Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இன்று நம் #365RajaQuizல் மற்றும் ஒரு மைல்கல் — 250வது நாள்.

இதை இந்த அருமையான, காதல் ரசம் சொட்டும் பின்னணி இசையோடு கொண்டாடவேண்டும் என்று விரும்பியே இதற்காக இதை queue செய்திருந்தேன்.

கோயம்புத்தூர் ராகம் தியேட்டரில் பார்த்தது, அரைக்கால் டவுசர் போட்டுக்கொண்டிருந்தபோது ;). நான் வளர்ந்தது அரசு ஊழியர் க்வார்ட்டர்ஸில். அங்கே, மாதத்தில் 2 அல்லது 3 முறை படங்களைத் திரையிடுவார்கள். அப்படித் தான் கடைசியாக இன்றைய பின்னணி இசை வந்துள்ள படத்தைப் பார்த்தேன். பல வருடங்கள் கழித்து இந்தத் திரைப்படத்தை சமீபத்தில் தான் பார்த்தேன். இன்றைய பின்னணி இசை முதன்முதலாக ஒலிக்கும் போது, என்னையும் அறியாமல் கண்கள் பனித்தன. அதை ஆனந்தக்கண்ணீர் என்று சொல்வதா, இல்லை, வேறு என்ன என்று சொல்வது என்றே தெரியவில்லை 🙂 ஏனென்றால், மின்னல் தாக்கியது போல, உடனே அந்தக் காலத்தில் நடந்த சில சம்பவங்கள் எல்லாம் கண் முன்னால் வந்து மறைந்தது. இந்தப் படமும் செம ஹிட், பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட். இருந்தாலும், பாடல்களின் இசையே இதில் தெரியாத வண்ணம் பின்னணி இசை அமைத்திருப்பார் இசைஞானி. அப்படிப்பட்ட இசையை, அதிகம் வேறு எங்கும் கேட்காவிட்டாலும், கேட்ட மாத்திரத்தில் கண்களை பனிக்கவைத்த இசைஞானியின் இசையை மெச்சிப்பேச வார்த்தைகளே இல்லை. Maestro’s music is certainly embedded in every synaptic space in our neurotic mind, I guess 🙂

படத்தின் கதை பாருங்க — ரொம்ப சிம்பிள். பெண்ணைப் பார்க்கிறான். திருமண வேலைகள் நடக்கவிருக்கிறது. திருமணம் நின்றுவிடுகிறது. இருவரும் இணைந்தார்களா, அல்லது பிரிந்தார்களா. இது தான் கதை. இதை எப்படிங்க ஒரு முழு நீளப் படமா எடுத்திருபாங்கனு நெனக்கறீங்க? இந்த கோயமுத்தூர் டைரக்டர், அதுல செம கில்லாடி! இந்த சிறிய கதைக்களத்தில், பின்னி அடித்திருப்பார் திரைக்கதையை. இந்தப் படத்தை இன்று கூட திரையிட்டால், மீண்டும் மீண்டும் பல முறை பார்த்துத் தள்ளலாம். சலிக்கவே சலிக்காது. அத்துணை மண்வாசனை நிரம்பிய, சாதாரண மக்கள் கதைக்குள் இருப்பார்கள்.

இன்று, பெண்ணியம், ஆணியம்னு பேசி வாழ்க்கையையே சூனியமாக்கிக்கிட்டு உக்காந்துட்டு, இது தான் முன்னேற்றம்னு பேசிட்டு இருக்கற ஆளுகளுக்கு மத்தியில, இந்தப் படத்துல வர்ற ஒவ்வொரு characterஐயும் பாருங்க 🙂 ஆத்மார்த்தமான காதலும், அன்பும், பாசமும், வீரமும், வெகுளித்தனமும், அப்படி ஈர்க்கும்!

அதே போல, ஒவ்வொரு characterஐயும் castingல செதுக்கி இருப்பார் இந்த கில்லாடி டைரக்டர். ஒவ்வொரு கேரக்டரையும் விரையமே செய்யாம கச்சிதமா செஞ்சிருப்பாரு. சாதாரண கதையில, முற்றிலும் மாறுபட்ட திரைக்கதைய நுழைச்சு நம்மை எங்கோ கொண்டு சென்றுவிடுவார். படத்தோட டைட்டில, அந்தக் காலத்துலேயே வெகுவா ரசிச்சேங்க. Because, titles won’t be continuous, but, contiguous. It will have actual scenes, where the titles, will be interjected after those scenes are over. It was differentங்க Call it class 🙂 பாருங்க, படத்துல வர்ற ஒவ்வொரு objectஉம் 100க்கு 100 நான் கோவைல, பல கிராமங்கள்ல பாத்தது தான் 🙂 For example, தண்ணி எடுக்கும் குடம், வீட்டில் விரிக்கும் சமுக்காளம், தவலை, இப்படி ஒவ்வொரு objectஉம் மிக மிக எதார்த்தமாக இந்த படத்துல வரும்.

இதையாவது ரீமேக் பண்ணாம விட்டாங்கன்னா, ரொம்ப நல்லாயிருக்கும்.

இந்த பின்னணி இசைக் கோர்வையில் முக்கியமானது: மிருதங்கம். பாருங்க, இந்தப் படத்துல, முழு பின்னணி இசையின் ஆதிக்கமும் இந்த மிருதங்கத்துல மட்டுமே இருக்கும். அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் வீணை, சந்தூர், கிடார் என்று மற்ற கருவிகள் வருமே தவிர, முக்கிய இசைக்கருவி மிருதங்கம் அன்றி வேறு எதுவும் இல்லை. அதே போல மிருதங்கத்தை மீட்டும் வேகத்தில் அதை romanceக்கும் pathosக்கும் அவ்வளவு நேர்த்தியாக இசைஞானி பயன்படுத்தியிருப்பார். அந்த சோகத்திலும், அவளின் மனம் அவனையே சுற்றி வருவதை, அவளின் flashbackல் அவள் மூழ்கும்போது மட்டும் சந்தூரில் இசைஞானி அதைத் துல்லியமாக இசையில் காட்டிவிடுவார்.

