Tags

, , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

The final countdown for #365RajaQuiz has commenced with today’s post. We have only 50 more days to go.

Malaysia Vasudevan

இன்று களம் காண்பது, எனக்கு மிகவும் பிடித்த மலேசியா வாசுதேவன் அண்ணனின் அட்டகாசமான டூயட்.

இதை முதல், இரண்டாம், மூன்றாம் சீசன் என்று பல சீசன்களில் ஏற்ற நினைத்தேன். வேண்டாம். கடைசியான சீசனில் அவிழ்த்து விடுவோம் என்று பொறுமை காத்து இன்று இறக்குகின்றேன்.

இந்தப் பாடலை இன்று இறக்குவதற்கு நேற்று வந்த புதிரும் ஒரு முக்கிய காரணம். அது என்ன என்று கேட்கும் மூடில் நீங்கள் இருந்தாலும், சொல்லும் மூடில் நான் இல்லையே…ஹஹாஹா😉

இந்தப் பாடலை எனக்கு அறிமுகம் செய்து, வெறித்தனமாய் பிடிக்க செய்தது கோவை அகில இந்திய வானொலி தான். இதே படத்தில் இன்னொரு அருமையான மலேசியா அண்ணன் டூயட்டும் உண்டு. அருமையான ஆல்பம். அட்டகாசமான பாடல்கள்🙂

நேற்றைய பாடலில் வந்தவர்களால் காதல் ரசம் எப்படி சொட்டியதோ, அதை அப்படியே இங்கும் நுகரலாம். மலேசியா அண்ணனுக்கு காதல் ரசம் குறைவுன்னு யாராச்சும் சொல்லிட முடியுமா என்ன?😉 அப்படியே தவறி சொன்னா, இந்தப் பாட்டுக்கு இட்டாந்துடுங்க. அப்புறம் பார்ப்போம்😉

பாடலின் ஆரம்பமே வண்டி வண்டியாக காதல் ரசம் சுரந்து ஓடும் விதமாக மலேசியா அண்ணேன் ல..ல..ல.லா நு சொல்லுவார் பாருங்க. ஆகா!! நாலே நாலு வார்த்தையில ஆரம்பிப்பார். செம.

இசைஞானியும் இந்தப் பாடலுக்கு அப்படி ஒரு மென்மையான orchestrationஐ உபயோகிச்சிருப்பார். நல்லா பாத்தீங்கனா, நிறைய guitars — lead and bassல பட்டைய கிளப்பி இருப்பார். அதே மாதிரி violins! அம்மாடியோவ். வெறும் prelude and interludeல மட்டும் இல்லாம, சரணம் முழுக்க பாடகர்கள் பாட பாட, அதன் பின்புலத்தில் violinsஐ வாசிச்சுட்டே வருவார்.

அதே மாதிரி, டூயட் பாடல்களில், சந்தூரின் அட்டகாசத்தை இதில் நிறையவே அவிழ்த்துவிட்டிருப்பார். பாடல் முழுக்க வந்து கொண்டே இருக்கும். அதே போல இசைத் துணுக்கில் வரும் புல்லாங்குழல், பாடலின் பல இடங்களில் எட்டிப் பார்த்துக்கொண்டே இருக்கும்.

என்னுடைய ஒலி நாடாக்களின் தொகுப்பில் தேடி பிடித்து encode செய்து பதிவேற்றம் செய்தேன்.

This is one of my favorite duets of Malaysia Vasudevan.

Have a nice week ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Extensively noise-removed as there were ingrained noise, due to LP damage. Noise-gate applied. No tempo was altered.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This movie was produced by Panchu Arunachalam and he is the lyricist for this song.
Panchu Arunachalam

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Madhu Malargalil (மது மலர்களில்) from Magane Magane (மகனே மகனே) (1982)