Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

Today’s #365RajaQuiz clue is dedicated to the victims of terror everywhere. We see and relate ourselves to global events, through Maestro Ilaiyaraaja’s music and this is a testimony to that. 😦

20130416-000018.jpg

குண்டுகள் அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகரில் வெடித்திருக்கலாம், இராக்கில் வெடித்திருக்கலாம், ஆப்கானிஸ்தானில் வெடித்திருக்கலாம். ஆனால் இறந்தது, ஒன்றும் அறியாத அப்பாவி மக்கள் என்பதை மட்டும் நினைவில் ஆணித்தரமாக அடித்து நிறுத்துவது முக்கியம்.

இந்த நாடு, அந்த நாடு என்று குடியுரிமை வேண்டுமானால் வேறுபடலாம். அடிப்படையில், மக்கள் மக்களே. பேருந்தில் ஏறினால், நிறுத்தத்தில் இறங்கவேண்டும் என்பதும், வீட்டை விட்டு சென்ற அப்பா, வேலை முடிந்ததும் வீடு திரும்ப வேண்டும் என்று குழந்தையும், மராத்தான் ஓட்டத்தில் ஓடி, இறுதி இலக்கைத் தொட்டுவிட்டு வீடு திரும்ப வேண்டும் என்பதெல்லாம் அடிப்படை மனிதனின் சாதாரண எதிர்பார்ப்பு. ஆனால்,அதில் குண்டுகளையும், அரசியலையும் நுழைத்து, மனிதனுக்கு மனிதன் வேறு என்று காட்டும் இந்த அய்யோக்கிய போக்கு, சமீப காலங்களில் அதிகரித்து வருவது, மிகவும் வருந்தத்தக்கது.

ஓடும் ஓட்டத்தில் குண்டு வைத்து சிதைத்தால் அடிமட்டமே ஆட்டம் கண்டுவிடும் என்று தெரியாதவர்களா, குண்டு வைத்த கயவர்கள்? எங்கெல்லாம் வன்முறை தலையெடுத்து, அதனால், சாதாரண மனிதன் சின்னாபின்னமாகுகின்றானோ, அவனுக்காகவும், அவன் குடும்பத்திற்காகவும் மரியாதையோடு ஒரு சில விநாடிகள் இசைஞானி இளையராஜாவின் இசையின் பின்னணியில் சிந்தித்து விடை அளிக்கலாம் என்ற எண்ணத்தில், இன்று ஒலியும் ஒளியும் முறையில் க்ளூவை பதிவேற்றி இருக்கிறேன்.

இரவு பதிவேற்றம் செய்யும்போது என்னிடம் சிக்கிய சில புகைப்படங்களை மட்டும் வைத்து, இதைத் தயாரித்தேன்.


இன்றைய புதிர், வேற்று மொழிப் படத்தில் இருந்து டப் செய்யப்பட்ட படத்தின் பாடல்.

இருந்தாலும், இந்தப் பாட்டு அருமையான தாலாட்டு வகைப் பாடல். முதலில் situationஐ சொல்லிவிடுகிறேன். குழந்தையின் அம்மா, அல்ப ஆயுசில் போய் சேர்ந்துவிடுகிறாள். பாவம். குழந்தை வளர்கிறது. மனைவியை பிரிந்த சோகத்திலும், வருத்தத்திலும், குழந்தையை உதாசீனப்படுத்திவிடுகிறார் அப்பா. அது சில நாட்களிலேயே தவறு என்று புரிந்து, திருந்தும் சமயத்தில், விதி விளையாடுகிறது. பாசமிகு அப்பா, அத்துணை பாசத்தைக் கொட்டி, தாய்க்கு தாயாகவும், தந்தைக்கு தந்தையாகவும் இருந்து பார்த்துக்கொள்ள துடிக்கும் போது, காலனின் பாசக்கயிறு, குழந்தைக்கு ஒரு நோயின் வடிவத்தில் இறங்குகிறது. குழந்தை உயிர் பிழைக்குமா இல்லையா என்ற கவலை அப்பா உட்பட, அந்தக் குழந்தைக்கும் வர, இதைக் காணப் பொறுக்காத அம்மா, ஆவி வடிவத்தில் அவ்வபோது வந்து தாலாட்டு பாடுவது போல ஒரு டைரக்டர் visualization செய்து இந்தப் பாட்டை எடுத்திருப்பார். குழந்தை பிழைத்ததா இல்லையா என்பதை வெண் திரையில் காண்க.

