Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இன்னும் 4 நாட்களில் இந்த சீசன் முடிவு பெறும். அதன் பின் தொடங்கும் இறுதி சீசன், படு விறுவிறுப்பாகச் செல்லும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.

நான் தற்சமயம் கோவையில் உள்ளதால், இணையத்தில் என்ன நடக்கிறது என்று தெரிவதில்லை. சிலர் DMல், இந்த தளத்திலும் பாடல்கள் ஒலிப்பதில்லை என்றெல்லாம் சொல்கின்றார்கள். என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. தயவு செய்து, ஏதேனும் இடர்கள் இருந்தால், பின்னூட்டத்திலேயே சொல்லுங்கள். முடிந்த வரைக்கும் அம்மாதிரி இடர்களுக்கு ஏற்றவாறு என்னால் முடிந்ததை, புதிருக்காக சற்று tone down செய்ய முடிந்தால், செய்கிறேன்.

இன்றைய பாடல், அருமையான டூயட் பாடல். அகில இந்திய் வானொலியில் பல முறை கேட்ட பாடல். இந்த டூயட்டில் மலேசியா வாசுதேவன் அண்ணன், ரம்யமாக, அடக்கி வாசித்து பாடியிருப்பார். மெலடி இசைக் கருவிகளான வயலின்கள் உண்டு. கிடாரும் உண்டு. அதை விட, நீண்டு கொண்டு வரும் அந்த புல்லாங்குழல் இசை படு sweet. சந்தூரின் வாசிப்பிலும் சரி, இசையின் மெல்லமான நடையிலும் சரி, காதல் சுரந்து கொண்டே வரும் 🙂

இந்தப் பாடல் மட்டுமல்ல, இந்தப் படமும் அட்டகாசமான ஹிட். வசூலை அள்ளிக் குவித்தது. அனைத்து தரப்பு மக்களும், தியேட்டருக்கு படை எடுத்து, அந்தக் காலத்தில் பார்த்தார்கள்.

என்ன, சுலபம் தானே?

Have a nice week ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Extensively noise-removed. Noise-gate applied. No tempo was altered.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Title of this Kallapetti Singaram starrer, will remind one, about a famous episode in KambaRamayana.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Pala Naal Aasai (பல நாள் ஆசை) from Indru Poi Naalai Vaa (இன்று போய் நாளை வா) (1981)