Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

உங்களை மாதிரி தான் நானும். இசைஞானியின் பாடல்கள், என் வாழ்க்கையின் அடையாளம். அனுபவித்து கேட்ட ஒவ்வொரு பாடலுக்கு பின்னும், பல உணர்வுகளும், நினைவுகளும், என்றும் அழியாமல் நம்மோடு சேர்ந்து வந்துக்கொண்டும் வளர்ந்துக்கொண்டும் இருக்கும்.

ஒவ்வொரு முறையும், நம் புதிரில் பாடல்களின் selection குறித்து வரும் சில பின்னூட்டங்களைப் பார்க்கும்போது தான், எனக்கே அது குறித்து யோசிக்கத் தோன்றும். 🙂

இன்று வரும் பாடல், என்னை வெகுவாக கவர்ந்த 218/365 பாடல் போன்று, சாதாரணமாக வந்த அருமையான slick shot!

இதோ 218/365.

அந்த பாட்டுல SPB கலக்கி அடித்தார். இன்றைய 239/365ல் கலக்கி அடித்திருப்பது வேறு யாரும் இல்லை. நம் தலைவர், இசைஞானி இளையராஜா தான்!

Maestro Ilaiyaraaja

218/365க்கும், இன்றைய 239/365க்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால், இவை இரண்டுமே நான் வானொலியில் கேட்டிராத பாடல்கள். இவை இரண்டுமே, இங்கு அமெரிக்காவுக்கு வந்த பின்னர், ஏதேச்சையாக (serendipitous find) நான் கண்டெடுத்த முத்துக்கள். இவை இரண்டு பாடல்களுமே, மிக, மிகச் சாதாரணமாக வந்த பாடல்கள். அதாவது, ஆகா-ஓகோ என்ற மாதிரி ஹிட் சாங் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. ஆனால், அமர்ந்து கேட்டால், அதில் இருக்கும் infectious quality of the orchestration and singing style will mesmerize anybody!

இரண்டு பாடல்களுமே, பலமுறை அட்லாண்டாவில் இருந்து வாஷிங்டன் டி.சிக்கு காரில் 10 மணி நேர பயணத்தின்போது ஏதெச்சையாக கேட்க, அந்த பயணம் முழுவதுமே repeatல் கேட்டு அன்று முதல் இன்று வரை, என்னுடைய மறக்கவே முடியாத பாடல்கள் லிஸ்டில் சேர்க்கப்பட்ட பாடல்கள் 🙂


முதலில் இடையிசையை பார்த்துவிடலாமா?

இதில் நீங்கள் கவனிக்கவேண்டியது என்னவென்றால், அந்த சாதாரண தபேலா வருகிறதே…அந்த டெம்போ தான் பாடல் முழுவதும் வரும். எத்துணையோ பாடல்களை அத்துணை அம்சமாக பாடியிருப்பார் இசைஞானி. ஆனால், இதில் ஒரு ரோமியோத்தனம் கலந்த குரலில், காதல் வடிய வடிய அவர் பாடியிருப்பது, one of the best என்று அடித்து சொல்வேன். இந்த பாடல் எப்படி வரும் என்று அவருக்கு முன்னமே தெரிந்திருந்ததால் தான் என்னவோ, இவரே பாடியும் இருக்கின்றார். சரணத்தில், இரண்டாம் பகுதியில் பாடும் அந்த ஸ்டைலை கவனியுங்கள். செம! பாட்டோட ஸ்பெஷாலிட்டியே, மெதுவாக பாடிக்கொண்டு போவது தான். பின்னியிருப்பார் இசைஞானி! 🙂

யாரது flutist? நம் அருண்மொழியா? என்னமா ஊதியிருக்கிறார் பாருங்கள். ஆரம்பத்தில் அட்டகாசமாக ஒலிக்கும் புல்லாங்குழலுக்கு ஏற்றவாறு கிடாரும், அதன் பின்னர் வரும் group violinsஉம், அதனுடன் பீடு நடை போடும் விதமாக, மீண்டும் flute. இந்த பாட்டை மட்டுமே இன்று முழுவதும் அசையாமல் கேட்க வேண்டும் என்றால் நான் ரெடி! அவ்வளவு பிடிக்குங்க.

இந்த பாட்டுல தொகையறா வேற உண்டு. கேக்கணுமா? பிச்சு உதறியிருப்பார் இசைஞானி. அங்கிருந்தே காதல் அணை உடைந்து ஓட ஆரம்பிக்கும். ஆனால் தொடக்க இசை, மிகச் சிறியது தான். ஆனால், அதில் ஒலிக்கும் சந்தூரும் அதில் வரும் புல்லாங்குழலும் இருக்கிறதே, top-class. இப்படியாக ஆரம்பிக்கும்போதே, நமக்கு புல்லரிக்க ஆரம்பித்துவிடும். There is no way, I can avoid horripilation at this juncture. Here it is:

என்ன சொல்லிடலாம் தானே?

Have a nice weekend.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.


Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Hero of this “more than 2 words titled” movie hails from Coimbatore.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Maanjolai Kili (மாஞ்சோலை கிளி இருக்கு) from Amman Kovil Thiruvizhaa (அம்மன் கோயில் திருவிழா) (1990)

Advertisements