Tags

, , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம் நண்பர்களே.

இதை எழுதும் போது காலை நேரம் 1:30🙂 தவிர்க்க முடியாத காரணங்களால் taggingல் தாமதம் ஏற்படுகிறது. அனேகமாக, இந்த மாதம் முழுவதும் கொஞ்சம் taggingல் தாமதம் ஏற்படலாம். க்ளூக்கள் தாமதமின்றி வெளிக் கொண்டு வருவது தான் என் முதல் priority. சரியா?🙂

இன்றைய பாடலின் படப் பெயர் வேண்டுமானால் எனக்குத் தெரியுமே தவிர, அதற்கு மேல் அவ்வளவாகத் தெரியாது😉. அதிகம் தெரியாத இந்தப் படத்தைப் பற்றி எழுத முடியாது என்ற காரணத்தினால், இசை முடிந்ததும், பாடகியின் குரலில் இரண்டு வரிகளை சேர்த்திருக்கிறேன். கண்டுபிடியுங்கள் பார்ப்போம்🙂

ஆனால், இந்தப் பாட்டு செம கில்லின்னு கேக்கும்போதே உங்களுக்கும் தெரியும். சிறு வயதில் இதை வானொலியில் கேட்டிருக்கிறேன். அவ்வளவு தான். பார்த்ததில்லை. இந்தப் பாட்டை நான் கொடுக்க காரணமே, இந்தத் துணுக்கில் வரும் இசைக்கருவிகளின் கலவையில் இருந்து கண்டுகொள்ளலாம். முதலில், percussion. இந்த rhythm தான் — அந்த அடி — பாடல் முழுவதும் வரும். பிறகு, இசைத்துணுக்கில் ஆரம்பமாகும் அதகள guitars. அடேங்கப்பா.. என்னமா lead guitarsல் துவைத்து எடுத்துவிட்டு, Saxல் நன்றாக உழுக்கி எடுத்துவிட்டு, அப்படியே Electric guitarக்கு தாவுகிறார்!

அங்கே நம்ம ஜானகியம்மா ஒரு கிறக்கத்தோடு ஓ பதினாறு வருஷம் தான்னு பின்னி படல் எடுப்பாங்க பாருங்க. பாட்டு எப்படி வேகமா போகும் அதுக்கு மேலன்னு விவேகம் நிறைந்த மக்களாச்சே, உங்களுக்கு தெரியாது?😉

என்ன, கண்டுபிடிச்சுடலாம் தானே?😉

Have a nice Sunday.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Extensively noise-removed. No tempo was altered.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This duet is for Actor Suresh.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Tholin Meethu (தோளின் மீது) from Ullam Urugudhadi (உள்ளம் உருகுதடி) (1983)