Tags

, , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இதுல கூட இவ்வளவு குழப்பங்கள கொண்டு வந்த பெருந்தலைகளுக்கு வந்தனம் சொல்லும் விதமாக களம் இறங்குவதே இன்றைய பாட்டு!

நேற்று வந்தது கவிஞர் வைரமுத்து. ஆனால் இன்று வருவது,பல தலைமுறைகளைத் தாண்டி, அருமையான பல பாடல்களை எழுதி, இசைஞானி இளையராஜவுடன் பயணம் செய்துகொண்டிருக்கும் கவிஞர் முத்துலிங்கம்!

Kavignar Muthulingam

தமிழ் புத்தாண்டு என்று இருந்த நாளை, சித்திரைத் திங்கள் முதல் நாள் என்று ஆக்கிவிட்டது சில பெருந்தலைகள். அதனால், அவர்களை வாழ்த்தும் விதமாக, படு ஜாலியாகவும், நையாண்டித்தனமாகவும் கவிஞர் முத்துலிங்கம் எழுதியிருக்கும் பாட்டு பொருத்தமாக இருக்கும் என்று தான் இதை இன்று இறக்குகின்றேன். இசைஞானியின் தர்ம அடியாக வரும் இசை ஒரு பக்கம், நையாண்டித்தனமாக பாடல் வரிகள் என்று இன்னொரு பக்கமுமாக, இந்தப் பாட்டை ரசிக்க பல காரணங்கள் உண்டு. அதுவும், முதல் சரணத்தில் வட்டம் என்ற conceptஐ வைத்து கவிஞர் முத்துலிங்கம் நடத்தும் காமெடி சூத்திரம் இருக்கே…செம 🙂

இன்றைய பாடலை #SoundCloud பதிவேற்ற மறுத்துவிட்டது. அதனால், இதனை ஒலியும் ஒளியும் முறையில் பதிவேற்றம் செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. எல்லாக் கருவிகளிலும் இயங்கும் வண்ணம் Vimeoவில் பதிவேற்றம் செய்து இருக்கின்றேன்.

இந்தப் பாட்டை எத்துணை பேர் கேட்டிருக்கின்றீர்கள் என்று என்னால் யூகிக்க முடியவில்லை. ஆனால், பாடல் அதகளம் தான். என்ன அடி, என்ன அடி! இதற்கு முன்னால் நாம் பார்த்த 200/365 – #365RajaQuiz – மிரட்டும் மைல்கல் மலேசியா வாசுதேவன் மற்றும் 249/365 – #365RajaQuiz – காளை காளை, முரட்டுக்காளை! போல, இதுவும் தர்ம அடி. வெறும் அடி மட்டும் அல்ல, கோரஸ் குழுவினரின் குரலும், ஷெனாயும், பாடலின் இசைக்கு ஏற்றவாறு அருமையாக அமைந்திருப்பது தான் சிறப்பே. அருமையான இடி இசையில், கிடாரும் போட்டி போட்டுக்கொண்டு பயணிக்கும் அந்த அழகைப் பற்றி சொல்வதா, அல்லது, என்கோடிங் செய்யும்போதே, இதன் waveformஐ பார்த்து சிலாகித்ததை சொல்வதா என்று தெரியவில்லை.

அருமையான பாடல். நேற்று வந்த பாடல் ஒரு காலம், இன்று வருவது வேறு காலம். காலங்கள் மாறினாலும், இசைஞானியின் சங்கதிகள் மாறவில்லை. அப்படி இருக்கும்போது, முந்தி மாதிரி அவர் இசைச்சான்னு வர்ற விமர்சனங்களை என்னால் அதிகம் புரிந்துகொள்ள முடிவதில்லை. குறையாக சொல்லவில்லை. என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை என்று மட்டும் தான் சொல்கின்றேன். 🙂

Again, compare and check for yourself.

Have a nice weekend.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Starting verse of a yesteryear famous Tamil song (featuring TR Ramachandran, “Danaal” Thangavelu, and Anjali Devi) is the title of today’s movie.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Pottu Mela Pottu (பொட்டு மேல பொட்டு வச்சு) from Kangalum Kavi Paaduthey (கண்களும் கவி பாடுதே) (2008)

Advertisements