Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

பொதுவாக, வெளியில் இருப்பவர்கள் சுலபமாக நம் மீது இருக்கும் நல்ல எண்ணத்தால், மன்னித்துவிடு, மறந்துவிடு, விட்டுத்தள்ளு என்று சொல்லிவிடலாம். ஆனால், நம்பிக்கைத் துரோகம் போன்ற ஒரு கொடிய செயலைச் செய்த எவரையும் அவ்வளவு எளிதில் மன்னித்துவிட முடிவதில்லை. அந்த நிலையை எட்டியவர்களைத் தாரளமாக மகான் என்றே அழைக்கலாம். இல்லையா? William Blake சொன்னதைப் பார்த்துவிடுவோமா?

It is easier to forgive an enemy than to forgive a friend.”
― William Blake

இது தான் இன்றைய இசைத்துணுக்குக்கான hint🙂

இந்தப் பாடலில் வரும் இசைத்துணுக்கில் அந்த ஆக்ரோஷம், கோபம் — குறிப்பாக பாசம் கலந்த கோபம், என்று சகல நுணுக்கங்களையும், இசைஞானி காட்டிவிடுவார். Guitarல் ஆரம்பிக்கும் இந்த இசை percussion உதவியோடும் violinsன் கோப மீட்டலிலும் தொடரும். நடுவில் வரும் இசைக்கருவியின் பின்னணியில் வயலின்களின் சுகமான மீட்டலில் அந்த பாசம் அதீதமாக வெளிப்படும். ஆரம்ப கிடாரில் கோபம் கொப்பளிக்கும். நமக்கு மிகவும் வேண்டிய உறவோ, உறவினரோ, நண்பனோ நம்பிக்கைத் துரோகத்தை செய்யும்போது, ஒரு பக்கம் கோபமும், இன்னொரு பக்கம் அவர் மீதான அன்பு கலந்த வெறுப்பும் என்று பலவித உணர்வுகள் மேல் எழும்பும். இறுதியில் கோபமோ, மன்னிப்போ வெல்லலாம். அல்லது அந்த மனப்போராட்டமே தொடர்ந்து கொண்டும் இருக்கலாம். இந்த moral dilemmaவை தான் இசைஞானி இந்த இசையில் எவ்வளவு அழகாகவும், naturalஆகவும் இசைத்தே காட்டிவிடுகிறார்.

ஒவ்வொரு இசைக்கருவியையும் அவர் மீட்டியிருக்கும் பாங்கினை கவனித்துக் கேட்டால் புரியும்.

இன்றும் சுலபம் தான். ஆனால் சனி, ஞாயிறு அப்படி இருக்காது. மேடு ஏறியே ஆகவேண்டும் மக்களே. Stay hydrated😉

Have a nice Friday.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

KJ Yesudas sang this song penned by Panchu Arunachalam.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Annan Enna Thambi Enna (அண்ணன் என்ன தம்பி என்ன) from Dharmadurai (தர்மதுரை) (1990)