Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

20130606-192124.jpg

இன்றைய பாட்டு எனக்கு மிகவும் சிலிர்ப்பை ஏற்படுத்தும் ஒரு அற்புதமான கர்னாடக சங்கீதத்தில் அமைந்த பாட்டு. என்ன ராகம்னு நீங்க பின்னூட்டத்துல விலாவரியா சொல்லப் போவதைக் காண ஆவலாக உள்ளேன்.

துணுக்கின் ஆரம்பத்தில் ஒலிக்கும் சலங்கை ஒலியைக் கேட்டவுடன், மெதுவா தந்தி அடிச்சானே என் மச்சானே, எதையோ சொல்லத் துடித்தானே கை வச்சானேனு நீங்க சிலாகிச்சு ஓடிட வேண்டாம். ஏன்னா அந்தப் பாட்டை ஏற்கெனவே கேட்டாச்சு 😉

இன்றைய பாடலைக் கேட்டாலே, இருக்கும் இடத்தில் நம்மை சுற்றி ஒரு கோயில் உள்ளது போல மனம் அத்துணை அமைதியாகும். இத்துணைக்கும் இன்றைய பாடல் சற்று வேகமாக பயணிக்கும் பாடல். 311/365ல் கொலுசும் வயலினும் வந்தது. 312/365ல் Group Violins பின்னி படல் எடுத்தது. இன்று வருவதில் சலங்கையும் மற்ற இசைக் கருவிகளும் நம்மை பதம் பார்க்கவிருக்கிறது. சலங்கையின் சங்கீதத்தில் இருந்து வயலினுக்குத் தாவி, மிருதங்கத்தில் தங்கிவிடும் அழகை என்னவென்று சொல்வது!

அருமையான இந்த இசைத் துணுக்கின் முடிவில் நீங்கள் hum செய்தால், பாடலைக் கண்டுபிடித்துவிடலாம். இந்த சலங்கையே நான் உனக்கு கட்டும் தாலியா நெனச்சுக்கோனு நாயகன், ஆட்டத்தை விட்டிருந்த நாயகியிடம் சொல்லும்போது, அவளின் எண்ண அலைகள் எவ்வாறு பின்னோக்கி செல்கிறது என்பதை இசையாலேயே அந்தப் பெண்ணின் உணர்ச்சிகளை சிலையாக வடித்திருப்பார் இசைஞானி.

A fantabulous song from a movie, which had all the songs as super-duper hits of that era. In fact, other songs in this movie easily eclipsed today’s song, I feel 😦

And that’s why I chose it for our Quiz today.

Have a nice day ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Tempo was altered from my source by 2%.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

For the first time, we will have this “Jathi” as the lifeline clue to pinpoint the precise answer. Besides, Maestro Ilaiyaraaja’s younger brother Gangai Amaran wrote all the songs in this movie.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Vaidehi Raman (வைதேகி ராமன்) from Pagal Nilavu (பகல் நிலவு) (1985)