Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இன்று வரும் பாடல், அந்தக் காலத்து சூப்பர் ஹிட் பாடல். இதை எத்துணை பேர் கேட்டிருக்கின்றீர்கள் என்று தெரியவில்லை. அதனால், வேண்டுமென்றே ஒரு வார்த்தையை இசையோடு சேர்த்தே தந்திருக்கின்றேன். கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள்.

Taggingல் சிறு தொய்வு ஏற்பட்டிருக்கிறது. என்னுடைய இடத்தில் சிறு வேலைபளு அதிகரித்ததால். மன்னித்துவிடுங்கள். சரி செய்துவிடுகிறேன்.

இன்றைய பாடலில் அத்துணை energy இருக்கும். இந்தப் பாட்டு அந்தக் காலத்தில் கொடிகட்டிப் பறக்கக் காரணம், அகில இந்திய வானொலி தான் முதற் காரணம். என்றாலும் எனக்கு மிகவும் பிடிக்க இதெல்லாம் தான் காரணம்:

  1. இசைஞானியின் செம ஜாலி டிஸ்கோ நம்பர். பின்னி, அடியோ அடி தான்.
  2. ஒவ்வொரு இடத்திலும் Bass-Guitarன் உறுமல், படு அட்டகாசமாக இருக்கும்.
  3. Congosன் ஆளுமை அவ்வளவு அட்டகாசமாக இருக்கும், இந்தப் பாட்டு முழுவதும். குறிப்பாக, பல்லவி முதலாக சரணம் வரையிலும் அந்த நளினமானத் தாளம் வரும் இடம், அட்டகாசம். இதை, வாசல் தோறும் என்று பாடகி முடிக்கும் இடத்தில் நீங்கள் காணலாம். This pattern will itself get repeated multiple times, throughout the song. It is one of the strongest clues for this entire song. So, please pay attention to hum from there for identifying the track.
  4. லீட் கிடார்களின் கையாடலும், அவ்வளவு அருமையாக இருக்கும் இந்தப் பாடலில்.
  5. பாடகியின் அருமையான குரல், பழத்தில் தேனைத் தடவிய மாதிரி அத்துணை இதமாக இருக்கும். அதுவும் பாடலின் ஆரம்பத்தில் இவர் தரும் humming இருக்கே, டாப்!
  6. Energy, energy, and energy. That is exactly how this song will be. It will be so uplifting.

இந்த இடையிசையிலேயே பாருங்களேன். பாடலின் சகல அம்சங்களும் வெளிக் கொண்டுவரப்பட்டிருக்கும். Ordinary drums, புல்லாங்குழலோடு Western group violins வர, அதில் lead guitars நுழைய, அதோடு மீண்டும் western group violins and lead guitars என்று ஒரு அருமையான jaunt இந்த இசைத்துணுக்கில் உள்ளது.

இந்தப் பாடல் கடினம் அல்ல. அந்தக் காலத்தில் கேட்டிருந்த எவருக்கும் இந்தப் பாடல் மறக்கவே மறக்காது. இருந்தாலும், காலத்தின் கொடுமை, யாரைத் தான் விட்டிருக்கும்? மறக்க ஆரம்பித்த நண்பர்களுக்கு ஊன்றுகோலாக, அந்த இறுதியில் வரும் சரணத்தின் ஆரம்ப வார்த்தை உதவும். இந்தப் பாடலை கேட்டிராதவர்களுக்கும் கூட உதவும் என்றே நம்புகின்றேன்.

Have a nice weekend.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Actress Ambika is about to direct a film now and it was she, who acted in this song, penned by Gangai Amaran.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Vaan Meethile (வான்மீதிலே) from Raagangal Maaruvathillai (ராகங்கள் மாறுவதில்லை) (1983)