Tags

, , , , , , , , , , , , , , , , , , , ,

அனைவருக்கும் வணக்கம்.

நேற்றைய breatherஐ நன்கு ரசித்து, ருசித்து எழுதியிருந்தீர்கள். நாளை பதித்துமுடித்தவுடன், தவறாமல் @RagavanG மற்றும் @MaestrosWorldன் பின்னூட்டங்களைப் பார்க்கவும். நேற்றைய பாடலுக்கு ரீமேக் பாடலின் வரிகளையும், படத்தின் பெயரையும் தந்துவிடுவது நல்லது. ஒரிஜினல் பாடலோடு மட்டும் நிறுத்திவிடாதீர்கள். மதிப்பெண் கிடைக்காது 🙂

இன்றைய பாடலை encode செய்யும்போதே ஒரு வித குற்ற உணர்வோடு தான் செய்தேன். காரணம் என்னவென்றால், இப்படி ஒரு பாடலை, எப்படி இந்தியாவில் இருந்த வரை கேட்டதே இல்லையே என்ற குற்ற உணர்வு. இந்த பாடலில் வரும் பல்லவியின் ஏற்ற இறக்கம், எனக்கு அலாதி பிரியம். கேட்டிருந்தால் நல்லது. கேட்காவிடில், இந்த பாடலை கேட்க முடிந்ததே என்று மகிழ்ச்சியடைய வேண்டியது தான்.

இதற்காகவே, பாடலின் முழு இசைத்தொகுப்பையும் பதித்து இருக்கிறேன். கேட்டு மகிழுங்கள்.

பாடலின் பல்லவி மட்டுமல்ல, பாடலின் சரணத்தில் வரும் இந்த இசையின் டச் — மூன்றே மூன்று நொடிகள் தான் என்றாலும், மோர் குழம்பில் மோர் மிளகாய் மாதிரி, செம நச்!

இந்த மூன்று நொடி sequenceஐத் தான், நேற்று கீச்சியிருந்தேன்….teaserஆக 🙂

பாடலின் முழு இசையும் கேட்கத் தயாரா? கண்ணை மூடிக்கொண்டு கேளுங்கள். அது உங்களை வேறு உலகுக்கு…இல்லை இல்லை… நீங்கள் நானெல்லாம், புழங்கிய அதே வயக்காட்டு தளங்களுக்குள்ளும், பச்சைபசேல் நிலப்பரப்புகளுக்குள்ளும் இந்த இசை இட்டுச்செல்லும்.

என்ன கொடுமைய்யா? எப்படி இந்த பாட்டெல்லாம், எதிலுமே கேட்காமவிட்டோம்னு நெனக்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு. விடை கண்டுபிடிக்கவேண்டி இதோ, additional clue. இது ஒரு வர்க்கப்போராட்ட பின்னணியை வைத்து நெய்யப்பட்ட கதை. Peasants are being exploited in a village under a cruel landlord. How the heroine really makes the hero (who at one point was more of a stooge and henchman for the villainous landlord) and all the people of the village realize the injustice and make them fight against injustice forms the rest of the story. I don’t know how much of that weighed in Raaja’s mind, for a soulful duet composition as this one. வயலின்கள், புல்லாங்குழல் (அடேங்கப்பா), சந்தூர், அட்டகாசமான தபேலா….

தெய்வீகம்.

சொல்வதற்கு ஒன்றும் இல்லை!

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.


Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Goundamani did the comedy track 😉 in this movie. Lyrics of this song has a notable uniqueness: There will be numerous “mani”(“மணி”) references, repeatedly throughout the song.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Arukamani Karukamani (அருகமணி கருகமணி) from Maapillai Vanthaachu (மாப்பிள்ளை வந்தாச்சு) (1992)

Advertisements