Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

Ramamurthy

திரையிசை சக்கரவர்த்தி ராமமூர்த்தி அவர்கள் தவறிவிட்டார் என்று நேற்று நள்ளிரவு தான் எனக்கு தெரிய வந்தது. மெல்லிசை மன்னர் MSVயுடன் இணைந்து இவர்கள் இருவரும் நமக்களித்துள்ள ஹிட் பாடல்கள் தான் எத்துணை எத்துணை. அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டி, அவர் குறித்து ஏதேனும் சிந்தனைகளை நீங்கள் பதிக்க விரும்பினால், தாராளமாக பின்னூட்டத்தில் பதித்துவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டு, இன்றைய புதிருக்குள் நுழையலாமா?


நேற்று, முப்பெருந்தேவியர் — Triumvirate.

இன்று, இருவர் — Duo.

எப்படி?😉

அருமையான பாடல்கள் நிறைந்த ஆல்பம் இது. பெண்கள் செண்டிமெண்டிலேயே படத்தை எடுத்து வெற்றிக்கண்ட ஹீரோ நடிகர் இவர். இவர், லுங்கி கட்டும் அழகு என்ன, கோழியை தின்னும் அழகு தான் என்ன! ஆஹா..KFCஎல்லாம் தூசி! அண்ணன் சாப்பிட ஆரம்பிச்சாருன்னா, கோயமுத்தூர் அங்கண்ணன் கடை பிரியாணியும், வருவலும் தான் தாங்கும்.

இப்படிப்பட்ட பாந்தமான அண்ணனின் நடிப்பில் மக்கள் விழுந்தார்களோ இல்லையோ, இசைஞானி இளையராஜா அட்டகாசமான பாடல்களை அள்ளி வழங்கி நம் எல்லாரையும் விழ வைத்தார் என்றால் அது மிகையாகாது. இந்த படத்தில் கூட அருமையான மெலடி, குத்து பாடல்கள் இருந்தாலும், புதுமையாக இசைக்கும் இந்தப் பாடலும் அடங்கும். இரு பாடகிகளைத் தொடர்ந்து பாட வைத்திருப்பார். அதுவும் டண்டண்டான் டான் என்று வருகிறதே, அது இரு இடையிசையிலும் பயன்படுத்தி இருப்பார். அந்த இடம் தான் பாடலை கண்டுபிடிக்க மிகவும் உதவும்.

அது மட்டும் இன்றி, ஹீரோ அண்ணனின் பாந்தமான குணங்களையும் கொட்டி இருக்கிறேன், இல்லையா? அதுவும் உங்களுக்கு உதவும்.

இத்துணை அழகான பாடல். இருந்தும் இணையத்தில் அத்துணை சரியான தரத்தில் இல்லை என்பதை இங்கு நான் சொல்லி ஆக வேண்டும். எனவே, புதிரில் ஒலிப்பதைக் கண்டு ஏமாந்துவிடாதீர்கள். I was lucky to have a better source. அவ்வளவு தான். கேட்டுவிட்டு சொல்லுங்கள்.

Have a nice day.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Some jocularly comment always, “why not other cities/towns from Tamil Nadu”. This is for you folks – the very first word of this song starts with an important city/town in Tamil Nadu. Satisfied?

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Thoothukudi (தூத்துக்குடி முத்து முத்து) from Ellame En Raasa Thaan (எல்லாமே என் ராசா தான்) (1995)