Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

எனக்கு மிகவும் பிடித்த வானொலிகளில் ஒன்றான Public Radio Internationalல், சமீபத்தில் இதை ஒலிபரப்பினார்கள்.

முழு செய்தியையும் இங்கே போய் பாருங்கள். http://www.theworld.org/2013/04/indian-classical-musicians/

அட, நம்ம இசைஞானி இளையராஜாவும் சந்தூரில் பொளந்து கட்டிய பாடல்கள் தான் எத்துணை என்று நினத்த போது தான் இன்றைய பாடலைத் தரும் எண்ணம் வந்தது. மேலும், நேற்று மலேசியா அண்ணனை முன் வைத்து அடிப்பொலி பின்னியெடுக்கப்பட்ட பாடலைப் பார்த்தோம். எங்களுக்கு அடி எல்லாம் வேணாம், ஆனா, நல்லா வயக்காட்டுல காத்து வாங்கிகிட்டே காதலிச்ச நாட்கள நெனச்சுப்பாக்கற மாதிரி ஒரு டூயட் இருந்தா எப்படி இருக்கும்னு சிலர் யோசிக்கலாம். அவங்களையும் மறக்கக்கூடாதுன்னு தான் இன்றைய breather.

இந்தப் பாட்டுக்கு LL, விமர்சனம் என்பதெல்லாம் ரொம்ப ஓவர். கண்ணே கலைமானேக்கு எழுதற மாதிரி 🙂

அந்தக் காலத்து நண்பர்களிடம் கேட்டுப்பாருங்கள். இந்தப் பாடல் இல்லாமல் அன்றைய வானொலி அலைவரிசைகள் பயணித்ததே இல்லை. அதெல்லாம் ஒரு காலம். அரசு அலுவலர் குடியிருப்பில் இருந்ததால் நிறைய விசயங்களை ஜாலியாக கவனிக்க முடிந்தது. ரசனையில் இருந்து, விருப்பு வெறுப்பு வரைக்கும், அனைத்தையும் பலர் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை எனக்கு நன்கு புரிய வைத்த பெருமை அரசு அலுவலர் குடியிருப்புக்குத் தான் போய் சேரும் :). பின்னர், நிறைய தமிழ் படங்களில் குவார்ட்டர்ஸில் கதை அமைந்திருப்பது போன்று வந்த காட்சி அமைப்புகளைப் பார்த்தபோது, இன்று வந்த புதிர் பாடல் போலவும், இன்னும் வேறு பல பாடல்களும், அதைச் சுற்றி நடந்த பல ஜாலியான நிகழ்வுகளையும் அசைபோடுவேன் :).

அப்பேர்ப்பட்ட அட்டகாசமான everlasting, love-duet song தான் இன்று வருவது. இது ரிலீஸ் ஆன புதிதில், இந்தப் பாடல் ஹிட் ஆச்சு பாருங்க. அடேங்கப்பா! படம் டப்பா ஆச்சுன்னு நெனக்கறேன். சரியா ஞாபகம் இல்ல. ஆனா, வானொலியில இந்தப் பட பாடல்கள் அடிக்கடி ஒலிபரப்பியதால் – குறிப்பாக இந்தப் பாட்டும் இன்னொரு சோகப் பாட்டும் – மக்கள் கூட்டம் தியேட்டரை படை எடுத்தது. ஆனால் எதிர்ப்பார்த்த அளவுக்கு படம் போகலைன்னு நெனக்கறேன்.

அது சரி. இன்றைக்கு, இப்படி கிராமிய மணம் கமழும் காதல் பாட்டு வந்தா எல்லாரும் ரசிப்பாங்களா? உங்களுக்கே சிரிப்பா வருதுல? ஆனா, அந்தக் காலத்துல ரசிச்சாங்க. ஏன்? அப்ப மட்டும் middle-class, lower-middle, upper-middle, rich, இப்படி எல்லாம் இல்லையா? இருந்துச்சு. ஆனா the cleavage between the haves and have-nots was much smaller (relatively speaking) than today. அதனால், அதிக வேறுபாடு இல்லாமல் ரசனைகளும் ஓரளவுக்கு ஒத்துபோனது.

