Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

தாமதத்திற்கு நானும் ஒரு விதத்தில் காரணம். அதற்காக வருந்துகிறேன்.

சில சமயங்களில், மிக அற்புதமான ஒரு சங்கதியைக் கண்டால் வாயடைத்து நிற்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? சொல்லுங்கள். அது மாதிரியான பாடல் இது. பல சீசன்களில் நுழைக்க நினைத்து, எதைப் பற்றி வர்ணனையை எழுதுவது என்று தோற்று போய், இன்று ஒரு வழியாக பதிவேற்றம் செய்துவிட வேண்டும் என்று நினைத்து பதிவெல்லாம் செய்துவிட்டேன். ஆனால் பதிவேற்றம் செய்ய நேற்று இரவு அமரும் போது இணைய கனெக்‌ஷன் வேலை செய்யவில்லை.

இந்த காதல் டூயட்டை நீங்கள் ஏற்கெனவே கேட்டிருந்தீர்கள் என்றால், இதைப் பற்றி நான் ஏன் இவ்வளவு சிலாகிக்கின்றேன் என்று புரிந்து கொண்டு இருப்பீர்கள். கேட்காதவர்கள், இத்துணை நான் எப்படி இந்தப் பாடலை நான் கேட்காமல் விட்டேன் என்று பிய்த்துக்கொள்வீர்கள்.

ஏன் இவ்வளவு build-up? அது தானே?

ஒரு சிறு flashbackக்கு போகலாமா?

123/365 ஞாபகம் வருகிறதா? அதில் கண்டுபிடிக்க முடியாமல் தோற்றவர்கள், இசைஞானியின் புதுமையான இசை creativityல் clean bowled ஆனது ஞாபகத்துக்கு வருகிறதா? இல்லை என்றால் கொஞ்சம் அந்தப் பக்கம் போய் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள் 🙂

இதே மாதிரி வேண்டும் என்றே இன்னொரு புதுமை பாடலை 242/365ல் நுழைத்திருந்தேன். அப்பொழுதும் கூட நிறைய பேர் சறுக்கி தான் விழுந்தார்கள் 🙂

அது போல இப்போது கடைசி சீசனினும் இம்மாதிரி ஒரு புதுமையான + trickyஆன பாடலைத் தரவில்லை என்றால் எப்படி!

இந்தப் பாடல் 100% காதலை உருக்கி ஓடவிடும் அற்புத அமுதசுரபி என்றே சொல்லலாம். அப்படி ஒரு மென்மை. பாடிய காதல் டூயட் பாடகர்கள் பல நூறு டூயட் பாடல்களைப் பாடி இருந்தாலும், இந்தப் பாடலில் அவர்களின் நிதானமான குரலில் வேறொரு உலகத்துக்கு நம்மை அழைத்துச் செல்வார்கள்.

நிற்க.

அங்கே தான் நம் colossus – titan – giant – இசைஞானி இளையராஜா ஒரு அருமையான புதுமையை நுழைத்து வைத்திருக்கிறார். அதாவது, ஆரம்பத்தில் இருந்தே பாடலில் அப்படி ஒரு காதல் ரசம் ததும்பி ததும்பி ஒழுகி ஓடும். It will start so slowly and so romantically. Even the singers will be extremely slow in their diction and rendition. பாடலின் இசைக் கருவிகளே அதை காட்டிவிடும். துணுக்கின் ஆரம்பத்தில் வரும் அந்த நீண்ட fluteஐ பார்த்தீர்கள் என்றால் நன்கு புரிந்து கொள்ளலாம். அதே போல கூடவே வரும் bass மற்றும் lead guitars. ஆனால், நான் கோத்திருக்கும் முதல் இடையிசையை கவனித்தால், அங்கும் ஒரு அருமையான transitionஐ ராஜா வைத்திருப்பார். அருமையான Sax interludesல் அவர் அவிழ்த்துவிட்டிருக்கும் இசையின் உச்சத்தை ஜானகியம்மா தனது குரலாலேயே ரபபப்பப்பா என்று எடுத்து கொடுக்கும்போது, நம்மையும் அறியாமல் ஒரு காதல் பரவசம் பற்றிக்கொள்கிறது இல்லையா? இங்கு அவர் திடீரென்று congosல் தட்ட ஆரம்பிக்கும் போது, சென்ற வருடம் இதே நேரம் 14,000 அடி உயரத்தில் விமானத்தில் இருந்து Skydiving குதித்தபோது முகத்தில் காற்று பிய்த்துக்கொண்டு சென்றது தான் நினைவுக்கு வருகிறது. அந்த தருணங்களை, இன்றைய இசைச் சேர்ப்பில் – குறிப்பாக இடையிசையில் உணர்கின்றேன்.

