Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இன்று என் மகளின் ஆறாவது பிறந்த நாள். அவளுக்கு என்று ஒரு Playlistஐ CDயில் பதித்து இருந்தேன். 2-3 மாதக் குழந்தையாக இருக்கும்போதே, குயில் பாட்டு தான் அவளுடைய favoriteஆக இருப்பதை தற்செயலாக உணர்ந்தேன். அது, இசைஞானியின் குரலில் வரும் வர்ஷன்🙂 அதில் அந்தக் குயில் கூவும் ஓசை வரும் இடத்தில், மிகவும் கூர்ந்து கேட்டு ஒரு புன்னைகையை உதிர்ப்பாள். அழ ஆரம்பிக்கும்போது அதை போட்டுவிட்டால் போதும், அழுகை உடனே நிற்கும். Pacifierஏ தேவைப்படாத குழந்தையாக வளர இது ஒன்றே காரணம் என்றே நினைக்கின்றேன். அந்த வரிசையில், இன்று வரும் பாடல் இரண்டாவதாக வரும். இந்தப் பாடல் வரும்போது, கண் அயர ஆரம்பிக்கும். இருந்தாலும் முழுவதுமாக தூங்கிவிடமாட்டாள். இதே படத்தில் வரும் வேறு ஒரு பாடல் ஆரம்பித்து, முடிவதற்குள் உறங்கி இருப்பாள். இந்த CDயில், வேறு பல பாடல்களும் பதிவு செய்து வைத்திருந்தாலும், அவற்றை கேட்கக்கூட முடியாமல், உறங்கிவிடுவாள்.

ஆக, இன்றைய பாடல் புதிரில் breatherஆக வருவதற்கு காரணம் இது தான். இந்தப் பாடல் எனக்கும் மிக மிக பிடிக்கும். பாடியவர்கள் நமக்கு மிகவும் பிடித்தவர்கள் ஆயிற்றே. அதுவும், இந்த ஆண் பாடகர் பாடியிருக்கும் பாங்கை கவனித்தால், வேறு எவரேனும் இப்படி பாடியிருக்க முடியுமா என்று யோசித்தே, நமக்கு பல பிறந்த நாட்கள் கண்டுவிடும் அல்லவா?

குழந்தைகளுக்கும் இசை உணர்வு உண்டு. அது ரசனை என்ற வட்டத்தை எல்லாம் தாண்டியது. அவர்களின் unbiased உலகில், அவர்களை கவரும் வகையில் எது இருக்கிறதோ, அவை கண்டிப்பாகவே உன்னதமாகத் தான் இருக்க முடியும் என்பது என் கருத்து. இம்மாதிரி சில நிகழ்வுகளை @RozaVasanth அவருடைய மகனை வைத்து அவரது வலைப்பதிவில் உரையாடியது நினைவுக்கு வருகிறது.

Have a nice weekend.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Extensively noise-removed. Noise-gate applied. No tempo was altered.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This movie won more than one national award, besides, critical acclaim and box-office revenues.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Vetti Veru (வெட்டி வேரு வாசம்) from Muthal Mariyathai (முதல் மரியாதை) (1984)