என்ன, இது வேறு ஏதோ ஒரு பாட்டு மாதிரி இருக்கேன்னு யோசிக்கறீங்களா? ஆமா. பார்த்தோமே. இதுல –> 70/365 – #365RajaQuiz – Child-Deprivation is a Sin!

அவ்வளவு தான். இதை வைத்தே, நீங்கள் விடையை சொல்லிவிடுவீர்கள்.அப்படி இல்லை என்றால், SQL எல்லாம் ஒன்னும் வேணாம். வாங்க சேர்ந்தே கேட்போம்.

என்ன கேட்டீங்களா?

இப்ப கண்டுபிடிப்போமா?

  1. கன்னட, தெலுங்கு, மலையாளம் — எந்த மொழி வாடை அதிகம் அடிக்குது? ராஜாவுடைய Specialty யே அது தானே? அவர் பாட்டுக்கு பிரசாத் ஸ்டூடியோல உக்காந்துகிட்டே, எத்துணை அழகா, அந்தந்த மண்ணின் வாசனைக்கேற்ப இசையை அமைக்கிறார் பாருங்கள்!
  2. குழந்தை, உறவுகள், பாசம் — இப்படி சுத்தி, சுத்தி, குழந்தைகள் பத்தி படத்தை, இயல்பாகவும், பாசத்தோடும், பாந்தத்தோடும் எடுக்க இவரை விட்டால் வேறு யார் இருக்க முடியும்?
  3. அந்த குரல் யாருடையது என்று சுலபமாக கண்டுபிடித்து இருப்பீர்கள். ஆக, இது எந்தக் காலத்தை சேர்ந்த படம்/பாட்டு என்றும் கணித்திருப்பீர்கள்.
  4. இந்த வகை orchestration style கூட அவர் (8)/(9)0களில் அதிக பாடல்களில் பயன்படுத்தியது தான் 🙂

என்ன கண்டுபிடித்துவிடலாம் தானே?

One second: இந்த க்ளூவின் வீடியோவை இன்னொரு முறை, முழு screenலோ, அல்லது தொலைக்காட்சியிலோ (Apple TV/iPad/Vimeo) பாருங்கள்.


இசைஞானி இளையாராஜாவின் ராஜாங்க நடையைத் தவிர, காட்சிகளில் வரும் அனைவரும் அந்நியர்கள். ஆனால் வலி? ரத்தம்? அது எல்லாருக்கும் ஒன்று தானே? அதை பிரதிபலிக்கும் விதமாக, இவரின் சோகத் தாலாட்டு இசைக்கு, நேற்று பாஸ்டன் பயங்கரத்தின் footage எப்படி ஒத்து போகிறது பாருங்கள். காரணம் என்ன? வெறும் மெலடியைப் போட்டோம், சோகத்தை டொய்ங் டொய்ங் என்று இசைத்தோம் என்று இல்லாமல், அந்த உயிர் பிரியும் / பிரிந்த தருணங்களை பிரதிபலிக்கும் உணர்வுகளை, இசையின் ஒவ்வொரு துளியிலும் இசைஞானி தைத்து இருப்பது தான்! அதனாலேயே தான், இந்த இசைக்கு, இந்த பயங்கரவாத சம்பவத்தின் படங்கள் இயைந்து போகின்றன. இது என்னுடைய தாழ்மையான கருத்து. அவ்வளவே. பல குழந்தைகள் காயப்பட்டிருப்பதைக் கேட்டும் மனம் பேதலிக்கிறது. இறைவனை வேண்டுவோம்.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Noise-removal done twice times. Noise-gate was used once. No tempo was changed.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

I will accept the song’s answer either in Tamil or in that original language :). Movie’s name in Tamil as well as in the original comprised 3 words. Movie was a blockbuster mega hit in the original language and won the State Award for the child artiste.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: En Poove (என் பூவே) from Poove Pon Poove (பூவே பொன் பூவே) (1992)