Tags

, , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இந்தப் பாட்டு அருமையான ரோமான்ஸ் மெலடி. Pretty personal too.

அந்தக் காலத்துல இந்தப் பாட்டை முதன்முதலாக நான் கேட்டது கோவை அகில இந்திய வானொலியில்.

என் கேரள நண்பனின் வீட்டில் combined-studyக்காக சென்றிருந்தபோது, மதிய உணவை முடித்துக்கொண்டு பாட புத்தகத்தை எடுக்க, வானொலியில் இந்தப் பாட்டு வந்தது. புத்தகத்தை விசிறி எறிந்துவிட்டு, ”empty cassette கொடுடா please” என்று கெஞ்சிக் கூத்தாடி, பாடலின் முதல் BGMல் இருந்து தான் பதிவு செய்து வைக்க முடிந்தது. அதன்பின் பல ஆண்டுகளாக, அந்த அரைகுறை பதிவில் தான் இந்த அருமையான பாடல் என்னிடம் இருந்தது.. படத்தின் பெயர், சில நாட்களுக்கு பிறகு வானொலியில் அறிவித்தபோது தான் தெரிந்தது. அதன் பின், பல முறை இந்தப் பாடல் வானொலியில் வந்தாலும், என்னிடம் பதிவு செய்யும் வசதி இல்லை. பின்னால், கல்லூரியில் படிக்கும்போது தான் தேடிப்பிடித்து பதிவு செய்ய முடிந்தது.

Flashback முடிந்தது.

இந்த மெலடி, மிக மிக பிரசித்தம். இது சுலபமான க்ளூ என்றே நினைக்கின்றேன். தயவு செய்து வீடியோவில் பார்த்து வெறுத்து போய்விடாதீர்கள். Useless choreography with full of candles. Movements ஒத்தே வராது. இரு இடையிசையிலுமே அந்த வயலின் பீசை ராஜா அட்டகாசமாக சேர்த்திருப்பார். அது தான் இந்தப் பாடலுக்கு அடையாளமே.

நல்லத் தரமான வடிவத்தில் இன்றைய க்ளூவும் வந்துவிட்டது. கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்னும் அளவுக்கு, மென்மையாகவும், மெல்லமாகவும், வழிந்தோடும் ரோமன்ஸ் மெலடிப் பாடல். இதிலில்லாத மேட்டரே இல்லை. அத்துணை அருமையான இசை சங்கதிகள் இருக்கிறது என்று சொல்ல வந்தேன். இன்னொரு அருமையான மெலடிப் பாடலும் இந்தப் படத்தில் உண்டு. அதுவும் அட்டகாசம். எதைக் கொடுப்பது என்று பல நாட்கள் dilemmaவில் இருந்திருக்கிறேன்.

நேற்றைய க்ளூவில் வந்த மாதிரி, இந்த ஹீரோயினும் அந்தக் காலத்தில் கலக்கியவர். ஆகா. சரி சரி. நோ காமெண்ட்ஸ்😉

Have a nice week ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

A Hindu “deity”-named heroine acted in this movie😉

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Ethi Vachcha (ஏத்தி வச்ச) from Aalapiranthavan (ஆளப்பிறந்தவன்) (1987)