Tags

, , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

நேற்று முட்டாள்கள் தினத்தை, 2 மணி நேரம் நமது புதிரில் அனுசரித்தோம். சிலாகித்து நிறைய பேர் பங்கு கொண்டீர்களே தவிர, யாரும் ஏமாறவில்லை. பரவாயில்லை. #365DevaQuiz யாராவது முன்னின்று நடத்தினால் நன்றாகத் தான் இருக்கும். போய் பாருங்கள். யாரெல்லாம் பதில் இட்டிருக்கிறார்கள் என்று தெரியவரும்🙂


சரி இன்று மேதைகள் தினம் என்று கொண்டாடலாமா?

படு வேகமான டூயட் பாடல்களை கேட்டதுண்டா?

இந்த படம் வந்த புதிதில் பட்டித்தொட்டி எல்லாம், குறிப்பாக, அனைத்து வானொலி நிலையங்களிலும் பரவலாக ஒலித்த பாடல் தான் இன்று வருவது.

இந்த படம் வெளிவந்த போது, இதுக்கும் உரிய craze அந்தக் காலத்தில் இருந்தது. ஆனால் சரியான டப்பா படம். இந்த படத்தின் நாயகி, எங்கள் அக்காவுக்கு மிகவும் பிடிக்கும். அந்த crazeஉம் கூடி வர, அடித்து பிடித்து படத்துக்கு போனால், சரியான அறுவை மட்டுமல்ல, படத்தில் சில காட்சிகளும் அவ்வளவு அமர்ந்து பார்க்கும் படி இல்லையென்றே நினைக்கிறேன். எங்கள் அப்பாவுக்கு செம கோபம் வந்துவிட்டது. அட ச்சை…இந்த படத்தை அதற்குப் பின் பார்க்காததால், எதற்கு அவர் அத்துணை கோபப்பட்டார் என்று மனம் பேதலிக்கிறது. கண்டிப்பா ஒரு தடவை பார்த்துடணும்😉

ஆனால், இந்த படத்தின் ஜோடி, அந்தக் காலத்தில் மிகவும் வரவேற்பைப் பெற்றிருந்த ஜோடி. பாடல்கள் அனைத்தும் இந்தப் படத்தில் கெட்டி. இந்தப் பாட்டை, கவிஞர் வைரமுத்து இயற்றி இருந்தார்.

Orchestrationக்காகவே மிகவும் பிரபலமடைந்த அந்தக் கால பாடல்களில் இதுவும் ஒன்று. ஆரம்ப துவக்க இசையே, செமையான congosல் சீறிக்கொண்டு வரும். இடையிசையில் இங்கே நீங்கள் கேட்பது போல வயலின்களில் இருந்து, தொடர்ந்து ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கும் bass-guitarல் இருந்து, மெதுவாக வரும் fluteல் இருந்து, பட்டையைக் கிளப்பும் கிடாரும் காங்கோஸ் டிரம்ஸும் தூள் கிளப்பிய பாடல் இது.

எங்கே கண்டுபிடியுங்கள் பார்போம். I am pretty sure, you may have listened to this song before. I will be shocked, if you are hearing it for the first time. Please indicate, as usual, if this is the first time, you are hearing it.

Have a nice day.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Pallavi of this song will be full of words ending in “ஆ” (”aah”) as though, they are raised as questions.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Maalai Sooda (மாலை சூட) from Kanne Raadha (கண்ணே ராதா) (1982)