Tags

, , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம் நண்பர்களே.

நேற்றைய mini themeல் தான் இன்றும் பாடல் வருகிறது. அது என்ன என்று நிதானமாக சொன்னால் போதும்.

இன்றைய பாடல் துணுக்கு சரியான breatherஆகவும் சிலருக்கு இருக்கலாம், தலையைச் சுற்ற வைக்கும் சரியான tie-breakerஆகவும் இருக்கலாம். எப்படி என்று நானே வாதாடிவிடுகிறேன்.

Breather – Because, the prelude itself clearly hums the starting line of the Pallavi 🙂
Breather – Because, one of the singer is discernibly known.
Breather – Because, the prelude and the interlude are woven together.
Breather – Because, this was a super-duper hit of those days, thanks to All India Radio and Ceylon Radio 😉

Here is the proof. LP ரெக்கார்டில் ஒரு பாட்டு தர்ம அடி வாங்கும் அளவுக்கு அதில் நற நற என்று இரைச்சல் இருந்தால், அது தான் அந்தப் பாடலுக்கு கிடைத்த கைத்தட்டல்களின் அறிகுறி 🙂 மெய்யாலும். அந்தக் காலத்து LP enthusiasts இடம் கேட்டு பாருங்கள். அவர்கள் சொல்வார்கள். இந்தப் பாட்டு, என்னிடமும் தர்ம அடி வாங்கின நிலையில் தான் என்னால் பதிவு செய்ய முடிந்தது. இந்தப் பாட்டுக்கு எல்லாம் நான் பல வருடங்கள் கழித்து கல்லூரி நாட்களில் பதிவு செய்யப் போனால் என்ன ஆகும்? இது தான் நிலைமை.

மற்ற இரைச்சல்கள் போல இல்லை, இம்மாதிரி பாடல்களுக்கு. ஒன்று தெரியுமா? இந்தத் துணுக்குக்காக, குறைந்தது ஒரு மணி நேரம் உழைத்தேன். அதன் வாயிலாகவே, hiss மற்றும் இரைச்சல்கள் பலவற்றை என்னால் நீக்க முடிந்தது. But, if the LP Disc had suffered major damage, due to repeated playing, the noise gets embedded directly on the sound itself. That nobody can eliminate 100%. Because, that damage – that embedded noise – becomes the permanent scar – an indelible scar on the track itself. That nobody can eliminate. என்னால் முடிந்த அளவுக்கு குறைத்திருக்கிறேன். விடை தெரிந்தவர்கள், இதை மற்ற இணையதளத்து வர்ஷன்களோடு compare செய்து பார்க்கலாம்.

அடுத்து, tie-breaker என்று வாதாட ரெடியா? இதோ:

Tie-breaker – Because, “I have never heard this song before 😦 ” என்று ஒரு கும்பல் கொதித்து எழலாம்.
Tie-breaker – Because, not much is known about this song via the online portals 😉 என்று பல்லை நற நற என்று கடிக்கலாம் 😉
Tie-breaker – Because, I did not exist during the radio-generation என்று கத்திக்கொண்டு கல்லைத் தூக்கலாம்.
Tie-breaker – Because, Rex did not give any hero and heroine LL clue 😉

ஆக, இரண்டு தரப்புமே சரி தான். நீங்கள் இந்தப் பாட்டை இதற்கு முன்னர் கேட்டிருக்கின்றீர்களா, இல்லையா என்பதில் தான், நீங்கள் எந்தத் தரப்பு என்பதை நிர்ணயிக்கும். சரியா?

So, be a sport. If you did not know the answer, be contented that you have uncovered one of the best songs of Maestro Ilaiyaraaja of all times.

இதே பாடலின் ஆரம்ப வரிகளில், இசைஞானியுடன் பணியாற்றிய இன்னொரு இசைக்கலைஞர், பின்னர் இசையமைப்பாளராக ஏறக்குறைய இதே ஆரம்ப வார்த்தைகளில், சிறிய மாற்றத்துடன், இசையமைத்த பாடலும் செம ஹிட், அந்தக் காலத்தில் 🙂 இவர் இசையமைத்த பாட்டும் எனக்கு மிக, மிக பிடிக்கும். இவரின் பாடலும் அந்தக் காலத்து செம ஹிட். இவரின் பாடலின் ஆரம்ப இசையும் மிகவும் பிரபலம் (அந்தக் காலத்தில்).

மீண்டும் இன்றைய பாட்டுக்குள் வருவோம்.

Harmonica(Mouth-organ)லும், Lead and Bass Guitarலும் இசை ஆரம்பமாகிறது. அங்கே அருமையான கோரஸ் பாப்பாக்களின் ஹம்மிங்கும் வருகிறது 🙂 தபேலாவும் சேருகிறது. இங்கு தான் வேகம் பிடிக்கிறது. ஜானகியம்மாவும் லாலாலா என்று கோரஸ் பாப்பாக்களுக்கு சூடு ஏத்திவிட பாப்பக்களும் சளைக்காமல் லல்லாலல்லா என்கின்றனர். உங்களுக்கு விடை தெரிந்திருந்தால், இந்நேரம், உங்களுக்கும் லல்லல்லா தான், இல்லைன்னா தலையில குல்லா தான் 😉

இங்கே interludeல் கோரஸ் பாப்பாக்கள் லலலாலாவில் ஆரம்பிக்க, புல்லாங்குழல் அங்கே டூயட் பாடுகிறது 🙂 அங்கே ஷெனாய் நாயனமும், சந்தூரும், அந்த சந்தூருக்கு இணையாக அருமையான bass-guitarம் வர, பாடலின் இசை ஒரு உச்சத்தைத் தொட்டுக்கொண்டு இருப்பதை நன்கு உணரலாம். அட்டகாசமான பாட்டுங்க. இது வரைக்கும் கேட்காம இருந்தா, இனிமேல் விடவே மாட்டீங்க.

என்ன கண்டுபிடித்துவிடலாம் தானே? இந்தப் பாட்டு எங்க வீட்ல எனக்கும், அக்காவுக்கும், அந்தக் காலத்துல இருந்த சில சிறு வயது நண்பர்களுக்கும் மிகவும் பிடித்த பாடல். பிற்காலத்தில் இந்தப் பாடலை அறிமுகம் செய்த நண்பர்களுக்கும் உடனடியாக பிடித்துப் போனது என்பதும் உண்மை.

இன்றைய பாடல், இசைஞானியின் அந்தக் கால ரசிகசிகாமணிகள் – குறிப்பாக நம் @rozavasanth போன்றோருக்கு – பழைய நினைவுகளை நன்கு கிண்டிவிடும்.

Have a nice day. Give it a try 🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

This track was noise-removed multiple times and noise-gate was used once. No tempo was adjusted. Crackling noise are LP marks, etched on to the track permanently. However, other “salt-and-pepper” noise and hissing noise are thoroughly eliminated.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This movie had a “miscarriage” as I don’t think it was ever released. However, the same title was kept for another movie, within the next 2-5 years or so and that movie was a blockbuster hit (although, Maestro Ilaiyaraaja did NOT score for that hit-movie) 😉

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Poo Enbatho Pon Enbatho (பூ என்பதோ பொன் என்பதோ) from Uyire Unakkaga (உயிரே உனக்காக) (1984)

This is the song I alluded to in the Quiz – Music by V.S Narasimhan.

Advertisements