Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

A friend messaged me via Twitter, 2 days ago,

It’s like reminding myself :)) focus! focus!

இப்படித் தான் இன்றைய க்ளூவைக் கொடுக்க வேண்டும் என்று ஒரு உந்துதல் பிறந்தது. In a way, as a mark of respect, to what I too believe as the most important tenet of our times: focus!

Even well-intentioned, altruistic, talented individuals can skid on a slippery slope, when they lose focus. Either they take on too many things, or, go after too many things.

இந்த க்ளூ வருவதில், விடை தெரிந்தவர்களுக்கு ஒரு ஆச்சரியம் இருக்கலாம். இருந்தாலும், மிச்சம் இருக்கும் நாட்களில், மிக மிக கவனமாக பொறுக்கி எடுத்து தரவேண்டி இருந்தாலும், இதைத் தந்தே ஆகவேண்டும் என்று நினைத்ததற்கு காரணம், இந்த “ஓம் ஓம் அரி ஓம்” பின்னணி இசை, சில பேருக்கு தெரியாமல் இருக்கலாம். அது காட்சிக்கு ஏற்றாற்போல செதுக்கிய இசைஞானியின் திறமையை நமது experts சிலாகித்து பகிர்ந்துகொள்ள ஒரு வாய்ப்பாகவும் இருக்கட்டுமே என்று இன்று களம் இறக்குகின்றேன்.

கொலையாளியைப் பற்றிய விபரங்களை வாய்வழியே கேட்டு, முதன் முதலில் ஒரு sketch வரைவதில் தான், குற்றவாளியைப் பிடிப்பதில் காவல்துறைக்கு ஒரு leadஏ கிடைக்கும். இது தொன்று தொட்டு இருந்து கொண்டு வரும் விசயம் தான். அதே யுக்தி தான் இந்த சீனிலும். கொலையாளியை நேரில் பார்த்த ஒருவன் சொல்லும் அங்க அடையாளங்களை வைத்தும், அவனை ஏற்கெனவே இவன் சந்தித்ததை யோசித்து, யோசித்து வரைவான். அங்ஙனம் வரையும் போது, அவன் மனத்தினுள் நிறைய demons அவனை distract செய்யும். அதைத் தடுக்கும் பொருட்டு இறந்தவனின் இறுதி ஊர்வலத்தில் ஓம் ஓம் அரி ஓம் மந்திரத்துக்கு நடுவில் அந்தக் கொலையாளியை ஏதேச்சையாக பார்த்ததை மனத்தினுள் கொண்டு வந்து நிறுத்தி, ஒரு தீர்க்கமான focusஓடு, எதுவும் அவனை distract செய்யாத வண்ணம் சிரத்தை எடுத்து வரைவதாக காட்சியை டைரக்டர் அமைத்திருப்பார். அந்த சீனுக்காக இசைஞானி பட்டையைக் கிளப்பியிருக்கும் இசை தான் இது. Congo drumsல் எடுக்கும் அடி, ஆண்கள் கோரஸோடு வேகத்தை எடுக்க, அங்கே synthம், violinsம், guitarsம் (கில்லிங்க…என்ன கிடார்…அடேங்கப்பா) என்னமா இசைக் கச்சேரியை கச்சிதமாக ஆரம்பிக்கிறது பாருங்க. ஒவ்வொரு இடத்திலும் இசைக்கருவியை அவர் மெல்லமாக சேர்த்துக்கொண்டே வருவார். இசைக் கருவிகள் வர வர, ஆண்கள் கோரஸ் பின்னுக்குத் தள்ளப்பட்டுக்கொண்டே வரும். பேய்கள் கூக்குரலிடுவது போல வருவது, அவன் மனத்தினுள் இருக்கும் distracting demonsஐ உருவகப்படுத்த 🙂 இந்த இசையைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே வந்தால் தான், இதன் கூர்மை எத்தகையது என்று உங்களுக்கு புரியும்.

Aum

Lifeline Clues:

இன்று LL க்ளூசும் முழுக்க இசையைச் சார்ந்தே இருக்கும். அதிலும் இரண்டாம் இடையிசையில் வரும் இரு நொடி இசைத்துளி ஒன்று, இது எந்தப் படம் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி காட்டிவிடும்.

இது breatherங்க.

Clue Question: Which movie BGM is this?


Lifeline Clue 1:

முதல் LL க்ளூவைக் கொடுக்க காரணம், அந்த stylish trumpets and guitar இசைக்கலவை தான். அதிலும் மத்தளத்தை நுழைத்து மிரட்டி இருப்பது தான் கூடுதல் சுவை. அத்தோடு அவர் சேர்த்திருக்கும் percussion செம!

Lifeline Clue 2:
இந்த இரண்டாம் LL க்ளூ ஆரம்பமே, விடை என்ன என்று சொல்லிவிடும். ஏங்க இன்னிக்கு இவ்வளவு சுலபம்னு நீங்க கேக்கலாம். சுலபமாவும், நிறைய கருத்துகளையும் நீங்க இது குறித்து பதிக்க வசதியா இருக்கட்டுமேன்னு தான் 😉 No, really! சந்தேகமா இருந்தா, சமீபத்தில் அமெரிக்காவின் National Public Radio ஒரு செய்தியைப் பற்றி சொல்லும் போது, இசைஞானியின் இந்த இசைத்துளியின் ஒரு பகுதியைத் தான் இசைத்தார்கள். இப்படி பலருக்கு மிகவும் விருப்பப்பட்ட sequence தான் ஆரம்பத்தில் வருகிறது. இருந்தும் இதை ஏன் நான் LL ஆகத் தந்திருக்கிறேன் தெரியுமா? காதலுக்காகவும், சோகத்துக்காகவும் என்றே பெருமளவு உபயோகிக்கப்படும் melodic instrument என்று அழைக்கப்படும் violins, இதில் eerie instrumentஆகவும், பயங்கரத்தின் உச்சத்தை உணர வைக்கும் இசைக்கருவியாகவும், மிரட்டும் இசைக்கருவியாகவும் வருவதைக் குறிப்பிட்டுக் காட்டத்தான். நாளை, யாராவது இசைஞானியின் இசையில் வயலின்கள் எப்படி எல்லாம் இசைக்கப்பட்டிருக்கிறது என்றால், தாராளமாக இந்த புதிரின் துணுக்குக்குக் கூட்டி வாருங்கள் 🙂 ஓம் சீக்வென்ஸில் இருந்து இந்த LL வரைக்கும், வயலினில் அவர் மிரட்டுவதைப் பார்த்து, அவர்களும் மிரளட்டும். 🙂

OK? Good luck.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Two Coimbatore actors will feature in this movie – one will be the accused on the run and the other will be the police, who is after him.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Poovizhi Vaasalile (BGM) (பூவிழி வாசலிலே (BGM)) from Poovizhi Vaasalile (BGM) (பூவிழி வாசலிலே (BGM)) (1987)

Advertisements