Tags

, , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம் நண்பர்களே.

உங்களின் பின்னூட்டங்களைப் பார்த்து பூரித்து போய் இருக்கிறேன். அடிப்படையில், நம் #365RajaQuiz — அமுதசுரபி போன்ற இசைஞானியின் படைப்புகளை ரசிக்கவும், ருசிக்கவும், சிலாகித்து உருகவும் — ஒரு தளத்தை ஏற்படுத்திக்கொடுக்கிறது என்பது மட்டும் நன்கு புரிகிறது. நல்லது. தொடரட்டும்.

சரி.

டிஸ்கோ கொடுத்தாச்சு. டூயட் கொடுத்தாச்சு. கர்நாடக சங்கீதமும் கொடுத்தாச்சு.

அப்ப நம்ம மீசிக்? அட எங்கள மாதிரி சாமானியர்கள் எல்லாம் எங்கப்பூ போவறது?

எடுடா நம்ம ஊரு மீசிக்க. கூப்பிடுய்யா நம்ம மலேசியா அண்ணன. மத்ததை எல்லாம் அண்ணன் பாத்துக்குவாரு. 😉

இசைஞானி இளையராஜாவின் இசையில் வந்த எத்துணையோ குத்துப் பாடல்களில், எனக்கு மிகவும் பிடித்தவை என்ற வரிசையில் இது கண்டிப்பாக முன்னணியில் இருக்கும் 🙂

இல்ல, விளையாட்டுக்கு சொல்லல. துணுக்கு இசைய play பண்ணுங்க. இசை முடியற வரைக்கும் உங்களையும் மீறி உங்களுக்குள்ள ஒரு ஆட்டம் ஒன்னு ஆரம்பிக்கும் பாருங்க….அது தான் இந்தப் பாட்டோட specialtyயே! அதாவது, நாள் முழுக்க மனசுக்குள்ள தார தப்பட்ட சகிதமா அடி, பின்னியெடுக்கும் இந்த மெட்டு இசைச்சுக்கிட்டே இருக்கும். அப்படி ஒரு கொட்டு, அப்படி ஒரு தட்டு. ராஜா பின்னி எடுத்திருப்பார்.

Again, it is NO coincidence.

இப்படி ஒரு பாட்டுக்கு அவர் யாரைத் தேடுவார்? Of course Malaysia Vasudevan.

ஆனா, இதுல ராஜா ஒரு சின்ன experimentஅயும் பண்ணி இருப்பார். கூட 2 பாடகர்களையும் நுழைத்திருப்பார். நல்லா அனுபவிச்சு கேட்டீங்கன்னா, மலேசியா அண்ணனுடைய versatilityயை அட்டகாசமாக உணரலாம். அண்ணன் எப்பவும் தன்னிகரற்ற பாடகர். சிறு வயதில் இவரைப் பற்றிய negative bias அதிகம் உலவிய நேரம். இப்ப நெனாச்சாலும் செம கடுப்பா இருக்கு. TMSனாங்க…SPBக்கே கொடுத்திருக்கலாம்னு நக்கல் அடிச்சாங்க. ஆனா, மலேசியா அண்ணனுடைய நெருங்கிய நண்பரா இருந்த SPBம் கூட இவர் திறமை மீது பயங்கர மரியாதை வைத்திருந்தார் என்பது தான் உண்மை. இந்தக் குறிப்பிட்ட பாட்டை நான் களம் இறக்குவதற்கு காரணமும் இது தான். இந்தப் பாட்டில், ஆரம்பிப்பது, வேறு ஒரு ஆண் பாடகர். மலேசியா அண்ணன் இந்தப் பாட்டில் முதல் சரணத்தில் தான் entry ஆவார்.

ஆக பாட்டின் ஆரம்பத்தில் பொளந்து கட்டுவது இசைஞானியின் இசைக்கொட்டு! அந்த வேறு பாடகரும் நல்லா தான் பாடியிருப்பார் — ஆரம்ப பல்லவிய. இல்லைன்னு சொல்லல. ஆனா, கண்டிப்பா முதல் சரணம் முடிஞ்சு, 2ஆம் பல்லவியையும் 3ஆம் பல்லவியையும் நம்ம மலேசியா அண்ணன் takeoff கொடுத்து பாடுவார் பாருங்க. அங்க பாப்பீங்க இந்த veteranஉடைய versatilityஐ. ஊதித் தள்ளிட்டு போயிட்டே இருப்பார். The difference in what Malaysia Annen can handle will be so stark. செமயா இருக்கும். அந்த வித்தியாசத்தில் உணரலாம், ஏன் இவருடைய versatilityக்கு அருகில் வர முயல்வது கூட எவ்வளவு கடினம் என்று!