ஆனால், இரண்டாம் இடையிசை? That is where you are going to see Maestro Ilaiyaraaja’s extreme creativity. இவ்வளவு மெல்லமாக, காதல் ரசத்தை அரும்பிக்கொண்டிருக்கும் இசைச் சேர்ப்பில், திடீரென்று ஒரு பக்கா disco themeக்கும் சென்று அப்படி ஒரு அடிப்பொலி கொடுப்பார். அந்த அடிப்பொலியில் டூயட் தொடரும். You got to be observing that flitting transition, which is impeccably handled.

ஒரே சமயத்தில் ஓடிக்கொண்டிருக்கும் சதாப்தி எக்ஸ்பிரஸில், மாட்டு வண்டியில் பயணித்துக் கொண்டிருக்கும் ஒருவன் எப்படி தாவி ஏற முடியும்? அதே போல், மீண்டும் சதாப்தியில் இருந்து பக்கத்தில் ஓடிக்கொண்டிருக்கும் மாட்டு வண்டிக்குள் இறங்க வேண்டும்.

எங்ஙனம் சாத்தியம்? Even the Laws of Motion can assure us of a fatal fall 🙂

ஆனா, அதை எல்லாம் தாண்டியவர் ஆயிற்றே நம் இசைஞானி. இந்தப் பாடலைக் கேளுங்கள். இரண்டாம் பல்லவியில் இருந்து இரண்டாம் இடையிசைக்கு அவர் தாவும் லாவகத்தை. Sheer ingenuity! Sheer Promethean composition. அதே போல, இரண்டாம் இடையிசை முடிந்து, இரண்டாம் சரணமும் முடித்து, within a nanosecond, he will go back to his original tempo and style. இரண்டு transitionலும் ஒரு துளி பிசகாமல் வெளியே வந்திருப்பது, இவரின் இசை ஆளுமைக்கு முழு ஆதாரம்.

சரி, இதை எல்லாம் விடுங்கள்.

ஆரம்பம் முதல் பாடகர் இருவரின் குரலில், காதல் போதை ஏறிக்கொண்டே போகும். இதை எல்லாம் யார் முடிவு செய்வார்கள்? ராஜாவே சொல்வாரா, நீங்க இப்படி ஏத்தி ஏத்தி, கிறங்க வைக்கற மாதிரி பாடுங்க… நீங்க அந்த வார்த்தையையே உருக்கத்தோட பாடுங்க etc.? எதற்கு கேட்கின்றேன் என்றால், ஒவ்வொரு வார்த்தையிலும் அப்படி ஒரு இனிமையை குழைத்திருப்பார்கள்.

இந்த டூயட்டைக் கேட்டால், வாரம் முழுவதும் இதில் இருந்து வெளியே வரவே மாட்டீர்கள்.

இந்தப் பாடலில் வரும் நாயகியை நிறைய பேருக்கு பிடிக்கும். நமக்கும் தான். 😉 ஆனால் பாவம், அல்ப ஆயுசுல அம்மணி மேலே சென்று விட்டார்கள். அன்று தொடங்கி இன்று ஜியா கான் வரை எத்துணை எத்துணை tragedies. பாவம் 😦 அதுவும் இந்தப் பாடலில் அத்துணை ஒரு அழகுடன் இருப்பார். முதல் சரணத்தில் மட்டும் சற்று உம் என்று இருப்பார். Assistant Directorஇடம் செமையாக வாங்கியிருப்பார் போலும். ஏனென்றால், அது முடிய முடிய இரண்டாம் பல்லவியிலேயே அப்படி ஒரு புன்னகையை பூப்பார் 🙂

இந்தப் பாட்டை கேட்கும் போது ஒவ்வொரு முறையும் எனக்குள் தோன்றுவது, எப்படிங்க ராஜா? எந்த மூடுல இப்படி ஒரு ரோமான்ஸ் வெடியை தயார் செய்தீர்கள். What was going on inside you? 🙂

இந்தப் பாடலை இதுவரை கேட்டதில்லை என்றால், நம்மைத் தான் நாம் நொந்து கொள்ள வேண்டும். இது குறித்தும் தயவு செய்து பின்னூட்டத்தில் சொல்லிவிடுங்களேன். நன்றி 🙂

Have a nice weekend.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Noise-removed. Noise-gate applied. No tempo was altered.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Director of this movie is acting in a leading Tamil TV serial by a major Television Network right now 🙂 That TV Serial is also directed by another renowned TV Serial Director 🙂 Title of this movie will be a starting line from one of the songs of Director Fazil 🙂

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Uruginen Uruginen (உருகினேன் உருகினேன்) from Annen Annen (அண்ணே அண்ணே) (1983)

Advertisements