Tags

, , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

அடேங்கப்பா! 256/365க்கு அதிரடியாக வந்த அமோக வரவேற்ப்பைக் கண்டு எல்லாரையும் போல நானும் மகிழ்ந்தேன். Twitter அதகளப்பட்டது. Sweet Sakkubai😉

அது இருக்கட்டும்😉 இன்றைய க்ளூவின் தலைப்பே, இந்த இசைக்கு உரிய இலக்கணத்தை சொல்லிவிடுகிறது, இல்லையா?

மெதுவாக ஊர்ந்து செல்லும் மெலடி பாடல்களை இதற்கு முன்னர் பார்த்தோம். பல பாடல்களை இது மாதிரி இசைஞானி வழங்கியுள்ளார். அதனால், அதில் அதிசயம் இல்லை. ஆனால், சிறு வயதில், சீட்டுக்கட்டில் வீடு கட்டி விளையாடிய பழக்கம் நம் அனைவருக்கும் இருக்கும் என்றே நம்புகிறேன். அதில், எப்படி, நிதானமாக, ஒன்றன் மேல் ஒன்றை அடுக்கி, செப்பனிட்டுக்கொண்டே முன்னேறுவோம்… இல்லையா? அதே போலத் தான் இன்றைய துணுக்கு இசையும்.

அருமையான புல்லாங்குழலில், நீண்ட தொடக்கம். அதன் கூடவே, அதற்கு உறுதுணையாக வரும் கிடாரும், மணியின் சத்தமும், மெல்ல ஒலிக்கும் டிரம்ஸ்களும், தபேலாவும், இதை செவ்விய இசையாக மாற்றிவிடுகிறது. இதை மட்டுமே நாள் முழுக்க கேட்டுக்கொண்டிருந்தால், மனம் சுத்தமாகும், கவலை மறந்து போகும். அதுவும் நேற்றைய சக்குபாய் ஜலதோஷம் பிடித்தோருக்கு, நிவாரணியாக இந்த இசை இருக்கும் என்றே தான், சூட்டைத் தணிக்கவல்ல உன்னத இசைத் துணுக்காக இதை களம் இறக்குகின்றேன்.

1980களை விட்டு வெளியே வாருங்கள் என்று சொன்ன நண்பர்களே… 😉 கவனியுங்கள். எவ்வித preferential treatmentஉம் இல்லாமல் தான் நம் பயணம் தொடர்ந்து கொண்டு வருகிறது. நிதானமாக கவனித்துப் பாருங்கள், எல்லா கால இசைத் துணுக்குகளும் வந்த வண்ணம் உள்ளது. It will certainly have some proportional excesses based on the proportional numbers of how many films Maestro had scored during various time-periods. Other than that, we have been very consistent across all the periods. சரியா?

இந்த அருமையான இசையால், உங்களுடையப் பொழுதும், என்னுடையதும் நன்கு கழியட்டும்🙂

Have a good one!

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Movie’s title will be the name of a “family relative”, say, மகள் etc. (உறவுமுறை).

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Ponmani Maadam (பொன்மணி மாடம்) from Periamma (பெரியம்மா) (1993)