கேளுங்க. முதல் பல்லவியையும், இரண்டாம் மற்றும் மூன்றாம் பல்லவியையும் 😉 உங்களுக்கே புரியும், வித்தியாசம் எப்படி என்று. அது மட்டுமல்ல, முதல் சரணத்தில் அண்ணன் அப்படியே, பாந்தமாக டப்பாங்குத்து பாட்டை பாடியிருப்பார். அங்கிருந்து 2ஆம் பல்லவிக்கு தாவும்போது, அவருடைய characteristic நக்கல் style intonation படுபயங்கரமாக இருக்கும். So, முதல் சரணத்தில் பதுங்குவார், இரண்டாம் பல்லவியில் பாய்வார் — மலேசியா அண்ணனுக்கு இணை அவரே தான் — பின்னுறாரப்பா 😉

இப்பேர்பட்ட சிங்கம், பாவம் Stroke வந்து, ஒடுங்கிப் போய், டிவியில ஒரு இசை நிகழ்ச்சியில பாட முடியாம இன்னொரு சாதாரண பாடகர் பாட வேண்டிய நிலைமையைப் பார்த்து, என்னையும் அறியாமல் அழுதேவிட்டேன். வயதும், நோயும், ச்சை… இவருடைய twilight yearsஐ என்னால் இன்னும் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு shockerஆகவே இருக்கிறது 😦 . இந்தப் பாட்டை, ஜாலியா இருக்கும் போதும் கேளுங்க. கொஞ்சம், மனசு சரியில்லாதப்பவும் கேளுங்க. கேட்டு முடிஞ்சவுடனே, எப்படி மனசு மாறுதுன்னும் அனுபவிச்சுட்டு சொல்லுங்க… This song has all those elements ங்க. ஆமாம் 🙂

அதே மாதிரி இந்தப் பாட்டுல கொட்டு மேளமும், மலேசியா அண்ணனும் ஒரு பக்கம் என்றாலும், கூடவே வரும் Chorus பாப்பாக்களை கண்டிப்பாக குறிப்பிட்டே ஆகவேண்டும். அவ்வளவு அருமையான கோரஸ் சேர்ப்பு இந்தப் பாட்டுக்கு. நல்ல பக்க பலம் என்றே சொல்லவேண்டும்.

இந்தப் படத்துல எல்லா பாட்டும் செம ஹிட். எந்தப் பாட்டை கொடுப்பது, விடுவது என்று பலத்த போராட்டம். முதல் சீசனில் இருந்தே, இதனால் தள்ளிப்போடப்பட்ட படப் பாடல்களுள், இதுவும் ஒன்று 🙂 இந்தப் பாட்டை எல்லாம் நல்ல வேளை திரையில் பார்க்கவில்லை. இப்படி 440V தெறிக்கும் electrifying பாடலை எல்லாம், sorry, உக்காந்து பாக்க முடியாது. எப்படி தான் ராஜா இப்படி எல்லாம் உக்காந்த இடத்துல இருந்து போடுறாருன்னே தெரியல. இதுல ஞானியாக அமைதி, தியானம்னு எல்லாம் வேற பேசுறாரு… இந்தப் பாட்டை கேட்டா, இன்னிக்கும் வயித்துக்குள்ள இருக்கற குழந்தை துள்ளி குதிக்கும்…அப்புறம் எப்படி நாம 😉

Many songs may come – some with extraordinary rhythms and beats. But, songs like these, have 100% petrichor (மண்வாசனை) imbued. At University of Florida, I was once approached by a Korean Research Student in Linguistics to explain the facets of Tamil colloquialism, folklore and contemporary, colloquial songs, if any. I just played this song. நாம தான் அப்ப ராஜா பாட்டுன்னே கிடந்தமே…கரும்பு தின்ன கூலியா என்ன? 😉 This was in 1998. In appreciation, she served Korean food that she had cooked 🙂 மலேசியா அண்ணன் – இசைஞானி இளையராஜாவால இவ்விதமான வாழ்க்கையில் மறக்கமுடியாத பரிசுகள் எல்லாம் கிடைக்கும் என்று நான் கனவில் கூட நினைத்தது கிடையாது. என்னையும் அறியாமல், ஞாபக அலைகள், என்னை பின்னோக்கி இழுத்துச் செல்வதால், இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன் 🙂

So, who could think of playing bass-guitars for a செம குத்து song like this? Only IR can even dare do that with full justice and still sound very original and organic!

Have a nice weekend.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

A legendary pair of yesteryear had acted in this movie. In fact, the title BGM score for this movie had this song and the very same chorus as the theme. This is a very popular song. Check it out on YT 😉

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Nee Pottu Vachcha ( நீ பொட்டு வச்ச) from Ponmanach Selvan (பொன்மனச்செல்வன்) (1989)

Advertisements