Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இன்று அதிகம் விமர்சனம் எழுதும் மூடில் இல்லை. தவறாக எண்ண வேண்டாம். அலுவலகத்தில் ஒரு நிகழ்வு நடந்தது. அது குறித்து, சுருக்கமாக கீச்சினேன். இதோ:
http://storify.com/rexarul/story-6

இசைஞானியின் பாடல்களை, வெறும் பொழுதுபோக்குக்காக கேட்பது ஒரு பக்கம், வாழ்க்கையின் மேடு பள்ளங்களை உணர உதவும் ஒரு கைத்தடியாக பார்ப்பது இன்னொரு பக்கம். இதில், உங்களில் பலர் போல, நான் இரண்டாம் வகை. இசைஞானியும், குறையே இல்லாமல், எல்லா வகை உணர்வுகளுக்கும் உரிய பாடல்களை, நம் ஓர் உயிர் உள்ள மட்டும் அன்பவித்து முடிக்க முடியாத அளவுக்கு போட்டுத் தள்ளிவிட்டார். கேட்டுக்கொண்டே மேடுகளையும், பள்ளங்களையும் கடக்க பல யுகங்கள் வேண்டும். அதனால் தான் என்னவோ, உடனே என் மனதுக்கு இன்று உதித்தது இன்றைய பாடல்.

வருத்தத்தோடு காரில் ஏறியவுடன் தேடிப் பிடித்து போட்ட பாடல் தான் இன்று களம் இறங்கியுள்ளது. இன்னும் பழைய காலத்து ஆசாமி நான் என்பதால், CD அல்லது cassette இருந்தால் மட்டுமே என்னால் பாடல்களைக் கேட்க முடியும். இருந்தது, கேட்டேன். இன்றைய பாடலை இசைஞானி அவருடைய நெருங்கிய நண்பருக்காக அளித்த பரிசு என்றே சொல்லலாம். விஷுவல் முறையில் கதை சொல்லும் வழக்கத்தை, இவர் கொண்டு வந்ததது தான் தமிழ் சினிமாவின் முக்கிய மைல்கல் என்று கூட சொல்லலாம்.

இன்றைய பாடல் 63/365 – #365RajaQuiz – குழந்தையின் சிரிப்பில், இறைவனைக் காண்போம்! யும் ஞாபகப் படுத்தலாம். ஒரு முறை கேட்டுவிட்டு வந்துவிடுங்கள்.

அந்தப் பாட்டில் எப்படி குழந்தை மையப் பொருளாக இருந்ததோ, இன்றைய பாடலிலும் உறவுகள், சொந்தங்கள், குடும்பம் என்பது தான் மையப் பொருளே. இந்தப் பாட்டை கண்டிப்பாக கேட்காமல் இருந்திருக்கமுடியாது என்பது என் அனுமானம். கேட்டுவிட்டு சொல்லுங்கள்.

இசையின் மெலடி எவ்வளவுக்கு எவ்வளவு அருமையோ, அதே போலத் தான் பாடலின் வரிகள். இந்தப் பாடலின் வரிகளை, ஒரு முறை கேட்டால் மறக்கவே முடியாது என்று கூட சொல்லலாம். ஆனால் பாடலை எழுதியவரோ, பெரிய தமிழ் ஆர்வலரும், சுட்டெறிக்கும் பேச்சாளரும் கூட. அரசியலில் போய் சேர்ந்ததால், இவருடைய திறமைகள் பாடல்களை எழுதுவதில் வெளிப்படவில்லையோ என்று யோசிக்கும் அளவுக்கு இந்தப் பாடலில் அவ்வளவு ஆத்மார்த்தமானக் கருத்துகளைக் கொட்டியிருப்பார்.

Have a nice weekend.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Lyricist, a Doctorate in Tamil, was a great politician of the AIADMK party and held several high-profile posts, including Ministerial berths in the State and Parliamentary positions in the Center.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Anbu Malargalin (அன்பு மலர்களின்) from Kannukku Mai Ezhuthu (கண்ணுக்கு மை எழுது) (1986)