Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

200 என்னும் மைல்கல்லை ஒரே நாளில் தொட்டுவிட்ட @NChokkan மற்றும் @thachimmammuவிற்கு வாழ்த்துகள். அதற்கு முந்தைய நாள், @ezharai 250ஐயும் @sagittarian82 100ஐயும் தொட்டார்கள். அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள். இங்கு விமர்சனத்தில் சொல்லாமல் விடுபட்டு போனாலும், என்றும் நம் அனைவரின் உள்ளத்திலும் வாழ்த்துகள் உங்கள் அனைவருக்கும் உண்டு என்பதை அறிந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன் 🙂


இரண்டு நாட்களாக சற்று கனமான செய்திகளை உள்வாங்கினோம். துக்கம், மகிழ்ச்சி, ஏமாற்றம் என்று சகலமும் கலந்தது தானே வாழ்க்கை?

அதனால், இன்று பாதை மெதுவாக மாறி, வேறு மாதிரி பாடலுக்குள் நுழைகின்றோம். மனதுக்கு ஒத்தடம் கொடுத்த மாதிரி இருக்கும் என்று நம்புகிறேன். கேட்டுவிட்டு சொல்லுங்கள்.

அருமை நண்பர் சுரேஷ் இப்படி சொல்லி இருந்தார் 🙂

அதற்கு ஏற்றாற்போல நான் ஏற்கெனவே இந்தப் பாடலை களம் இறக்க ஆயத்தமாகிக்கொண்டு இருந்தேன். அதற்கான நாள் வந்துவிட்டது.

முதலில், இந்தப் பாட்டு என்ன மாதிரியான genre வாக இருக்கும் என்பதை, உங்கள் imaginationக்கே விட்டுவிடுகிறேன். ஒரு முறை கேட்டுவிடுவோமா?

கேட்டுவிட்டீர்களா? இந்த romantic பாட்டுக்கு lifeline க்ளூ கொடுப்பதே பெரும் பாவம்! அதான் தலைப்பிலேயே விடையையே சொல்லிவிட்டேனே 😉

அதென்ன Triumvirate? மூவர் அணி.

படத்தில் 3 சூப்பர் நாயகிகள். அதற்கேற்றாற் போல 3 பாடல்கள். அந்த 3 பாடல்களிலும், ஒரே 3 பாடகிகளை உபயோகப்படுத்தி இருப்பார் இசைஞானி இளையராஜா. இது மாதிரி ஒரு sui generis க்ளூ எங்காவது பார்த்திருக்க முடியுமா? இதை விடவும் வேறு க்ளூ வேண்டுமோ?

பிரச்சினை இல்லை. அவர்கள் 3 பேரின் குரலைத் தான் இடையிசையில் கேட்டுவிட்டீர்களே. இன்னும் என்ன தாமதம்? ஹும் புறப்படட்டும் விடைக் கணைகள்!

I feel today’s is one of the best clues to ever come in our #365RajaQuiz. It has all the elements in it. You need to be using your critical thinking to recollect, what could be the movie. You may need to recollect, which 3 singers, Raaja could have used for these 3 gorgeous heroines of yesteryear! Besides, you will have to also use your listening skills to spot-out the voices in the track. And if you were able to identify, without any SQL searches, then give yourself a pat in the back. Because, without SQL, I will agree, this can be a tough clue to crack.

மேலும் இதையும் சொல்லியே ஆக வேண்டும். ரிக்கார்டிங் செண்டரில், இந்த Echo இசைத்தட்டின் முன் அட்டையையும், பின் அட்டையையும் பார்க்கவே தனி டிக்கெட் போட்டு வசூல் செய்திருந்தால், செம கலெக்‌ஷன் ஆகியிருக்கும். நல்ல வேளை! அந்தக் காலத்தில், பேன் அது இது என்று ஹேஷ்டேக் எல்லாம் யாரும் போடாமல் போனார்கள்! 😉

All the best.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Noise-removal done once. Noise-gate was used once. No tempo was changed.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Title of this movie comprises 5 words and forms a common, idiomatic cliche that many of us will use in everyday parlance, to those who boast about themselves by blowing their own trumpets.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Ammaadiyo Pothum Pothum (அம்மாடியோ போதும் போதும்) from Ennai Paar En Azhagai Paar (என்னைப் பார் என் அழகைப் பார்) (1983)

Advertisements