Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம் நண்பர்களே.

முதலில் நாம் @manivelக்கும் @naanillaiக்கும் பெரிதும் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். இந்த இரு நல்லுள்ளங்களும், தாமாக முன் வந்து, கலந்துரையாடி, இந்த Spreadsheetல் இதுகாறும் வந்த அனைத்து புதிர்களையும் குறித்து வைத்துள்ளார்கள். Please give them a very big round of applause, folks. Seriously. Thank you so much @manivel and @naanillai. We truly appreciate your laudable effort.

https://skydrive.live.com/view.aspx?resid=F26B972B5FD52EFA!39796&app=Excel&authkey=!AFmxevBJfP39Ljs


இன்றைய புதிர் உங்களில் பலருக்கு ஜுஜூபியாக இருக்கலாம். அப்படி என்றால் எனக்கு மகிழ்ச்சியே. இதை இன்று களம் இறக்குவதற்கு காரணங்கள் பல. முதலில் இதைப் பார்த்துவிடுங்கள் 🙂

சும்மா கிண்டலுக்குத் தான் இந்த உரையாடலையே ஆரம்பித்தோம். இன்று @NChokkan ஊட்டி, கோவை எல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு, நம் புதிரில் வந்த லொகேஷன்கள் எல்லாம் சரி தானா என்று பார்த்துவிட்டு ஒரு பிடி பிடிக்க ஆயத்தமாக இருக்கிறார். அதை நாமும் கொண்டாட வேண்டாமா? அதனாலேயே, அருமையான கேமிரா, இசைஞானியின் இன்னிசை நிரம்பிய முழுக்க முழுக்க ஊட்டியிலும் சுற்றுவட்டாரங்களிலும் படமாக்கிய படத்தில் இருந்து இந்தப் பாடலை களம் இறக்குகின்றோம்.

மேலும், அடுத்த காரணம், இணையத்தில் இந்தப் பாடலின் தரம், அந்தோ பரிதாபம். இந்தத் துணுக்கில் நான் கொடுத்திருக்கும் இடத்தில், பல அரிய சங்கதிகளைக் கேட்டு கேட்டு புல்லரிக்கலாம். மெல்லிய solitary Flute, வயலின்கள், Bass-Guitars, Lead Guitars, Western ensemble நிறைந்த Violins and tintinnabulation of the bell kind of cymbal arrangement, என்று பல விஷயங்கள் இருக்கிறது. அதுவும் நடுவில் வரும் அந்த violinsஐ கவனித்துக்கேளுங்கள்…Man, it is just too complex to even explain. It just needs to be experienced.

மேலும் இன்னொரு காரணம், நேற்றைய பாடலை, நிறைய நேரம் எடுத்து, இரவு முழுக்க உழைத்து விடை கண்டுபிடித்த நண்பர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அதை அவர்கள் பூரித்து, சிலாகித்து மகிழ்ந்தாலும், இன்றைக்காவது அவர்களை, அவர்கள் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவு செய்யும் விதமாக, பின்னர் இறக்க வேண்டிய breatherஐ இன்று இறக்கலாம் என்று ஒரு சிறு நல்ல எண்ணம் தான். 🙂

அடுத்த காரணம், இன்று சொக்கன் கோயம்புத்தூர் செல்வார் என்று நினைக்கிறேன். இன்றைய பாடல், கோவை அகில இந்திய வானொலியின் விருப்பப்பாடல்.

அடுத்தக் காரணம், நம் @w0ven கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இதுவும் ஒரு சிறு தீம்ல வரும் புதிர் தான். நேற்றைக்கும், இன்றைக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அது என்ன என்று கண்டுபிடித்தீர்களா? 🙂

அதே போல, இந்தப் பாடலில் வரும் நாயகன் – நாயகி கெமிஸ்டிரி இருக்கே..ஆகா. அதே போல, இதை படமாக்கி இருக்கும் விதம், காலத்தை விஞ்சியது. அத்துணை அழகாக இருவரையும், ஊட்டியின் குளிரின் பின்னணியில் காட்டியிருப்பார் டைரக்டர். எந்த லிப்-மூவ்மென்ட்ஸும் இல்லாமல், எதார்த்தமாக இருக்கும் இந்தப் பாடல். அதே போல, சுடிதாரில் வரும் நாயகி, அவர் ஸ்டைல், அந்த நேர்த்தி, அந்த காஸ்டியூம்ஸ்…இன்னிக்கு கூட யாராவது அதை பீட் பண்ணினால் சந்தோஷம் 😉 இவரப் பாத்து தான், நம்ம பய புள்ளவ நெறைய பேரு நீச்சல் கத்துக்க ஆசைக்கூட பட்டிருக்கலாம்னு எனக்கு தோணுது. ஆனா, இதுல இந்திய உடைகள் போட்டுகிட்டு படு கண்ணியமா, அழகா வருவாங்க. சோ கியூட். ஸ்ஸப்பா முடியல 😉 இவருக்கு கட்-அவுட்டு வைக்கிற அளவுக்கு படுபயங்கர ரசிகர் பட்டாளம் இன்னமும் இங்க க்விஸ்ங்கற பேர்ல அலைஞ்சுட்டு இருக்குங்கறத, மறக்க வேணாம்..சொல்லிட்டேன். Ahem… (நெஞ்சுல பச்ச குத்திகிட்டு இல்லாம இருந்தா சரி தான் ;)) (ஒடிடறேன் ;))

ஊட்டியில் உல்லாசத்தைத் தேடுங்கள், கோவையில் கோலாகலத்துடன் தொடருங்கள் 😉

ஸ்ஸப்பா...கோவை கோவைனு இருடா, நமக்கு டின் கட்டப் போறாய்ங்க இவங்க எல்லாம்...மதுரைய by-pass பண்ணி தூத்துக்குடி போனதுக்கே, கண்டனங்கள் வந்தாச்சு… நமக்கு இல்லை Safety…அம்புடுதேன்.. சோ..எஸ்கேப் 😉

Have a nice weekend 🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Please note that this encoded clue may sound different than what I could find on the Net, because I had a better source. I did not alter the sound or its tempo in anyway. So, please bear this in mind. Thanks.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This long-winded movie title is a starting line of an olden-day pathos song by TM Soundararajan (ச்சீ..எனக்கே இன்றைய LL படு கேவலமா தோணுது..சோ மன்னிச்சு ;)).

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Malare Malare (மலரே மலரே உல்லாசம்) from Un Kannil Neer Vazhinthaal (உன் கண்ணில் நீர் வழிந்தால்) (1985)

Advertisements