4 tracks from 4 different portions of the movie are selected to highlight the 2 joyful and 2 pathos scenes from where they were culled out. Noise was removed multiple times. Noise-gate was pressed into service as well. Volume was maximized. All the 4 individual tracks were conflated together. No tempo was changed. Audio was captured from the movie track in YouTube.

மிருந்தங்கம் தான் முக்கியம் என்றாலும், ஆதார சுருதியாக வரும் bass-guitarஐ இசை முழுக்க கவனியுங்கள். இப்படி BGMக்கு என்று மெனக்கெட்ட ஆசாமி இவராகத் தான் இருக்கும். அந்தக் காலத்து டூரிங் டாக்கீஸ்ல இந்த படம் ஓடியிருக்கும். எவன் bass-guitar எல்லாம் கேப்பான் அங்க. கொஞ்சம் யோசிச்சு பாருங்க. இருந்தாலும், எதுக்கு இந்த மனுஷன் இப்படி கஷ்டப்படணும். He’s a perfectionist – a musical genius of epic proportions, the way he “narrates” story through his score! Just amazing!

  1. Track 1: இங்கு நாயகன் நாயகியை பெண் பார்க்க வரும்போது அவள் கால் தடுக்கி கீழே விழுந்துவிடுகிறாள். இங்கே, அந்த சீனுக்கு ஏற்ப எப்படி வீணையை பயன்படுத்துகிறார் பாருங்கள். Sheer genius and master storyteller with his background score. You will see that he NEVER uses Veena with his Mridangam elsewhere in the movie, as far as I know. This is why Maestro Ilaiyaraaja is par excellent in his BGMs. முதன் முதலில் பார்வைகளிலாலேயே ஸ்பரிசத்தை உணரும் அந்த இளம் உள்ளங்களின் thrillக்கு ஏற்றாற்போல், இவரின் துள்ளல் இசையும், மிருதங்கத்தின் tempoவையும் கவனிக்க 🙂
  2. Track 2: இங்கு நாயகன் நாயகியை மெய்யாலுமே மெய்யால் ஸ்பரிசிக்கிறான் 🙂 கில்லாடி ரங்கா, கேடி பில்லா 😉 அங்கே காதல் ஹார்மோன்கள் புரண்டோடும் காதல் கசமுசாவுக்கு என்னமா பின்னியிருக்கார் பாருங்க. இங்கேயும் அதே மிருதங்கம் தான். ஆனால், மீண்டும் அந்த மிருதங்கத்தின் tempoவை கவனிக்க 🙂
  3. Track 3: இங்கே சோகம் ஆரம்பிக்கிறது. இணைவோம் என்று மகிழ்ந்த உள்ளங்களுக்கும் பிரிவு வரவிருப்பதை உணரும் சமயம், காதல் கூட கசக்க ஆரம்பிக்கிறதோ? கோபத்தில் ஒரு அடி கொடுத்துவிடுகிறான் அவன். அவளோ அடியின் வலியை விட, இவனை பிரிவதா என்று காதல் ஒரு புறமும், தாய்-தகப்பனின் பாசவலையில் சிக்குண்டு மறுபுறமும் திணறுவதால் ஏற்படும் வலியால் அழ, அங்கே அவளுக்கு அருமருந்தாக இருப்பது, இருவரும் சேர்ந்திருந்த இனிய நினைவுகளே. இங்கே மிருதங்கத்தின் மெல்லமாக செல்லும் tempoவை கவனித்தீர்களா? அதை விட Look at the amazing transformation Maestro Ilaiyaraaja uses at this juncture, where he quickly shifts into Santoor.
  4. Track 4: இங்கு மிஞ்சுவது வலி மட்டுமே! வயலின்களில் வலி ஆரம்பிக்க, மீண்டும் அதே மிருதங்கம், சோகக் காட்சிக்கு ஏற்றாற் போல மெல்ல வந்து செல்கிறது.

இப்படி, வெறும் ஒரு முக்கிய கருவியை வைத்து, காதல், கிளுகிளுப்பு, வலி, வேதனை, மங்கல நிகழ்வு என்று எல்லாவற்றையும் சொல்லிவிட்டார் பாருங்கள். 2.5 நிமிட இசை இசைத்து நிற்கும்போது, இசைஞானி இன்னிசை மழை நின்னு போச்சுன்னு வருத்தப்படாதீங்க. திரும்ப திரும்ப போட்டுக் கேளுங்க 🙂

Thanks for your continued support. Enjoy your day.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Both the Producer and Director of this movie are from Coimbatore. Out of the 2 villain actors, who did character-roles in this movie, 1 of them also took on a very different comedy role, which shocked everybody, who had never seen him in such a role with his amazing delivery of even well-delivered double-meaning dialogues 🙂 His explanation of Judo, Karate, and Kung-Fu was one of the best comedy sequences of yesteryear Tamil cinema 🙂

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Thooral Ninnu Pochu (BGM) (தூறல் நின்னு போச்சு (பின்னணி இசை)) from Thooral Ninnu Pochu (BGM) (தூறல் நின்னு போச்சு (பின்னணி இசை)) (1982)

Advertisements