Tags

, , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

என்ன தான் ஊர விட்டு போயிருந்தாலும், அட்லாண்டால உக்காந்துகிட்டே இந்தியாவில் நடக்கும் நடப்புகள பத்தி ஓரளவுக்கு தெரிஞ்சு வச்சிருப்பதில் பல வித advantages இருக்கு.

பாருங்க..மேகத்துல இந்த பாட்ட அட்லாண்டால இருந்து கிளம்புறதுக்கு முன்னாடி ஏத்தினது எவ்வளவு சரின்னு!

வெயில் பிச்சு உதறுது. மூச்சு உஷ்ணம் ஏறி உருகுதே மருகுதேனு எல்லாம் பாட முடியாம, அரிக்குதே, சொரியுதேன்னு பாடற அளவுக்கு செம வெயில் 😉 ஆனா, இங்க கோயம்புத்தூர் மக்களுக்கு 2 நாளுக்கு முன்னால மழை பெய்தது சுகமா இருந்துச்சு.

இசைஞானியின் இசை மழையில் நனைந்து கொண்டு வரும் நமக்கு, இன்றைய பாடல் செம ஜாக்பாட்! பாட்டு முழுவதும் நாயகனும் நாயகியும் ஒரே shower மழையிலும் மேக மழையிலும் நனைந்து கொண்டே பாடி, நிறைய Phaneesh Murthyகளுக்கே சுளுக்கு எடுத்துக் கொண்டிருப்பார்கள் 😉

ஜெய் ஆஞ்சனேயா 😉

அந்தக் காலத்தில் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்க, எப்படி இப்படி ஒரு பாடல் என்று யோசிப்பதால் மட்டுமே (??) இந்தப் பாடலை இன்று தருகிறேன்.

உருகி உருகி, நனைந்து நனைந்து, இந்தப் பாடல் அகில இந்திய வானொலியில் எங்களை எல்லாம் குளிர்வித்த அளவுக்கு தூர்தர்ஷன் இதனை இருட்டடிப்பு செய்ததற்கு நம் கண்டனங்களை(?) முதலில் சொல்லிவிடுவோம்.

ஆரம்பமே வயலினில் ஜில்லென்று ஆரம்பமாகும் அம்சமான பாடல். இன்று இந்த பாடலுக்கு வரும் பின்னூட்டங்களில் இருந்து நீங்களே கண்டுகொள்வீர்கள். இன்றைய புதிருக்கு சோப்புடன் யாரும் வந்துவிடாமல் இருந்தால் சரி. அந்த அளவுக்கு showerல் நனைந்து கொண்டே டூயட் பாடியும், ஆடியும் கூத்தடிச்சிருப்பாங்க காதல் ஜோடி. இந்த நாயகி, இன்று டிவி சீரியலில் எல்லாம், செம கண்ணியமான ரோல்களில் வருவதாக கேள்விப்பட்டேன். நாட்டுக்கு நல்லது நடந்தால் சரி 😉 காதல் இளவரசனாக வலம் வந்த நாயகன் காதல் ரசம் கொட்ட, நாயகியோ நைட் பேண்ட், சட்டையோடு ஷவரில் நனைந்து கொண்டே சொக்குவார். Bath-tubம், Geyserம், Wallpaperம் அன்றைய காலகட்டத்துக்கு புதுசு என்றாலும், bathtubல் shower-screen இல்லாமல் படமாக்கிய டைரக்டருக்கும், ஆர்ட்-டைரக்டருக்கும் ஒரு குட்டு வைத்துவிடுவோம் 😉

தொடக்க இசையில் இருந்து, இந்த இடையிசை வரையில் ஷவரில் நனைந்து கொண்டு இருந்ததால் ஜலதோஷம் பிடித்ததோ என்னவோ, டைரடக்கர், நாயகன் + நாயகியை கடற்கரையில் ஓட விடுவார் — நீச்சலுடையில் நாயகியும், அந்தக்கால ராம்ராஜ் சங்கதியில் நாயகனையும்! ஆண்டவா..

