Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இன்று மைல்கல்லை தொடுகிறோம். 300 நாட்களும் நம்முடன் தொடர்ந்தோ, ஒவ்வொரு சீசனிலும் மட்டும் தொடர்ச்சியாகவோ, எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போது மட்டும் என்று பல விதங்களில் #365RajaQuizல் தொடர்பு வைத்துக் கொண்டு வந்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இன்னும் 65 நாட்கள் தான் இருக்கின்றன என்று நினைக்கும்போது பலவித எண்ணங்கள் எழுகின்றது. இருந்தாலும் இன்று, மிக முக்கிய மைல்கல். பத்து மாதங்கள் சுமந்து-னு தமிழ் படங்களில் செண்டிமெண்ட் அம்புகளை எய்துவிடுவார்களே…அதே மாதிரி 😉


Please take a moment to verify the tags for this Season-3 as I will be generating the tags and score-card for 300/365 in a day or two. Also, I will be completing the tagging for all the clues until 299/365 in another 6 hours or so. Please ensure your entries are in.


100/365க்கு மனோ-சுவர்ணலதா.

200365க்கு மலேசியா வாசுதேவன் – மின்மினி.

300/365க்கு? யார் உங்க guess? சரியா வந்ததா என்றும் பின்னூட்டத்தில் சொல்லிவிடுங்கள். 🙂


அப்புறம் பாருங்க. ஒவ்வொரு பாடல் புதிருக்கும் ஏதாவது ஒரு தொடர்பு இல்லாமல் இல்லை. அட்லாண்டாவில் இருந்து கிளம்பும் முன்னர் 299/365க்கு என்று நீர்ப்பறவையாக ஒரு பாடலை கொடுத்த கையோடு, அந்த அருமையான பாடலின் வீடியோவை பார்த்தவர்களுக்கு தலையில் போட்டுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதை தெரிந்தும் புரிந்தும் வைத்திருந்ததால் தான், 300க்கு இதனை பதிவேற்ற முன்னேற்பாடு செய்திருந்தேன். அட, என்னுடைய மன நிலையை நன்கு புரிந்து வைத்திருந்தது போல, நம் @MaestrosWorld விஜய் என்ன சொல்லி இருக்கிறார் பாருங்கள்.

seenathu pattu mEni version 2? inikki vEppala adichikka vEndiyathuthaan by singing maariyamma maariyamma.

வேப்பிலையை அடிச்சுக்க வேண்டி நீங்க கிளம்பும் முன்னர், உங்களுக்காக உடுக்கைய அடிச்சு வுட்டாச்சு இன்னிக்கு. Yes, as usual, our centennial clues are all heavy-percussion based 🙂

அது மட்டுமா? உங்களுக்காக நான் மலையேறி நேத்திக்கடன் செஞ்சு முடிச்சுட்டு தான் வந்திருக்கேன் 😉 ஆண்டவா காப்பாத்துன்னு. இதோ பாருங்க 😉

மேல பாத்தது, இன்னிக்கு கோயம்புத்தூர் — கேரளா மார்க்கத்தில் உள்ள ஆனைகட்டி மலையின் சமீபத்தில் உள்ள அனுவாவி சுப்பிரமணியர் கோயிலுக்கு போய்ட்டு கீழே வந்தப்போ காவடியைத் தூக்கிகிட்டு மேலே சென்ற பக்த கோடிகளின் அடிப்பொலி தான்.

என்ன தான் சொல்லுங்க… நம்ம ஊர் அடிக்கு இணை ஒன்னும் இல்லை. என்னமா, அடி பின்னி எடுத்துட்டாங்க. iPhoneல shoot பண்ணின எனக்கே சாமி இறங்கின மாதிரி ஒரு பீலிங் வரவே, 30 நொடியில நிறுத்திட்டேன்.

எப்படி எல்லாம் ஒன்னு கூடி வருது பாருங்க. இன்றையப் புதிரில் வரும் அடிப்பொலியை நான் பதிவு செய்தது 20 நாட்களுக்கு முன்! இன்று நான் முருகன் கோயிலுக்கு போவேன் என்றோ, அங்கு காவடியைத் தூக்கிக்கொண்டு ஒரு பக்தர் படலம் அடிப்பொலியோடு மலை மீது ஏறுவார்கள் என்றோ நினைத்து கூட பார்க்கவில்லை. எல்லாம் கடவுள் அருள் 🙂 வேறு என்ன சொல்வது.

இன்னொரு விதமாகவும் இதைப் பார்க்கலாம்.

நேத்தைய 299/365க்கு பரிகாரமா இன்றைய 300/365 😉

இன்றைய மைல்கல் பாடலுக்கும், முழு பாடலின் இசையை ஒன்றாக கோத்திருக்கின்றேன்.

எல்லா வகை இசைக்கருவிகளும் இதில் உண்டு. அதுவும் 1:33ல் இருந்து இறுதி 2:02 வரை வரும் இசையைக் கேட்டால் எவராலும் உடலை அசைக்காமல் இருக்கவே முடியாது. என்ன அடி, தர்ம அடி. அடிப்பொலியின் உச்சம். இம்மாதிரி மண்ணின் இசையில் rhtymsஐயும் percussionஐயும் நம் இசைஞானி இளையராஜா போல் சேர்த்துத் தர யார் இருக்கிறார்கள், சொல்லுங்கள்!

இந்த இசையை இவர் பதிவு செய்யும்போது எப்படி தான் இசைக் கலைஞர்கள் உட்கார்ந்து கொண்டே வாசித்தார்களோ!

Have a nice weekend. Enjoy #365RajaQuiz. Thank you very much for being a part of us.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Extensively noise-removed. Noise-gate applied. No tempo was altered.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

A National-award winner has sung this song for a movie that depicted the controversial ideas behind Theism and Atheism.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Aathi Sivan (ஆதிசிவன்) from Kadavul (கடவுள்) (1997)

Advertisements