Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

Note: Only 1 attempt will be allowed today🙂

இன்று Jazzy 275வது மைல்கல்லைத் தொட்டு இருக்கிறோம்.

தூரம் இன்னும் 90 தான். மூன்றே மாதங்களில் 365/365 மைல்கல்லையும் தொட்டுவிடுவோம். இந்த பயணத்தில் உங்கள் அனைவரோடும் பயணித்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. மீதம் இருக்கும் 90 நாட்களையும் ஒரு எதிர்ப்பார்ப்போடு எதிர்கொண்டு, நல்ல முறையில் முடிப்போம்.

இன்றைய க்ளூவுக்கும் விமர்சனம் என்பதெல்லாம் படு வேஸ்ட்.

பாடலில் வரும் முடிவு இசை இது. இவ்வளவு தூரம் — 45 நொடிகள், அமெரிக்க ஜாஸ் வகை இசையை நுழைத்து இருக்கிறார், இசைஞானி என்றால், அதை விட வேறு என்ன க்ளூ தேவை என்று சொல்லுங்கள்🙂 நன்றாக யோசியுங்கள். முடிவு இசை அவ்வளவு common இல்லை. அப்படியும் வரும் சில முடிவு இசைத் துணுக்களில், அவற்றின் நீளம் மிகவும் குறைவாகவே இருக்கும். இன்று அப்படி இல்லை.

இந்தப் படத்தில் அத்துணைப் பாட்டும் ஆஹா, ஓஹோ ஹிட். அமர்க்களமாக அமைந்த இப்படத்தின் பாடல்களை, ஒரே ஒரு ஆண் பாடகர் பாடியது, அவ்வளவு சரியான முடிவு இல்லை என்று அந்தக் காலத்தில், இந்தப் படத்துக்கு எழுந்த விமரசனத்தைக் “கல்கண்டு” பத்திரிக்கையில் படித்துவிட்டு சிரித்தேன். கோயம்புத்தூர் ராகம் தியேட்டரில் இந்தப் படத்தைப் பார்த்தபோது, என்ன கைத்தட்டல், விசில்! அடேங்கப்பா. அப்படி ஒரு energy!

படத்தின் கதைக்களம் சற்று ஏமாற்றமாக இருந்ததால், ரசிகசிகாமணிகளிடம் சரியாகப் போய் சேராமல், படம் கவிழ்ந்தது. Disco 440V பாடலுக்கு, இந்தப் பாடகர் சுழற்றி அடித்திருப்பார் பாருங்கள். ஆகா…அவரின் அதகளம் எந்த அளவுக்கு என்றால், 2ஆம் சரணத்தில், “..O Sweet..” என்று அசால்ட்டாக சிலாகித்துவிட்டு போய்க்கொண்டே இருப்பார்.

இந்தப் பாட்டில் percussionம், trumpetsம் ஒவ்வொரு இசை ரசிகனுக்கும் திருநெல்வேலி அல்வா போலவும், கோயம்புத்தூர் கௌரிசங்கர் சாம்பார் போலவும், சென்னை சரவணபவன் டுட்டிஃபுரூட்டி போலவும் சுவைக்கும் அளவுக்கு பின்னி எடுத்திருப்பார் இசைஞானி இளையராஜா.

கண்டுபிடியுங்கள். Have an awesome week ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Note: Only 1 attempt will be allowed today🙂

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Actress Madhavi, acted in a guest role in this movie.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Paatukku Paatu Edukka Vaa (பாட்டுக்கு பாட்டு எடுக்கவா) from Athisaya Piravi (அதிசய பிறவி) (1990)