Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம் நண்பர்களே.

வார கடைசி. இதுக்கு முன்னாடி, நம்ம @VRSaran மற்றும் @rmdevaவுக்கு வாழ்த்துகள் வச்சுடுவோம். 200ஐ தாண்டி நடைபோடும் இவர்களையும், இவர்களுக்கு முன் இந்த இலக்கை கடந்தவர்களையும், பின் தொடர்ந்து வரும் மற்றவர்களையும் பாராட்டவேண்டிய தருணம் இது.

வாழ்த்துகள் நண்பர்களே.


இன்று வரும் பாட்டு எனக்கு மிகவும் பிடித்த பாட்டு. சமீபத்துல, சில மாதங்களா, என்னுடைய புது CD Playerல வீட்ல பாடிக்கொண்டு இருக்கும் பாட்டு. உண்மையா சொல்லணும்னா, இந்த பாட்டை போட்டுகிட்டு கண்ணை மூடினா, அப்படியே ஒரு bliss நம்மை ஆட்கொள்வதை கண்டிப்பாக உணரலாம். The tintinnabulation part of the piece I have given is especially, very soothing. It is an amazing song. பல்லவியில, இந்த விருது வாங்கிய பாடகி, ஒரு வித உணர்ச்சியோடு பாடுவாங்க பாருங்க. ரொம்ப நல்லா இருக்குங்க. ….ஊஞ்சலாடியது…னு சொல்லும் அந்த இடத்துல, அவ்வளவு அருமையா இருக்கும்.

அதை விட இந்த பாட்டோட முதல் interlude இருக்கே…Class 🙂

So, what have I given today?

Today’s clue comprises two pieces woven together. One of them is a prelude and the other is an interlude. I won’t say, which order, they are woven together. No change in tempo; no noise-gate or reduction. Volume was maximized, during encoding.

இந்த படம் நம்ம புதிர்ல, பல நாட்கள் கழித்து டப்பிங் பட categoryல் நுழைகிறது 🙂 எந்த மொழின்னு சொல்லத்தான் நீங்க இருக்கீங்களே. நாம எதுக்கு அந்த சிரமம் எல்லாம் எடுத்துக்கணும் 🙂 நேற்று, சென்னை அமெரிக்கத் தூதரகம் இந்த செய்தியை முகநூலில் வெளியிட்டிருந்தது.

Water

இந்தப் பாட்டு வந்த படம் கூட தண்ணீரை மையமாக வைத்து வெளிவந்த ஒரு படம் தான். அதன் மூல வர்ஷன் நல்ல ஓட்டம் ஓடியதால், தமிழிலும் டப் செய்து வெளியிட்டார்கள்.

இந்த இசையில், டன் டன்என்று மணியடிக்கும் அந்த இசையை அவ்வளவு அழகாக இசைஞானி அளித்திருப்பார். புல்லாங்குழல் வரும் இடத்தில், lead மற்றும் bass guitarsன் அருமையான இசை, இந்த பாட்டின் மைய feelingஐ அட்டகாசமாக சிந்திவிடும். முதல் பகுதியில் வந்திருக்கும் புதிரின் இசையில் lead guitarsன் ஆரம்பத்தை கவனித்தீர்களா?

கண்டுபிடிக்க முடிகிறதா? இல்லை என்றால், இதை repeatedஆக கேட்டுக்கொண்டிருங்கள். ஒரு sufi தியானத்துக்கு போய் வந்த மாதிரி இருக்கும்.

வேற என்ன விசேஷங்க? இன்னிக்கு வெள்ளிக்கிழமை வேற. படங்க ரிலீஸ் ஆகற நாள் ஆச்சே. நம்ம இசைஞானி படம் ஒன்னு வேற இன்னிக்கு ரிலீஸ் ஆகுது. டிசம்பர் மாசம் நீ தானே என் பொன்வசந்தம் பார்த்த ஞாபகம் தான் வருது. அந்த படத்தை கௌதம் கவுத்திட்டாருன்னு நிறைய பேர் சொன்னாங்க. மறப்போம், மன்னிப்போம். அத சொல்ற மாதிரியே, இன்னிக்கு ரிலீஸ் ஆகுற படத்தின் பேரும் இருக்கு. இந்த @IlaiyaraajaFans தவறாம இதை எல்லாம் கீச்சிடுவாரு. படத்தின் பாடல்கள் எப்படியாம்? கேட்டீங்களா? எது எப்படியோ, படம் நல்லா ஒடணும்னு உங்க சார்பா வாழ்த்திட்டு, இந்த வார இறுதி, இனிய வாரக்கடைசியாக அமைய வாழ்த்துறேன்.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Widget problems? Please try direct link here.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Although a National Award Winner and appreciated by the Maestro Ilaiyaraaja himself for her unique voice, he did not give her too many songs as he did to other female singers. There are many youth fans for the heroine of this movie, who shot into fame for her appearance in another Tamil film, that roped in 6 National Film Awards. This 2-word titled movie has both the words that starts with the same letter (say “X”) and ends with another same letter (say “Y”) and those 2 letters are neighboring letters in the English alphabet (like X and Y) #Riddle #LifeLine.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Alayodu Alai Modhi (அலையோடு அலை மோதி) from Maranthen Mannithen (மறந்தேன் மன்னித்தேன்) (2013)

Advertisements