Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். விமலா,கவிஞர் வைரமுத்துவிற்கு இலக்கிய சிந்தனை விருது வழங்கிய செய்தியைப் படித்தேன். அது மட்டுமல்லாமல், முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியும், இந்திய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான மார்கண்டேய கட்ஜூ அவர்களைப் போல,இந்தியாவில் வறுமையால் வாழ பொறுக்காமல் தற்கொலை செய்துகொள்ளும் உழவர், உழத்தியர்களின் பிரச்சினையைப் பற்றி, மிகவும் கவலைப்படுபவர்களில் நானும் ஒருவன். உங்களில் பலருக்கும் அந்தக் கவலை உண்டு என்றும் நம்புகிறேன். அப்படிப்பட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களில் சிலருக்கு, இழந்த சொந்தங்களைக் கொண்டு வந்து நிறுத்த முடியாவிட்டாலும், மூன்றாம் உலகப் போர் தொடர்கதையை எழுதி, அதைப் புத்தகமாக வெளியிட்டு, அதில் வந்த இலாபத்தைக் கொண்டு, உழவர் குடும்பங்களுக்கு கவிஞர் வைரமுத்து வழங்கிய உதவித்தொகை பற்றிய செய்தியை இன்றைய இந்து பத்திரிக்கையில் (சென்னை பதிப்பு) படித்து, சிறிது ஆறுதல் அடைந்தேன். Charitable-giving is very common in this part of the world and one only hopes it increases more in that part of the world too!

Function Vairamuthu
Justice S. VimalaJustice Markandey Katju

இதை நினைவில் நிறுத்தும் விதமாக, இசைஞானி இளையராஜா இசையமைத்து, கவிஞர் வைரமுத்து மட்டும் பாடல்கள் எழுதிய படத்தில் இருந்து இந்தப் புதிரை களம் இறக்குகின்றேன்.


சமீபத்தில் நம் @w0ven ஒரு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த தீம் மாதிரி புதிர் வைக்கறீங்களே…அது நல்லா இருக்கு..அப்படியே வையுங்களேன்னு. நான் சொன்னென், predictability may quell the interest…அதனால முடியாது. முடியும் போது கண்டிப்பான்னு.

இருந்தும், மற்றவர்களின் கருத்துக்கு ஒப்ப, இவருடையதையும் ஏற்று, இன்றும் நாளையும் மட்டும் ஒரே தீம்ல தான் பாடல் வரப்போகிறது. ஆனா, அது என்ன தீம்னு, 260/365 பின்னூட்டத்துல சொல்லுங்க. சரியா? 😉


அருமையான tribal beatsல், கோரஸ் பாப்பாக்கள், மலைராணிகளாக “னனனா” பாட, நாயனமும் ஷெனாயில் ஊதியாச்சு. இந்தப் புதிரை பொறுத்த வரையில், இவ்வளவு தான். ஆனால், பாடலை முழுக்க கேட்டால் தான், முழு மகிமையும் புரியும்.

But wait! How will Maestro leave us so easily? Pay attention to the impeccable bass-guitars, he uses. Amazing! Ha ha. Bass-guitars for a tribal-beat song? Only he can come up with that kind of Promethean stuff!

பாடியது யாருங்கறேன்! 😉 இந்த மாதிரி பாடல் எல்லாம், இந்த “அட்டகாஷ்” (@vrsaran பாஷையில் ;)) பாடகருக்கு அல்வா மாதிரி. போட்டுத் தாக்கிட்டு brake கூட போடாம போய்ட்டே இருப்பார். 😉 He is a juggernaut for songs like these 🙂

அப்புறம் இந்த பாடகி? இவங்களும் லேசு பட்டவங்களா? அடிச்சு சாத்திகிட்டு போவாங்க. குறிப்பா முதல் சரணத்தில், பாடகருடைய வரிகளுக்கு பாடகி எசப்பாட்டு, எதிர்பாட்டா பாடுவாங்க. பட்டைய கிளப்பிகிட்டு காட்டுக்குள்ள காமன் பண்டிகைக்கு களம் காணும் வகையான பாடல்.

கவிஞர் வைரமுத்து சும்மா விடுவாரா? இசைஞானி இளையராஜாவுடன் சரியான wavelengthல் பயணப்பட்ட காலம் வேற ஆச்சே. பின்னி எடுத்திருப்பாரு.

ஆக, இசைஞானியின் percussion-based tribal அடி ஒரு பக்கம், பாடகர் இன்னொரு பக்கம், பாடகி இன்னொரு பக்கம், பாடலாசிரியர் இன்னும் ஒரு பக்கம் என்று, சரியான டீமாக நொறுக்கித் தள்ளிய பாடல் தான் இது.

இந்தப் பாடலின் மற்ற கடினமான இசைத் துணுக்குகளை விடுத்து, சுலபமானத் துணுக்கை கொடுத்துள்ளேன். மேடு ஏறும் காலத்துக்காக, இது என்னால் முடிந்த sop 🙂

இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களும் செம சூப்பர் டூப்பர் ஹிட். இலங்கை, சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் வானொலி நிலையங்களில், நிஜாம் பாக்கு, கோபால் பல்பொடி விளம்பரங்களை விடவும் அதிகம் ஒலித்த பாடல்கள் இதுவாகத் தான் இருக்கும் என்று அடித்து சொல்லும் அளவுக்கு அதகளப்பட்ட பாடல்கள்.

சனிக்கிழமை…இப்படிப் பட்ட பாடல்களைத் தந்த இந்த டீமை வாழ்த்தி கொண்டாடுவோம்.

Have a nice weekend.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Both the hero and heroine of this movie were heirs to legendary actors of yesteryear. This movie was directed by an ace, legendary director, albeit, movie tanked at the box-office.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Kanni Ponnu (கண்ணிப் பொண்ணு) from Ninaivellam Nithya ( நினைவெல்லாம் நித்யா) (1982)

Advertisements