Tags

, , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இன்றைய பாடல், அருமையான காதல் சூடேற்றும் டூயட் பாடல்.

இது வேறு ஒரு மொழிப் படத்தில் இருந்து டப்பிங் செய்யப்பட்ட படத்தின் பாடல். அதனாலேயே காதல் காரம் சும்மா கும் என்று இருக்கும். மூலப் படத்தில் பிய்த்துக்கொண்டு போன ஹிட் பாடல் இது. இந்தப் படத்தில் வந்த அனைத்து பாடல்களும் செம ஹிட். மாபெரும் தயாரிப்பாளரின் பிரம்மாண்ட படைப்பாக வந்த படத்தின் பாடலின் இடையிசையைத் தான் நீங்கள் கேட்கின்றீர்கள்.

கோரஸ் பாப்பாக்களின் ஏஏஏஏ யைச் சொல்வதா, அல்லது கோரஸ் பாபாக்களின் சக்கு..சக்கு..சக்கு பற்றி சொக்கிப் போய் பேசுவதா!😉 பாடலை முழுக்க கேட்டவர்கள், இந்தப் பாடலின் bass guitarஐப் பற்றி பேசாமல் இருக்கவே மாட்டார்கள். அப்படி ஒரு அருமையான கலக்கல் stringsன் சிறப்பம்சம் மிகுந்த பாடல் தான் இது..

காதல் போதை தலைக்கேறிவிட்டது நாயகனுக்கும் நாயகிக்கும். அப்புறம் என்ன! இந்தப் பாட்டு வந்து தானே ஆகும்😉 அருமையான கோரஸ் குரல்களுக்கும், கிடாரின் இசைக்கும் நடுவே, மெல்லிய வயலின்கள் நுழைவது தான் stroke of a genius.

வெய்யிலின் வெப்பம் கூடிக்கொண்டே போகும் இந்த நாளில், காதல் சூடேறும் இந்தப் பாடல் மேகத்தில் இருந்து வருவது, நன்னாரி சர்பத்துடன் எழுமிச்சை சார் பிழிந்து குடிக்கும் effectஐ, இந்தப் பாடல் ஏற்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை.

இந்தப் பாட்டுக்கு வேணும்னா விசில் போடலாம்😉

Have a nice week ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Extensively noise-removed. Noise-gate applied. No tempo was altered.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This movie won some prestigious awards for Maestro Ilaiyaraaja. First word of the song has a famous tourist spot of India.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Kanyakumari (கன்னியாகுமாரி) from Vaaliban (வாலிபன்) (1992)