Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இன்று அருமையான இசைத் துணுக்கு ஒன்று வருகிறது. Tiebreakerஆகவும் இருக்கலாம், அல்லது, விமர்சனத்தாலும், lifeline clueவாலும் breatherஆகவும் மாறலாம். எல்லாம் உங்கள் அறிதலையும், புரிதலையும் பொறுத்தது.

தலைப்பைப் பார்த்தீர்களா?

இசையைக் கேளுங்கள். அப்போது புரியும், தலைப்பு ஏன் அப்படி என்று 🙂 வீணையை பல முறை இவர் Western guitar மாதிரி மீட்டி இருந்ததை முந்தைய சில புதிர்களில் சிலாகித்தோம். இருந்தாலும், இதில் மிகவும் வெளிப்படையாகவே சாத்தி இருப்பார். நன்கு கவனியுங்கள். மற்ற இசை வாத்தியங்கள் Westernல் வரும் போது, வீணை மட்டும் கர்நாடக சங்கீதக் கண்களோடு பார்ப்பவர்களுக்கு அதுவாகவும், முழு இசையோடு கவனித்து நுகர்பவர்களுக்கு அது ஒரு Western guitarஆகவுமே இசைப்பது போலிருக்கும். துணை வாத்தியங்கள் பக்கா வெஸ்டர்ன். அதோடு, இந்த வீணை நடத்தும் குஜால் இருக்கே. ஆகா. One of the best fusion experiments, I would say. வீணையே கிடாராக வந்தாலும், லீட் கிடாரும் வருவதை மறக்க வேண்டாம். This has one of the complicated smorgasbord of both Carnatic classical and Western instruments. கலக்கல்ங்க 😉

இந்த மனிதனின் இசையை இன்னும் பயங்கரமாக, closeupல், தனிமனித காழ்ப்புணர்ச்சியை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு, இவரின் oeuvreஐ criticalஆக review செய்யவேண்டும் என்பதே இந்த க்விஸை நடத்தும் ஒரு சாமானிய க்விஸ்மாஸ்டரின் வேண்டுகோளாக வைக்க விரும்புகிறேன். மீண்டும் மீண்டும் கேட்டுப் பாருங்கள். இது புதுமை இல்லை என்றால், எது புதுமை? Synthலும், programmed soundsஐ mix செய்வதிலுமா புதுமை இருக்கிறது? சந்தம் தவறக்கூடாது. Pepperoni Pizza மீது Pepper Rasam தெளித்த மாதிரி கர்ணகொடூரமாக இருக்க வேண்டிய இசைச் சேர்ப்பில், இதென்னய்யா, மிளகு ரசத்தில் கொத்தமல்லியை தூவியது போல அல்லவா இருக்கிறது! How did he manage to do THIS? And how many of you may have heard or appreciated this before? என்றால், இது போல இன்னும் எத்துணை முடங்கி, கேட்பாரற்று இருக்கிறது? யோசிக்கணும், இல்லையா? நம்ம க்விஸ்ல முடிஞ்ச அளவுக்கு உழுது செய்து ஆர்ப்பரிக்கிறோம். முடியாததை…? 🙂

This is the point, I want to make with 276/365. புதிரைத் தாண்டி, இவரின் வேலையை ஆராய்ந்து நுகர வேண்டிய கடமை நம்முடையது. ஆரம்பத்தில் வெஸ்டர்ன் பியூசனில் வீணையை அதிரடியாக இறக்கியதோடு மட்டுமல்லாமல், touch of a genius என்பது போல நம்மூர் கர்நாடக சங்கீதமாக புல்லாங்குழல், வயலின் சகிதமாக முடிப்பதை என்னவென்று சொல்வது.

யாருங்க இந்த மாதிரி எல்லாம் experiment செய்திருக்கா? சொல்லுங்க, ரசிக்கலாம் அதையும் சேர்த்து. இல்லைன்னா, ஏங்க இந்த மாதிரி எத்துணையோ பாடல்களை இன்னும் தோண்ட நேரமில்லாம அல்லாடிட்டு இருக்கற நம்மை எல்லாம், மத்த பாட்டையும் கேளுங்கன்னு சொல்றாங்கன்னு எனக்கு ஆச்சரியம் தான் வருது ;))

I hope your day is excellent.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

இரைச்சல், பல முறை பலமாக நீக்கப்பட்டது. இணையத்தில் இதன் தரம் குறைவாக இருக்கலாம். Let that not deter you.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This movie was a film adaptation of the work of one of the “persons” in the picture below ;). Besides, he had penned a song in this movie too.
11585_10151344843391744_132392495_n

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Vithaitha Vithai (விதைத்த விதை) from Ethanai Konam Ethanai Paarvai (எத்தணை கோணம் எத்தணை பார்வை) (1983)

Advertisements