Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

#365RajaQuizக்கு இன்று தான் பெரிய தடை ஒன்று மலை போல் வந்து, பனி போல் உருகி சென்றது. வீட்டுக்குள்ளேயே ஒரு மாபெரும் விபத்தில் இருந்து மயிரிழையில் சிராய்ப்புகளோடும், சிறு அடிகளோடும் தப்பித்தேன். 12-B மாதிரி கதை வேறு மாதிரி சென்றிருந்தால், கத்தரிக்காய் (vegetable) நிலைமையோ, அல்லது வேறு ஏதாவதோ தான்😉 வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும், எப்படிப்பட்ட அதிசயங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன. 30-அடி உயரத்தில் இருந்து, கூரை பிய்ந்து உடைய, அதன் மேல் நின்றிருந்த நான் நெட்டுக்குத்தலாக கண் சிமிட்டும் நேரத்தில் தலை கீழ் நோக்கியும், கால்கள் மட்டும் ஒரே ஒரு கட்டையில் மாட்டிக்கொண்டும் வலது கையில் சுதாரித்துக்கொண்டு ஒரு கட்டையையும் நான் பிடித்துக்கொள்ள, 100வது நாள் மொட்டை-பாஸ் சத்யராஜ் விழுந்ததுபோல ஆகியிருக்கவேண்டிய சங்கடமான நிலையில் இருந்து சுதாரித்து தப்பித்ததில் கொஞ்சம் ஆடித்தான் போய் இருக்கிறேன்🙂. இன்னும் இரண்டு நொடிகள் அதிகம் ஆகியிருந்தால், கட்டையும் உடைந்திருந்தால், கட்டை தான்😉 ஹும்..அந்த நேரத்திலும் யாரோ பிடித்து இழுத்துவிட்டது போல எழுந்து நின்றது தான் இன்னும் அதிசயமாக இருக்கிறது. இறைவனுக்கு நன்றி சொல்லிவிட்டு அமைதியாக இருக்கின்றேன்🙂 I could have never imagined a freakish incident like this. Never! And there lurks the opportunities for such accidents🙂

விபத்துகள்.

அதில் தான் எத்துணை பேர் சிக்கி சின்னாபின்னமாகி இருக்கின்றார்கள்! அவர்களுக்காக இந்தப் புதிரை dedicate செய்வோம். சரியா? 2010ல் நியு யார்க் டைம்ஸில் படித்ததை என்னால் மறக்கவே முடியவில்லை. இந்தியர்களில் யாரைக் கேட்டாலும், அவருக்கு நேரிடையாக தெரிந்த ஒரு ஆசாமி விபத்தில் சிக்கியிருப்பார் என்று அவர்கள் எழுதியது தான் எத்துணை நிதர்சனமான உண்மை! http://www.nytimes.com/2010/06/08/world/asia/08iht-roads.html?pagewanted=all&_r=0


Vairamuthu

இன்றைய பாடல் இந்த themeல் அமைந்தது தான். இசைஞானி, விபத்துகளுக்கும் பாடல்களை அமைத்து இருக்கின்றார். இன்றும் நாளையும், ஒரு குறிப்பிட்ட themeல் பாடல்கள் வரும். அதாவது, joy and pathos versions of the same song.

முதலில் வரும் க்ளூ மகிழ்ச்சியிலும், எதிர்பார்ப்பிலும் அமைந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பே சாலை விதிகளை மீறி வாகனத்தை செலுத்தும் நாயகனுக்காக காலனின் பாசக்கயிறு காத்திருப்பதை இசையின் படு வேகத்தில் இசைஞானி காட்டிவிடுகிறார் பாருங்கள்.

பின்னர் அவன் இல்லாமல் வாடும் நாயகி, பிரிவாற்றாமல் பாடும் சோகப் பாடலில் எப்படி இசை மாறுகிறது பாருங்கள்.

இரண்டிலும் percussion இருந்தாலும், வேகத்தில் அதிரடியாகவும், சோகத்தில் மென்மையாகவும் வருகிறது பாருங்கள்.

சாலை விதிகளை மதித்து உயிர் சேதத்தை தடுப்போம். இது குறித்து ஒரு நொடி யோசிக்க வைத்திருந்தாலே, இன்றைய #365RajaQuizன் நோக்கம் பூர்த்தி ஆகியிருக்கும்🙂.

அனைவருக்கும் இனிய வார இறுதி அமைய வாழ்த்தி விடைபெறுகிறேன்.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.


Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Coimbatore Producer, Coimbatore Actor and Dharapuram Director. Vairamuthu is the lyricist.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Paadavaa Un Paadalai (பாடவா உன் பாடலை ) from Naan Paadum Paadal ( நான் பாடும் பாடல்) (1984)