Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

PBS

பன்மொழி பின்னணி பாடகர் P.B.ஸ்ரீனிவாஸின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை, #365RajaQuiz, உங்களின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறது. நேற்று பலர் கீச்சி இருந்தனர். அதில் ஒன்று இதோ:

அந்த உணர்வுக்கு மதிப்பு கொடுத்து, இன்றைய பாடல் புதிருக்கு விடை அளிக்கும் அதே சமயம், PBS குறித்து எதை வேண்டுமானாலும் எழுதுங்கள். அன்னாரின் அஞ்சலிக்கு, நாம் செலுத்தும் மரியாதையாக அது இருக்கும். மேலே காட்டின கீச்சில், நான் சொல்ல வந்ததை, அந்தப் பாடலின் தரவிலேயே கண்டுகொள்ளலாம். இருந்தாலும், மீண்டும் தந்துவிடுகிறேன்.

இந்தப் பாட்டை பிடிக்காதவர்கள் எவரேனும் இருக்க முடியுமா? கண்ணதாசன் – MSV – PBS கூட்டணியில் வந்த பாடல்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது இது தான். இன்னும் நிறைய உள்ளன. இருந்தாலும், இது ஸ்பெஷல்🙂

அதே போல, யுவன் சங்கர் ராஜாவின் இசையில் வெளிவந்த 7g-ரெயின்போ காலனி படத்தில் இவர் பாடிய இந்த பிட் சைட் பாடல், இது என்ன மாற்றம், எனக்கு மிகவும் பிடிக்கும்🙂

இரண்டு பாடல்களுக்குள் பல ஆண்டு கால இடைவெளி இருந்தாலும், அந்த குரலில்….? ஊகும்…அதே குரல், அதே காதல், அதே மயக்கமா (சோனியா இல்லாத கருப்பு வெள்ளை படம்) கலக்கமா (சோனியா நிறைந்த கலர் படம்)😉

That is P.B. Srinivas. RIP.


இன்று வரும் பாடலில், இடையிசையில் low-bassல் கிடார்களும் (just look, how beautifully it is strummed),வயலின்களும் ஆரம்பிக்க, டிரம்ஸ்களுடன், லீட் கிடாரும், வயலின்களும் பயணிக்க, பாடலே ஒரு வித வித்தியாசமாக இருப்பதை உணர்த்தும். காரணமும் அதுவே. இந்தப் பாட்டின் முக்கிய க்ளூவே இது தான்: அதாவது, ஆங்கிலத்தில் sui generis என்று ஒரு வார்த்தை உண்டு. அதற்கேற்றாற் போல, இந்தப் படத்தில் இந்தப் பாட்டும் இன்னொரு பாட்டும் வருவது தான். இது மாதிரி பாடல்கள் எனக்கு தெரிந்து வேறு எதுவும் வந்த மாதிரி நினைவு இல்லை. விடை தெரிந்தவர்கள் என்னைத் திருத்தினால், திருத்திக்கொள்கின்றேன்🙂 இதிலேயே நான் விடையை சொல்லிவிட்டேனோ என்று சற்று அச்சமாக இருக்கிறது. பார்ப்போம்.

Have a nice week ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Noise-removal done four times. Noise-gate was used once. Tempo had to be slowed by 2.5% so as to sound reasonable in its pace.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Although P.B.Srinivas had worked very little with Maestro Ilaiyaraaja, he is associated with this song in a big way.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Kaise Kahoon (कैसे कहूँ ) from Nandu ( நண்டு) (1981)