Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

ஒரு வழியாக ஊர் வந்து சேர்ந்து ஆகிவிட்டது. தேங்கியிருக்கும் 303 முதல் 310 வரையிலான மராதான் tagging இன்று முதல் செய்துவிடுவேன். பொறுத்தமைக்கு மிக்க நன்றி.

இன்றைய பாடல், அருமையான டூயட் பாடல். பாடலின் துவக்க இசையில் இருந்தே அதை தெரிந்து கொள்ளலாம். கரனாடக சங்கீத வயலின்களோடு பெண்ணின் கொலுசு சத்தம் போட்டி போட்டுக்கொண்டு போவது, நம் மனத்தினுள் ஒரு வேகத்தை கிளப்பிவிடுவதை தவிர்க்கவே முடியாது. துணுக்கின் நடுவில் வயலின்கள் Western styleல் மாறுவது, அட்டகாசம். எங்கே, எந்தத் தருணத்தில் இந்த மாற்றம் நடைபெறுகிறது என்பதை கவனிக்கவே முடியாத அளவில் அம்சமாக, organicஆக அமைத்திருப்பார் இசைஞானி. கூடவே, Western beats மெல்லமாக வரும். முழுக்க முழுக்க காதல் அரும்பும் இசைச் சேர்ப்பு. அட்டகாசமான பாடல்!🙂 ஆரம்பம் இப்படி என்றால், பாடலின் போக்கு மென்மையோ மென்மை. மெல்ல மெல்ல தவழ்ந்து ஓடும் நதியைப் போன்றே அதன் வேகம் இருக்கும். ஒவ்வொரு இடை இசையும் மணி மணியாய் அமைத்திருப்பார் இசைஞானி.

ஜெட்லேகில் இருந்தாலும், இந்தப் பாட்டைத் தான் ஊர் வந்து சேர்ந்தவுடன் தர வேண்டும் என்று விடுமுறைக்கு முன் கிளம்பும் போதே முடிவு செய்து இருந்தேன். இன்று வெறும் பதிவும், பதிவேற்றமும் மட்டுமே செய்தேன்.

இந்தப் பாடலை கேட்காதவர்கள், கவனமாக lifeline clueவை கவனியுங்கள். நூல் பிடித்துவிடலாம். சரியா?

Have a nice day.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This song was written by Mu. Mehta. Title of this movie has the ellipsis (…) in it🙂

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Nee Enge Sendraalum ( நீ எங்கே சென்றாலும்) from Manasukkulle… (மனசுக்குள்ளே) (2008)