அது சரி, நமக்கு எதுக்கு இந்த வம்பு. பாட்டை கவனிப்போம் 😉

இப்படியாக போகும் பாடலின் இன்னொரு இடையிசையில், கடற்கரையில் வரும் நீரில் நாயகனும் நாயகியும் கபடி விளையாடும் விதமாக பாடலை எடுத்திருக்கும் டைரடக்கரின் கருத்தாழத்தை என்னவென்று சொல்வது. அதாவது, காதலித்த பின்னர், மொய்யும் பொய்யுமாக திருமணம் நடந்து முடிந்த பின், அதே கடற்கரைக்கு ஜோடியாக தேனிலவுக்கு கணவனும் மனைவியுமாக வந்தாலே, அங்கிருந்தே வாழ்க்கையில் கபடி ஆட்டம் ஆடித்தானே ஆக வேண்டும் என்று இவர் கலை நயத்தோடு சொல்லியிருப்பது, செம director touch. Stroke of a genius! ஆகா…என்னெ அழகு ;))

ஆக இந்த இடையிசை வரை கடலிலேயே மேய விட்ட டைரடக்கருக்கு, இதுவும் போர் அடித்துவிடவே, ஆலங்கட்டி மாமழையாம் rangeக்கு மழையில் நனைந்து கொண்டு பாட நாயகனையும் நாயகியையும் போர்க்கால அடிப்படையில் முடுக்கி விட்டுவிடுவார். ;))

இப்படி பட்ட தண்ணீர் தண்ணீர் பாடல்களைத் தேடி தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான்நு தலைல துண்ட போட்டுக்கிட்டு எத்தினி பேர் படத்த பாத்தாங்கனு தெரியாது, ஆனா, இந்தப் பாட்டு செம ஹிட்.

நம்ம இசைஞானி கிட்ட டைரக்டர் எப்படி இந்த சிச்சுவேஷனை விளக்கியிருப்பார்? பஞ்ச பூதங்களையும் தாண்டிய காதல் டூயட் ராஜா இது. எல்லாம் தண்ணி தான். ஷவரில் இருந்து ஆரம்பித்து கடல் வழியா மழைக்குள் போறோம். ஒரு பய புள்ள நாளையில் இருந்து குளிக்க மாட்டேன்னு அடம்பிடிக்க மாட்டான். அந்த மாதிரி ஒரு பாட்டு வேணும். பாட்ட கேட்டாலே, குளிக்கணும்னு ஒவ்வொருத்தனுக்கும் ஆசை வர்ற மாதிரி பாட்ட choreograph பண்ண போறேன் Raaja. அதனால நீங்க Guitar, Violins, மெல்லிய drumsனு எது போட்டாலும், அதுக்கு தகுந்த மாதிரி கபடி, கில்லிநு நெறைய steps ஐ கில்லியா படமாக்க நான் readyஆ வச்சிருக்கேன்.

LOL 🙂

Today is also the penultimate drum-roll for Season-3’s finale! Tomorrow will mark the conclusion of Season-3, which was special in several aspects. It was competitive, tough, but, also had more relaxed clues and more full-length clues that did not feature in earlier seasons.

Have fun 😉

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Extensively noise-removed. Noise-gate applied. No tempo was altered. Encoded via Goldwave with repeated noise removal.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

S. Janaki would have paired with an unconventional singer for this duet. His name’s second syllable rhymes perfectly with the hero’s name’s second syllable 🙂

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Oru Naalil Malarndhene (ஓரு நாளில் மலர்ந்தேனே) from Unnai Thedi Varuven (உன்னைத் தேடி வருவேன்) (1985)

பி.கு: தம்பி ராமகிருஷ்ணா, கூச்சப் படாமல் மற்றவர்களுக்கும் யூடியூப் (தொந்)தரவு தந்து உதவவும்னு கோழி கூவுது மலேசியா அண்ணன் ஸ்டைல்ல சொல்ல ஆச தான்.. இருந்தாலும்…பார்க்க துணிபவர்களின் Homework exerciseஆக விட்டுவிடுகிறேன் 😉