Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

நேற்று, LLக்ளூ சரியான வேஸ்ட் என்று சிலரும், இல்லை, இல்லை, அருமையான க்ளூவாக இருந்ததால் தான் கண்டுபிடிக்க முடிந்தது என்று சிலரும் Twitterல் உரையாடியது, மிகவும் சுவாரசியமாக இருந்தது. தயவு செய்து, ஒரு 15-நிமிடம் உங்களால் செலவு செய்ய முடிந்தது என்றால் இந்த TED பேச்சைக் கேளுங்கள். At least, please listen to 0:45 to 02:00 segment 🙂 இதில் மனிதர்களுக்கு வேலை செய்வதில் ஈடுபாடு இருப்பது அவசியமா? அப்படி ஈடுபாடு மிகுந்த செயல்களை, கஷ்டப்பட்டு செய்யும்போது, மனிதர்களுக்கு ஊக்கம் பிறக்கிறதா இல்லையா என்ற ரீதியில் செல்லும் இந்தப் பேச்சு, கண்டிப்பாக #365RajaQuizக்கும் பொருந்தும் என்று மட்டும் சொல்லிக்கொண்டு அமர்கிறேன் 😉

(நீதிபதி நிலைமை என்னுடையது… 🙂 நீதிபதியின் தீர்ப்பு தான் பேச வேண்டுமே ஒழிய, அவரே அதை defend செய்து பேசுவது எப்படி நியாயமாகாதோ, அதே போல, நானே #365RajaQuiz விமர்சனங்களை defend பண்ணி பேசுவது நியாயமாகாது 🙂 கட்டாயம் வந்து மறு கருத்து வைக்கவேண்டும் என்று எனக்கு தெரிய வரும்போது மட்டும் வந்து பதில் சொல்கிறேன். இல்லையென்றால், I will leave it to you to freely discuss. Don’t withhold anything. I do not claim to be a perfect Quiz-Master 🙂 தாராளமாக விமர்சனம் செய்யுங்கள். கருத்துகளைப் பதியுங்கள். எப்பவும் சொல்வது போல, வெறும் LLஐ மட்டும் பார்க்காதீர்கள். தலைப்பில் இருந்து தொடங்கி, விமர்சனம் வாயிலாக, LLக்குள் நுழைந்து புதையலைக் கண்டுபிடியுங்கள். All the best 🙂)

நேற்று வந்த புதிருக்கு விடை அளிக்காதவர்களுக்காக இன்னும் 12 மணி நேர அவகாசம் இருக்கிறது என்பதை நினைவூட்ட, hat-trickஆக நமது mini-themeல் வரும் கடைசி பாடல் தான் இன்று.

இது சுலபமான பாடலாகத் தான் இருக்க வேண்டும். நேற்றைய பாடல் போலவே, தொடக்க இசையில் பாடகர் ஹம்மிங் கொடுத்துவிடுகின்றாரே. அப்புறம் என்ன? நேற்று பாடகி ஹம்மிங் செய்தாரே, அது போல 😉

இணையத்தில் முதன்முறையாக இந்தப் பாடல்களை பதிவேற்றம் செய்தபோது, அப்படி ஒரு ஆச்சரியம். ஏனென்றால், நிறைய பேருக்கு இப்படி ஒரு பாடல் களஞ்சியத்தை இசைஞானி இசைத்திருப்பதே தெரியாது. இது பிரபலமாக ஆரம்பித்த பிறகு, நிறைய பேருக்கு நன்கு அறிமுகம் ஆகியிருந்ததை காண முடிந்தது. ஒவ்வொரு பாட்டும் அட்டகாசமாக இருக்கும். எதை எடுப்பது, எதை விடுப்பது என்று முடிவு செய்வதற்குள் போதும் போதும் என்னும் அளவுக்கு பாடல்கள். இருந்தும் என்ன பயன்? 😦

இப்படி இருக்கும் சூழ்நிலையில் ஏன் இந்தப் பாடலை நான் தேர்வு செய்தேன் என்று யோசித்தீர்கள் என்றால், சற்று25/365 – #365RajaQuiz – Let’s Rock n Roll! It’s 25! பக்கம் போய் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள். எனக்கு, அம்மாதிரி Guitar Interludes நிறைந்த வேக நம்பர்கள் என்றால் பயங்கர பிரியம். அதனாலேயே தான் இதை தேர்வு செய்தேன். இதிலும், எப்படி Guitarஐ மீட்டி இருக்கிறார் பாருங்கள். அடேங்கப்பா! அதுவும் அந்த 0:24 முதல் 0:27 என்னை அள்ளிக்கொண்டு செல்லும் கிடார் பகுதி 😉

Have a nice day!

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

This track was noise-removed. Noise-gate applied once. No tempo was altered.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

In this album, two real-life sister-singers have sung different songs. 😉

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Pathinaaru Pathinezhu (பதினாறு பதினேழு) from Kannukkoru Vannaikkili (கண்ணுக்கொரு வண்ணக்கிளி) (1990)

Advertisements