Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம் நண்பர்களே.

250க்கு வாழ்த்துகளை அள்ளி வழங்கிய அன்பு உள்ளங்களுக்கு என்றென்றும் நன்றி.

இந்த சமயத்தில் நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். கடினமாகத் தர வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால், ஞாபகப்படுத்திப் பாருங்கள். ஒரே விதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தபோது, சற்று சுலபமானதை தர வேண்டிய நிர்பந்தங்கள் வந்தது. அது தவறு இல்லை. இது உங்கள் வலைத்தளம். உங்கள் ஈடுபாடு இதில் உள்ள வரை தான் எல்லாமே. அதனால், அதில் ஒரு தவறும் இல்லை. ஆனால் பாருங்கள். இன்னும் 114 நாட்கள் தான் இருக்கின்றன. இதற்குள், நினைத்த எல்லாவற்றையும் தர முடியவில்லை என்றாலும், பெரும்பாலான பாடல்கள் — across a broad spectrum — கொடுத்துவிட்டு retire ஆகவேண்டும் என்று விரும்புகிறேன். Tie-breaker போன்ற வார்த்தைகள் எல்லாம், சும்மா ஒரு ஜில்பான்ஸ்க்குத் தான். To pep you up and to charge you. மற்றபடி, நான் முதல் நாளில் இருந்து சொல்லி வந்தததுபோல, எக்காரணம் கொண்டும் கடினமாகத் தந்தே ஆகவேண்டும் என்று ஒரு நாளும் புதிரைத் தரமாட்டேன். அதே போல, நான் கேட்டிராத பாடல், அல்லது, மிகவும் அண்மையில் கேட்ட பாடல் என்பவை புதிரில் வராது. சரியா? தொடர்ந்து ஒத்துழைப்பு தருவீர்கள் என்று தெரியும். இருந்தாலும், ஒரு சிறிய clarification உதவியாகவும், இன்னும் அதிக ஈடுபாட்டோடு நீங்கள் பங்கேற்கவும் ஏதுவாக இருக்கும் என்றே இதைச் சொன்னேன்.

To be true to our Friday spirit, this is an easy, well-known song. கண்டுபிடித்துவிடுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது🙂

இன்றைய பாடல், ஒரு வித காதல் சோக டூயட். படம் செம டப்பா. ஆனா, பாட்டு ஒவ்வொன்னும் செம ஹிட். வானொலியில் இருந்து பேருந்து வரை, பேக்கரி கடை முதல் திருமண மண்டபம் வரை ஒலித்த பாடல்கள். இதில் வரும் ஒரு நையாண்டி பாட்டு, பின்னர் ஒரு கமலஹாசன் படத்தில் வில்லன் காரில் வரும்போது, அவன் வசமாக சிக்கிக்கொள்ளப் போவதை முன்கூட்டியே சொல்லும் தோரணையில் பாட்டு வருவதாகவும், அதற்கு பயந்துபோய் அந்த வில்லன் அந்தப் பாடலை off செய்யவும் சொல்வதாக செம காமெடியாக ஒரு சீன் வரும்.

இந்த இசைத்துணுக்கில் எத்துணை விஷயங்கள் இருக்கிறது. வரும் வயலின்களை கவனிப்பதா, அல்லது, வேறு திசையில் நகர்த்திச் செல்லும் கிடார்களை கவனிப்பதா. அட, இப்படி குழம்பி இருக்கும்போதே, அதென்ன “டொய்ன் டொய்ன் டொய்ன்”னு ஒரு தனி இசை வாத்தியம் வேறு? மிதமான drums, stereo split sound, bass and lead guitars. இந்த இசையை இந்த வாரம் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Jeeva Ilaiyaraaja was the producer of this movie.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Oomai Nenjin (ஊமை நெஞ்சின்) from Aanantha Kummi (ஆனந்தக்கும்மி) (1983)