இன்றைய SMS அன்று இல்லை. தொலைக்காட்சி இல்லை (சென்னைக்கு வெளியே :)). தொலைப்பேசியும் இல்லை. காதல் செய்வது எப்படி? இப்படித் தான். சிறிய வயதானாலும், மறைந்து மறைந்து விடலைப் பயலுகளும், தாவணிக் கனவுகளும், எப்படி ஒருவரை ஒருவர் டாவடித்தார்கள் என்பதை எல்லாம் ஜாலியாக குவார்ட்டர்ஸ் வெராண்டாவிலும், ஒளிந்து விளையாடும் போது அரசல் புரசலாக பார்த்ததுண்டு. அவ்வமயம், இம்மாதிரி ஹிட் பாடல்கள் வானொலியில் ஒலிபரப்பப்படும்போது, தம்தனதம்தன தாளம் வரும் ரேஞ்சுக்கு நிறைய இளசுகளுக்கு என்னமோ அவங்க infatuation காதலுக்கே இசைஞானி பாடல்களைப் போட்டதாக நினைத்துக்கொண்டு, பால்கனியில் தலையை சீவிக்கொண்டே இந்தப் பாடலை ஹம்மிங் செய்ததும், அதை இன்னொரு அண்ணா (??) பதிலுக்கு விசில் அடிச்சே பதிலை பார்செல் செய்ததும் எல்லாம் நினைத்தால் சிரிப்பாக வருகிறது :). ஏன் இப்படி இருவரும் செய்கிறார்கள் என்று புரிந்துகொள்ள அப்போது முடியாவிட்டாலும், ஏதோ ஒரு கணக்கு போடறாங்கன்னு மட்டும் புரிஞ்ச வயசு ;). இப்படி, ஆர்ப்பாட்டமே இல்லாமல், மெதுவாக வாழ்க்கை சென்ற காலம் என்று சொல்ல வருகிறேன். அதற்கு ஏற்றாற்போலத் தான், கிராமிய மணம் நிறைந்த காதல் டூயட் பாடல்களையும் இசைஞானி தாராளமாக வழங்கி வந்த நேரம் அது. The choice of pace – deliberately slow pace – is to vivify that slow pace of life then. It was even more of a norm in the rural side.

இந்தப் பாடலில் — பாடகி பாடகர் தேர்வு, சற்று வித்தியாசமாக இருக்கும். அருமையான சந்தூரும், புல்லாங்குழலும், வயலினும், தபேலாவும், மனதைக் கொத்திக்கொண்டு உயர உயர பறப்பது போல இருக்கும். இரு இடையிசைகளும் ஒன்றாக கோர்க்கப்பட்டிருக்கிறது. இரண்டிலுமே bass-guitars அட்டகாசமாக பின்புலத்தில் தனது வேலையை செவ்வெனச் செய்துகொண்டே வரும். வயலின்களில் கூட ஒரு parallelism இருக்கும். இந்தப் பாடல் தொடங்குவதற்கு முன், நாயகனிடம் இருந்து விலகி, செல்லமாக நாயகி கோயில் படிக்கட்டுகளில் துள்ளி ஓடி இறங்கி வரும் போது, ஒரு Western Classicalல் பின்னியிருப்பார் பாருங்க இசைஞானி….அனுபவிக்க ஒரு பிறவி போதவே போதாது 🙂

என்ன கண்டுபிடித்துவிடலாம் தானே?

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Movie title has a river name in it.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Therkku Theru Machchaane (தெற்கு தெரு மச்சானே) from Ingeyum Oru Gangai (இங்கேயும் ஒரு கங்கை) (1983)

Advertisements