Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இன்றும், நேற்றைய பாடல் போல, அந்தக் காலத்தில் பட்டையைக் கிளப்பிய பாடல் தான்.

இதன் இசை அமைப்பிலேயே நீங்கள், நேற்றைய பாடல் போல இதிலும் சங்கதிகள் பல இருக்கிறது என்பதை புரிந்துகொள்வீர்கள். நேற்றைய பாடலில் ஜானகியம்மா பட்டையைக் கிளப்பினார். அல்லவா? அதே போல தான் இன்றைய பாடலிலும். நான் அடிக்கடி சொல்வது போல, ஒரு பாடலில் உள்ள சில சங்கதிகள், வேறொரு பாடலை நினைவுபடுத்தும். அப்படி நடக்கும் போது, நான் அதையே அடுத்த பாடலாக தருவதற்கு காரணம், பின்னாட்களில் இதை playlistஆக சிலர் கேட்டு அனுபவிக்கக் கூடும். அப்போது, இது புதிரையும் தாண்டி entertainment value பெற்றுவிடுகிறது. அப்போது, அம்மாதிரி neural connections, ரசிப்பதற்கு இன்னும் ஏற்புடையதாக இருக்கும். அது மட்டுமல்ல. பதிலைத் தேடி அலைவோருக்கு இது உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையாலும் தான்.

பொதுவாக திங்களில் சற்று எளிமையான பாடல் தான் வரும். இருந்தாலும், கிட்ட வர வர, பாடல்கள் நிறைய தர வேண்டியுள்ளதால், அவ்வப்போது அம்மாதிரி breathersஐத் தாண்டி செல்ல வேண்டியுள்ளது.

இந்தத் துணுக்கில் ஆரம்பமே எப்படி இருக்கிறது பார்த்தீர்களா? கிடார் கிச்சடி என்று பெயர் வைக்கக் காரணமே அது தான். This is a smorgasbord of several instruments Maestro has used in this sequence. ஆரம்பம் லீட் கிடாரில் ஆரம்பித்தாலும் பாஸ் கிடார் நன்றாகவே உள்ளதை கவனியுங்கள். துணியை அடித்து துவைப்பது போன்ற ஒலிக்கு அடுத்து வருவது கிடார்கள். அங்கே மிகவும் அருமையாக ஜானகியம்மாவும் அவருடன் சேர்ந்து கோரஸும் ஒரு கலக்கு கலக்குகிறார்கள். இருந்தாலும் whattay guitar! அது தான் இந்தப் பாடலைக் கண்டுபிடிக்க உதவப் போகிறது. அப்படி இல்லையென்றால், ஜானகியம்மாவின் ஆசா….

கண்டுபிடிக்க சுலபமாக இருக்கட்டும் என்று இதையும் சொல்லிவிடுகிறேன். This is a prelude🙂

கிடார் முடிந்து சந்தூரும், மத்தளமும் கூட வருகிறது. எங்கு முடியும் என்று எதிர்பார்க்கின்றீர்களோ, அங்கு முடியாமல் தொடர்வது சிறப்பு🙂 அருமையான பாடல். ஒரு பெண்ணின் ஏக்கப் பாடல்.

இதற்கு முன்னர் இந்த அருமையான பாடலை கேட்டிருக்கின்றீர்களா? இல்லை என்றால், இனியாவது கேளுங்கள். அருமையான பாடல்.

Have a nice week ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Extensively noise-removed. Noise-gate applied. No tempo was altered.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This song was written by Gangai Amaran. Movie title will have a connotation to a “disability” (ஊனம்).

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Santhanam Kondaanga (சந்தனம் கொண்டாங்க) from Oomai Ullangal (ஊமை உள்ளங்கள்) (1980)