாடி கலக்கிய அதே ஜோடி பாடகர்கள், அடக்கி வாசித்து, பட்டையைக் கிளப்பிய haunting melody என்று தான் சொல்ல வேண்டும்.

இது என்ன ராகம்? இதுல என்னமோ ஒரு காந்த சக்தி ஒளிந்து கொண்டிருக்கிறதே என்று பாடலைக் கேட்பவர்களின் மனதினுள் கண்டிப்பாக பல கேள்விகளை கேட்க வைக்கும் அளவுக்கு கொஞ்சம் strong ஆன டூயட் என்றே சொல்ல வேண்டும்.

பாடலின் ஆரம்பம் முதலே ஒரே tempo தான். ஒரு வித haunting hummingல் fluteம் santoorம் உடன் ஆரம்பமாகும் பாடலில், மெதுவாக ஊர்ந்து கொண்டே போகும் வேகம் தான், இந்தப் பாடலின் முக்கிய அடையாளமே.

நிற்க.

மற்றொரு அடையாளம், ஒரு வித கர்னாடக இசை நுணுக்கங்களை உள்ளடக்கிக் கொண்டே மிகவும் modernஆக ஒலிக்கும் அந்த duality தான்.

இன்றைய இடையிசை துணுக்கையே எடுத்துக்கொள்ளுங்களேன். இவர் இசைஞானி தான் என்பதை பலமுறை நிரூபித்திருப்பதை இங்கும் காட்டி இருப்பார். Electric guitar என்னும் மேற்கத்திய இசைக் கருவியை அநியாயத்துக்கும் முழுக்க முழுக்க பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கும் வீணையுடன் டூயட் பாடும் விதமாக அவிழ்த்துவிட்டிருப்பது fusionன் உச்சம்! இதற்கு முந்தய இடையிசையில் கரனாடக இசைக் கச்சேரியில் வரும் வயலின் இசையை அவிழ்த்து விட்டிருப்பார்.

இப்படி பல விதமான subtle nuancesஐ உள்ளடக்கி பாரம்பரியத்திற்கும் நவீனத்திற்கும் இடையே நிற்கும் சரியான பாலமாக அமைந்த அருமையான fusion, melody, duet தான் இது.

இறுதியாக, இந்த டூயட் பாடலை கேட்டிருந்தால், உடனே பதில் சொல்லிவிடுவீர்கள். இல்லை என்றால் இந்த haunting duet பல நாட்களுக்கு உங்கள் playlistல் இருக்கும். அதனாலேயே என்னால் முடிந்த அளவுக்கு இரைச்சலை நீக்கி இருக்கின்றேன். இந்தப் பாடலை இதற்கு முன் கேட்டிருக்கின்றீர்களா என்று தவறாமல் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

இந்தப் படத்தில் ஒரு தத்துவப் பாடலை மலேசியா வாசுதேவன் அண்ணன் பாடியிருப்பார் பாருங்கள்… பின்னி இருப்பாருங்க…என்ன ஒரு அடக்கி வாசிப்பு… ஆட்டுகுட்டி முட்டையிட்டுனு ஜாலியா பாடி குதிக்க வச்சிருந்த இசைஞானி, இவரின் திறமை மீது வைத்திருக்கும் நம்பிக்கையால், இம்மாதிரி heavy songsஐயும் பாடி வைத்து அழகு பார்த்த பொன்னான காலம் அது.

இந்த ஆல்பமே ஒரு அட்டகாசமான ஆல்பம். அனைத்து பாடல்களையும் எழுதியவர், கவிஞர் வாலி.

நன்றி.

Have a nice weekend.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Extensively noise-removed. Noise-gate applied. No tempo was altered.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This movie title has a floral and a number theme in it, albeit, it is not quite clear whether this movie ever got released. It may or may not have (please comment about it, if anybody has more information).

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Kodi Inbam (கோடி இன்பம்) from Nenjil Aadum Poo Ondru ( நெஞ்சில் ஆடும் பூ ஒன்று) (1978)

Advertisements