Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

when I went to India last month, I took my family members to my usual favorite spot in Attappady in Kerala, near Anaikatti — about 40 KM from Coimbatore. அட்டபாடியைப் பற்றி இந்த செய்தி வந்திருந்ததை இன்று படித்தேன்.

Attappady: Centre announces special package of Rs. 125 cr

உடனே இந்த பாட்டு ஏனோ வந்து ஒட்டிக்கொண்டுவிட்டது. அதுவே இன்று புதிருக்குள் வந்திருக்கிறது. மிக மிக மென்மையாக ஆரம்பமாகும் இசையில், tribal சங்கதிகள் அழகாக எட்டிப்பார்க்கும். கோரஸ் அம்மணிகளின் லாலிலாலியில் ஜாலியாக ஒரு வெள்ளியாக இது நிச்சயம் அமையும். Mild percussionல் ஷெனாயும், சந்தூரும் இணைந்திருப்பது பாலில் குங்குமப்பூ போட்டு குடிக்கும் effectஐ கொடுக்கிறது. இல்லையா?🙂

இந்த பாட்டுல வரும் நடிகைக்கு இன்றளவும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் அம்மணி தான் எங்கே இருக்கார்னு தெரியல. இப்படி பல ரசிகர்கள் இருக்கின்றார்கள் என்ற உண்மையை உணர்ந்த பின்பும் நானும் அந்த ரசிகர்களில் ஒருவன் என்னும் சிறிய உண்மையை சொல்லாவிட்டால் அப்புறம் அது சரியாக இருக்காது இல்லையா?😉 இந்த பாடலின் முதல் இடையிசையும் சரி இரண்டாம் இடையிசையும் எனக்கு மிகவும் பிடிக்கும். என்றாலும் முதல் இடையிசையில் இவர் சிகப்பு உடை ஒன்றில் செல்லக் கோபமான பார்வையை உதிர்த்துவிட்டு நாயகனுக்கு கண்ணாலேயே “no” என்று சொல்லும் அந்தக் காட்சியிலும் சரி, ஆரம்பத்தில் மஞ்சள், இடையில் சிகப்பு, பின்னர் வெள்ளை மற்றும் கருப்பு என்று பல வித அருமையான உடைகளில் colorfulஆக வந்தது, அந்தக் காலத்தில் பாராட்டி பேசப்பட்டது. இவரின் அழகான emotingல் இவரை நெனச்சு பாட்டு படிச்சு உருகிப் போன தங்கபஸ்பங்கள் எத்துணை எத்துணையோ…வரே வா.. என்ன ஒரு அழகு…Wait wait..அப்படி எல்லாம் அந்தக் காலத்தில் நிறைய பேர் சிலாகித்து இவருக்காக ஜொள் விட்டது உண்டு என்று கொஞ்சமாக நினைவு வருகிறதுனு சொல்ல வந்தேன்😉 நம்மள தப்பா நெனச்சுடாதீங்க அப்பு (தேவர் மகன் சிவாஜி ஸ்டைல்).

ஹூம்…சரி பாட்டுக்குள் வருவோம்…இரண்டு சரணத்திலும் சீண்டுவது போல் வரும் அந்த புல்லாங்குழலின் ஒலித் துளிகளுக்குள் சொக்கி விழாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட அட்டகாசமான பாடல் இது🙂

இதை breather என்று நான் சொல்லவும் வேண்டுமோ? வெள்ளி ஆயிற்றே. நாளை அருமையான (மறந்து போயிருக்கக்கூடிய) ஒரு பாடல் tie-breakerஆக வரவிருப்பதை முன்கூட்டி அறிவிக்கும் breatherஆ இது என்று கேட்டால் அதற்கு எப்படி பதில் சொல்வது?🙂

Have a nice weekend.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This hero is an actor-cum-director, who is active on Twitter, while the male singer is active on Facebook, as he’s also a instrumentalist besides singing. However, the once famous heroine is clueless in the social world these days.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Odai Kuyil (ஓடைக் குயில்) from Thaalaatu Paadava (தாலாட்டு பாட வா) (1990)