Tags

, , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

அன்னையர்கள் அனைவருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துகள்.

Please do comment on whether you guessed this as the entry song for Mother’s Day today. I want to see how much our thoughts were alike🙂 Also, please do let me know if you have heard this song before. Thanks.

இன்றைய பாடலும் அன்னையர் தினத்துக்கான சிறப்புப் பாடல் தான். நடுவில் பாதை தவற பல காரணங்கள் வருவதுண்டு. என்றாலும், நல்லவர்களாக வளரவும், வாழவும், உய்யவும், உறுதுணையாக இருப்பது நல்ல அம்மாக்களின் வளர்ப்பே என்பது என் தனிப்பட்டக் கருத்து. ஒரு குழந்தையை சுமந்து பெற்றுவிடுவதால் மட்டும் ஒரு தாய் நல்ல தாயாகிவிடமாட்டார் என்பதை நிறைய கட்டங்களில் பார்த்திருக்கிறேன். குறிப்பாக சிறார் நீதிமன்றத்தில் எனது அலுவலில், பல தரப்பட்ட தாய்களைப் பார்த்திருக்கிறேன். அல்லவை நீக்கி நல்லவற்றை பார்க்க விழையும் அந்த நல்ல குணமும் நம்மைப் பெற்றவளால் தான் வருகிறது என்பதும் எனது தனிப்பட்ட கருத்தே.

இன்றைய பாடல், நேற்றைய பாடலில் இருந்து வேறுபட்டது.

நேற்று, தாய் தனது குழந்தைக்காக தாய்மையுடன் பாடினாள்.

ஆனால் இன்று, மகள் தனது தாயைக் குறித்து உயர்வாகப் பாடுகிறாள். பாடலை எழுதின பாடலாசிரியப் புண்ணியவான் யாரோ…அவர் வாழ்க. அருமையான வரிகள்.

முதன்முறை கேட்டதில் இருந்து இந்தப் பாடலுக்கு நான் அடிமை! பாடலில் தாய்மையின் பாசமும், காதலின் உணர்வும் கலந்து வருவதாக பாடல் இருக்கும். என்னுடைய தாயைப்போல யாராவது இருப்பார்களா? என்ற ஒரு உயர்வு தற்பெருமை தான் இந்தப் பாடலின் மையப் பொருளாக வரும். அருமையான பாடலுக்கு மிக அடக்கமாக வாசிக்கப்பட்ட இசைஞானியின் இசை…ஆகா…அத்துணை அருமையாக இருக்கும்.

தாய், தந்தை, உறவுகளை விட்டுவிட்டு மேற்படிப்புக்காக அமெரிக்கா வந்த புதிதில், வாழ்க்கையை வெறுத்திருந்தபோது, இந்தப் பாடல் ஒரு தீர்க்கமான focusஐயும், மன ஆறுதலையும் தந்தது. புளோரிடாவில் படித்துக்கொண்டிருந்தபோது, என்னுடைய நண்பரின் காரில் எந்த ஒரு விலாசமும் தெரியாமல், map, GPS எதுவும் இல்லாமல், ஒட்டிக்கொண்டு போய், காணாமல் போய், வழி பிடித்து திரும்ப வருவது எனக்கு ஒரு thrill கலந்த பொழுதுபோக்காக இருந்தது. The place I was in – Gainesville, Florida — is one of the richest sites of Natural History and geological formations. அதனால், நிறைய ஓடைகளும், sinkholesஉம், parksஉம் என்று பல விசயங்களை இம்மாதிரி கண் மண் தெரியாமல் ஓட்டிக்கொண்டு போனதில் கண்டதுண்டு. இந்தப் பாடலை, இன்று நான் கேட்கும்போது, அந்தக் காலத்தில் iPhonesஉம், instagramsஉம், GPSஉம் இல்லாததால் எதையும் படம்பிடிக்க முடியாமல் போனாலும், மனக்கண் முன்னே டக் என்று வந்து உட்கார்ந்துகொண்டு விடுகிறது. இது தான் இசைஞானியின் இசையின் வலிமை போலும்! ஆறுதல் ஒரு பக்கம் என்றாலும், அந்த இசையை ரசித்தத் தருணங்கள் கூட memorialize ஆகி permanently etchedஆக நம் மனத்தில் பதிந்தேவிடுகிறது.

அம்மாவின் அன்பைப் போல்….

Have a nice week ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

2 interludes have been woven together in this clue.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Enjoy this FANTASTIC, idyllic, bucolic song from a FANTASTIC movie, but, watch it only if you are serious about serious movies with a poignant narrative! This movie is about the clamor of the poor and child-labor that can move you to tears. A famous Government of India media organization co-produced this movie, which also was screened at at least one famous International Film Festival. This particular song and its lyrics received wide recognition at that time. This song, will move ANYBODY! Happy Mother’s Day.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Kaalayila Kan Muzhichchu (காலையில கண் முழிச்சு) from Karuvelam Pookal (கருவேலம் பூக்கள்) (2000)