Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

கோவைக்கு திரும்பிக் கொண்டிருப்பதால், இன்று இரவு tagging செய்து விடுவேன்.

இன்றைய பாடலும் நம் அனைவருக்கும் மிகவும் பிடித்த அந்தக் கால மெலடி டூயட். இது எனது வாஷிங்டன் டிசி நண்பருக்கு மிகவும் பிடித்த பாடல் ஆகும். இசைஞானியின் இசையால் எனக்கு அறிமுகமான நண்பரின் நட்பு, இன்று வரை தொடர்கிறது.

இடையிசையின் துணுக்கையே பார்ப்போமே. லீட் கிடாரில் ஆரம்பிக்கும் வரை தான் அதன் simplicityயே. உடனே fluteஉம் violinsஉம் ஜிவ்வென பற்றிக்கொள்ள இந்த இசைக் கலவையின் கோர்வை, நம்மை எங்கோ கொண்டு சென்றுவிடுகிறது. இந்தப் பாடலின் இசைத் துவக்கமும் அப்படித் தான். ஆக, ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை நம்மை மகிழ்விக்கும் சங்கதி நிறைந்த பாடல்களில் ஒன்று தான் இது.

அது சரி. இவ்வளவு அருமையான பாடலை எப்படி படமாக்கி இருப்பார்கள் என்றும் பார்க்கத்தானே வேண்டும்? தொடக்க இசையின் அட்டகாசமான violinsக்கும் flutesக்கும் பனிப்பொழிவில் நாயகனும் நாயகியும் திகார் சிறையில் இருந்து தப்பி ஓடுவது போல ஓடினார்கள், ஓடினார்கள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினார்கள்னு, டையலாக் எழுதி புழுதி வாரி..ச்சீ..பனியை வாரி வீசி விளையாடும் அளவுக்கு ஓடினார்கள்! ஒரு வேளை “படம் எடுத்து முடிஞ்சதும் நீங்களும் இப்படித் தான் ஓடணும்”னு தயாரிப்பாளருக்கு டைரக்டர் காட்டும் directorial touchஆ இது என்று தெரியவில்லை 😉

ஆனா பாருங்க…டைரக்டரும் தயாரிப்பாளரும் அண்ணன் – தம்பி போலிருக்கு. பாவம், என்ன ஆனாங்களோ 😉

சரி நம் புதிரின் இடையிசைக்கு நாயகனும் நாயகியும் என்ன செய்கிறார்கள்? “சேட்டை” சினிமாவில் வில்லன் நாசர் கடுப்பாகும் அளவுக்கு “சேட்டை” செய்கிறார்கள். எப்படி? பனிப்பொழிவில் பனியை வீசுகிறார்கள், தமிழர் வீர விளையாட்டாம் “உப்பு மூட்டையை”த் தூக்கி சுமந்து “டார்ச்சர்” கொடுக்கின்றார்கள், “ரன்னிங் ரேஸ்” ஓடுகிறார்கள், அது எல்லாவற்றையும் விட, பனியில் friction இருக்கிறதா என்று ஆராயும் விஞ்ஞானி போல, சறுக்கி விளையாடி நம்மை மந்திரித்து விடுகிறார்கள். ஏன்யா, அருமையான இசை. தயாரிப்பாளரின் தாராள கொடையாக லொகேஷன்ல யோசிக்கவுமா பஞ்சம்? டைரக்டரயும், கோரியோகிராபரையும், தமிழக மக்கள் உப்புமூட்டை சுமந்து Box Office cliffல் இருந்து தூக்கி வீசாமல் இருந்திருந்தால் சரி. படம் இந்த பாட்டுல ஓடுன நாயகன் நாயகி மாதிரி தியேட்டர வுட்டு ஓடுச்சான்னு சரியா ஞாபகம் இல்ல. பின்னூட்டத்துல சொல்லுங்க புண்ணியவான்களே 😉 உங்க அட்ரஸ் தேடி வந்து உப்பு மூட்டை தூக்கி நன்றி சொல்றேன் ;)))

சுலபம் தானே?

Have a nice week ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Extensively noise-removed. Noise-gate applied. No tempo was altered.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Heroine in this song penned by Kavignar Vairamuthu, was a very popular actress of the 80s. Her name starts with “R” 🙂 Although, this movie had another actress — Silk Smitha, she did not feature in this duet song 🙂

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Nilavondru Kanden ( நிலவொன்று கண்டேன்) from Kairaasikkaran (கைராசிக்காரன்) (1984)

Advertisements